சைனஸை எப்படி வீட்டிலயே எளிதாக சரிப்படுத்தலாம்?

Written By:
Subscribe to Boldsky

சைனஸ் முகத்தின் உள்ளேயிருக்கும் அறைகளில் நீர் அல்லது கிருமிகள் நுழைந்துவிட்டால் அத அறைகள் மூடி வீக்கத்தை உண்டாக்கும்.

எனவே முகத்தின் கன்னப்பகுதிகளில் மூக்கு நெற்றி ஆகிய இடங்களில் நீர் தங்கி வலியை உண்டாக்கும்.

How to cure sinusitis

இதனால் தலை பாரம் உண்டாகி, தலைவலி, மூக்கடைப்பு என்று அவதிப்படுவார்கள். அவ்வாறு சைனஸ் வந்தால் எப்படி உங்களை வீட்டில் பாதுகாக்கலாம் என பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாசனை எண்ணெய் :

வாசனை எண்ணெய் :

தேவையானவை :

யூக்கலிப்டஸ் எண்ணெய் - 4 துளிகள்

லாவெண்டர் எண்ணெய் - 4 துளிகள்

எலுமிச்சை எண்ணெய் - 4 துளிகள்

இந்த எண்ணெய்களை நன்றாக கலந்து விரல்களால் எடுத்து, மூக்கு, பின்கழுத்து நெற்றி ஆகிய பகுதிகள் தடவி மூக்கின் நன்றாக அதன் வாசனையை சுவாசியுங்கள். பின் இதமாக மசாஜ் செய்தால் நீர் விலகிவிடும்.

ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைடர் வினிகர் :

2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடித்தால் நல்ல பலன் தெரியும். தினமும் ஒருமுறை குடித்துப் பாருங்கள்.

ஹெர்பல் தேநீர் :

ஹெர்பல் தேநீர் :

மிளகுப் பொடி - அரை ஸ்பூன்

தேன் - 2 ஸ்பூன்

எலுமிச்சை - கால் துண்டு

சூடான நீர் - 1 டம்ளர்

வெதுவெதுப்பான நீரில் மேலே சொன்னவற்றையெல்லாம் கலந்து மெல்ல பருகுங்கள். தினமும் இருமுறை குடிக்கவும்.

சுக்கு தேநீர் :

சுக்கு தேநீர் :

சுக்கை கொண்டு செய்யப்படும் தே நீரை குடித்தால் தலை கழுத்து முகத்தில் கட்டியிருக்கும் நீர் விடுபடும். விரைவில் நிவாரணம் கிடைக்கும். தலை பாரம் மறைந்து போகும்.

ஆயில் புல்லிங்க் :

ஆயில் புல்லிங்க் :

தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங்க் செய்தால் சைனஸ் சுத்தமாகிவிடும். தினமும் வெறும் வயிற்றில் தொடர்ந்து செய்து வந்தால் சைனஸ் குணமாகிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to cure sinusitis

5 natural easy remedies to get relief from sinusitis.
Story first published: Saturday, November 12, 2016, 12:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter