ஐந்து மூலிகைகள், உங்களை புத்துணர்ச்சியுடன் நடமாட வைக்கும்

Written By: Hemalatha
Subscribe to Boldsky

இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு, முன்னேற நினைக்கிறோம். பொருளாதார நிலைமையை முன்னேற வைப்பதே நிஜமான முன்னேற்றம் என்று கணக்கு போடுகிறோம். விளைவு மன அழுத்தம், உடல் பிரச்சனை என ஒன்றன்பின் ஒன்றாக வரழைத்துக் கொள்கிறோம்.

தேவையில்லாமல் எரிந்து விழுவது, அடிக்கடி காரணமேயில்லாமல் கோபப்படுவது, எப்போதும் சோர்வாக இருப்பது, எளிதில் ஈடுபாடில்லாமல் இருப்பது, சரியாக தூங்காமல் இருப்பது, எப்போதும் குழப்பமான மன நிலை இவையெல்லாம் இருந்தால், நீங்கள் மன அழுத்தத்தில் தள்ளப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

Herbs help you out to get relief from your stress

அதேபோல், இவை தொடர்ந்து உடலிலும் பாதிப்புகளை உண்டாக்கும், மூச்சு விடுவதில் சிரமம், இதய கோளாறுகள், தலைவலி, நடுக்கம் ஆகியவைகளைக் கூறலாம். தனால் இரத்தக் கொதிப்பும் வரும் என ஆய்வு கூறுகின்றது.

இந்த மன அழுத்த பிரச்சனையை கையாள யோகா,மனநல தெரபி என பல வழிகள் வந்துவிட்டன. அவற்றிற்கு போக நேரமில்லையென்றாலும் எளிதில் மன அழுத்தத்திலிருந்து விடுபட நம் வீட்டில் இருக்கும் மூலிகைகள் உதவுகிறது. அவை என்னென்ன என்று பார்ப்போம்.

துளசி :

துளசி எளிதில் கிடைக்கக் கூடியது. நீண்ட காலமாகவே நம் கலாச்சாரத்தில் துளசி இடம் பெற்றுள்ளது. துளசி எதிர்மறை எண்ணங்களை போக்கும். நேர்மறை சக்தியை கொடுக்கும் என சமீப ஆய்வுகள் நிறைய எடுத்துரைக்கின்றன.

துளசியை 4 இலைகள் எடுத்து நீரில் கலந்து தினமும் குடிக்கலாம். கோவிலில் இவ்வாறு தருவதை பார்த்திருப்பீர்கள். இது மன அழுத்ததை குறைக்கும்.

துளசியை பச்சையாகவும் மென்று சாப்பிடலாம். தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். நாளடைவில் உங்கள் உடலில் முன்னேற்றம் அடைவதை கண்கூடாக காண்பீர்கள்.

Herbs help you out to get relief from your stress

சீமை சாமந்தி :

சீமை சாமந்தி மன அழுத்தத்தை போக்கும் மிக முக்கியமான மூலிகை. இது பல ஆய்வுகளில் நிரூபிக்கப் பட்டுள்ளது. கொதித்த சுடு நீரில் காய்ந்த சீமை சாமந்தி பூக்களை போட்டு மூடி வைக்கவும். ஆறியவுடன் வடிகட்டி அதனை தினமும் குடிக்கலாம். இது நன்றாக தூக்கத்தை கொடுக்கும். மன அமைதியைத் தரும்.

Herbs help you out to get relief from your stress

அஷ்வகந்தா :

அஷ்வகந்தா அருமையான ஆயுர்வேத மருந்தாகும். இந்த மூலிகைச் செடி உடலுக்கு வலுவூட்டும் என்பது மட்டுமல்ல, மன அழுத்தத்தை தீர்க்கும் மருந்தாகவும் செயல் படுகிறது.

நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்கிறது. அஷ்வகந்தா சூரணம் நாட்டு மருந்துகளில் கிடைக்கும். அதன் பொடியை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், மனம் ரிலாக்ஸாய் உணர்வீர்கள்.

Herbs help you out to get relief from your stress

சிமிக்கிப் பூ :

சிமிக்கி பூ நன்றாக தூக்கத்தை தரக் கூடியது. மனதில் எற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. நிம்மதியான தூக்கம் கிடைக்கச் செய்யும். இதில் தேநீர் தயாரித்து குடிப்பது நல்ல பலன்களைத் தரும்.

காய்ந்த சிமிக்கிப் பூவினை நீர்ல் போட்டு கொதிக்கச் செய்யவும். 10 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து நீரினை வடிகட்டி வெதுவெதுப்பாக தினமும் இரவில் தூங்குவதற்கு முன் குடியுங்கள். நல்ல மாற்றங்கள் உருவாகும்.

Herbs help you out to get relief from your stress

லாவண்டர் :

லாவெண்டரின் நறுமணம் நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தை தளர்த்துகிறது. ஒருவித மன அமைத்தியை தரும். லாவெண்டர் எண்ணெய் கடைகளில் கிடைக்கும். அதனை சுடு நீரில் சில சொட்டுகள் ஊற்றி ஆவி பிடித்தால் நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.

அல்லது காய்ந்த இலைகளைக் கொண்டு தேநீர் தயாரித்து அதனை குடித்தாலும் நல்ல பலன்களைத் தரும்.

Herbs help you out to get relief from your stress

மேற்கூறிய அனைத்துமே உங்கள் மன அழுத்தத்தை குறைப்பதற்காக சொல்லப்படும் குறிப்புதான். இதை தவிர்த்து, உங்கள் மன நிலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது.

நல்ல இனிமையான பாடல்களைக் கேளுங்கள். பிரச்சனைகளை எப்போதும் மூளைக்குள்ளே வைத்துக் கொள்ளாதீர்கள்.எடுத்து தள்ளி வைத்தால்தான், தீர்வுகள் கிடைக்கும். மன அழுத்தமும் வராமல் ஆரோக்கியமான மன நிலை பெறலாம்.

Subscribe Newsletter