For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்ல கணவன் மனைவி சண்டையை தீர்த்து வைக்கும் அபூர்வ மரத்தோட பேர் தெரியுமா?

வெப்பாலை மரத்தின் நன்மைகளை இந்த கட்டுரையில் காணலாம்.

By Gnaana
|

வறண்ட பாலைவனப் பிரதேசங்களில் வளரும் வெப்பாலை மரம், பாலை நிலத்தில், மற்றும் நிலப்பகுதிகளில் வளரும் மரம் செடி கொடிகள்கூட வாடி, கருகும் கடும் கோடைக்காலத்திலும், இயற்கையின் கருணையால், இலைகள் தளிர்த்து, பூக்கள் மலரும் அதிசய மரமாகத் திகழ்கிறது. தமிழகத்தின் சில திருக்கோவில்களில் தல மரமாகத் திகழும் அரிய மரம், வெப்பாலை மரம்.

சற்றே நீளமான இலைகளுடன், கொத்தாக மலரும் வெளிர்வண்ணப் பூக்களுடன், இதன் காய்கள் நீண்டு, இரட்டையாகக் காய்த்துக் குலுங்கும். இதன் மரப்பட்டைகளை வெட்டினால், நீர்ச்சத்து மிக்க பால் பீறிடும், இதனாலே, இந்த மரத்தின் பட்டைகளை, யானைகள் தந்தத்தால் உரித்து, இதன் பாலைப் பருகும் என்பர். யானை உரித்த பட்டைகளைக் கொண்டதாலோ என்னவோ, இதன் பட்டை உரிந்த தண்டுகள், இள வெண்ணிறத்தில், தந்தங்கள் போன்றே, காணப்படும். இதனால், தந்தப் பாலை என்றும் வெப்பாலை மரத்தை அழைப்பர்.

வெப்பாலை மரத்தின் நன்மைகள்,

தமிழகத்தில், இரும்பாலை, நிலப்பாலை என்று அழைக்கப்படும் வெப்பாலை, சாலையோரங்களில், குறுங்காடுகள் மற்றும் மலைகளில் பரவலாகக் காணப்படும். வெப்பாலை மரத்தின் இலைகள், பூ, காய்கள், பட்டை போன்ற அனைத்து பாகங்களும், மனிதர்களுக்கு, நற்பலன்கள் தரவல்லவை.

வெப்பாலையின் குணாதிசயமாக, உடல் சூட்டையும் அதனால் ஏற்படும் வியாதிகளையும் தணிக்கக்கூடியது. இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் கரைத்து, இதயத்தைக் காக்கக்கூடியது, வியர்வையை அதிகரித்து, சரும வியாதிகள், மூல வியாதிகளைப் போக்கக்கூடியது. வயிற்றில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்து, முக்குற்றங்கள் எனும் வாதம், பித்தம் மற்றும் கபம் இவற்றை சமநிலையில் இருத்தி, உடல் ஆரோக்கியத்தை சீராக்கும் வல்லமை மிக்கது, வெப்பாலை.

வெப்பாலையில் காணப்படும் வேதிப்போருட்களான சைக்ளோஆர்டேன், பீடா சிடோஸ்டெரால், பீடா அமிரின் மற்றும் தாதுக்கள், அமிலங்கள், உடலில் ஏற்படும் வியாதிகளைத் தணித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing benefits of Wrightia Tinctoria.

Amazing benefits of Wrightia Tinctoria.
Story first published: Monday, November 27, 2017, 15:18 [IST]
Desktop Bottom Promotion