Latest Updates
-
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
சம்மரில் உங்க இரத்த சர்க்கரை அளவு அதிகரிச்சி ஆபத்தான நிலைக்கு போகாமல் இருக்க... தினமும் இத பண்ணுங்க!
இன்றைய நாளில் வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. சர்க்கரை நோய் இல்லாத குடும்பங்களே இல்லை எனலாம் என்ற அளவிற்கு, நாளுக்கு நாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நாள்பட்ட நோய் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளை ஏற்படுத்தக்கூடும்.
நம் உடல் நாம் உண்ணும் உணவை சர்க்கரை அல்லது குளுக்கோஸாக மாற்றுகிறது. அதே நேரத்தில், கணையம் இன்சுலினை வெளியிடுகிறது. நமது உடல்களை ஆற்றலுக்காக இந்த குளுக்கோஸைப் பயன்படுத்த உதவுகிறது. ஒரு நபரின் உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யத் தவறும் போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

வகை 1 நீரிழிவு நோய் (உங்கள் உடலில் இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாதபோது) மற்றும் வகை 2 நீரிழிவு நோய் (உங்கள் உடல் இன்சுலின் எதிர்ப்பை அடையும் போது) என நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. அதிக தாகம், தொற்று நோய்கள், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பார்வை மங்குதல் போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் அறிகுறிகள். இதன் விளைவாக, நீங்கள் கோடை முழுவதும் நீரேற்றமாக இருப்பதும் ஆரோக்கியமாக இருப்பதும் மிகவும் முக்கியம்,
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
நார்ச்சத்து நிறைந்த உணவோடு உங்கள் நாளைத் தொடங்குவது மிகவும் நல்லது. ஏனெனில், இந்த சத்துள்ள காலை உணவு இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் வெளியீட்டைக் குறைப்பதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அதிகரிப்பதை தடுக்கிறது. கூடுதலாக, நார்ச்சத்து நிறைந்த காலை உணவு பசி உணர்வை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ், முட்டை மற்றும் வாழைப்பழங்களை உங்கள் காலை உணவாக தேர்வு செய்யவும். சர்க்கரை நிறைந்த பழ தானியங்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவற்றில் சர்க்கரை அதிகமாக இருக்கும். உங்கள் காலை உணவில் குறைந்த கார்ப் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களைச் சேர்ப்பது நல்லது.
நீரேற்றமாக இருங்கள்
கோடையில், ஒவ்வொரு நபரும் நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியம். உங்களுக்கு நீரிழப்பு இருந்தால், நீங்கள் பலவீனமாக உணரலாம். நீரிழிவு நோயாளிகள், அதிக நீரிழப்பு அபாயத்திற்கு ஆளாகலாம். குறைந்த இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும், அதிகப்படியான சர்க்கரை மற்றும் நச்சுகளை இரத்த ஓட்டத்தில் இருந்து வெளியேற்றவும், நீரிழிவு நோயாளிகள் கோடையில் ஆரோக்கியமான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.
மாம்பழங்களை அளவோடு உட்கொள்ள வேண்டும்
கோடையில் எப்போதும் மாம்பழ சீசன் தொடங்கிவிடும். மாம்பழங்களில் நார்ச்சத்து, பெக்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலில் சீரம் கொழுப்பின் அளவைக் குறைக்கும். இருப்பினும், மாம்பழங்களில் அதிக சர்க்கரை இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் அவற்றை எப்போதும் அளவாக உட்கொள்ள வேண்டும். இந்த பழத்திலுள்ள இயற்கையான சர்க்கரை, உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஆதலால், ஒரு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மாம்பழத்தை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டும்
இனிப்பு பழச்சாறுகள் குடிப்பதை தவிர்க்கவும்
கோடையில் நாம் அனைவரும் குளிர்ந்த பழச்சாறுகளை குடிக்க விரும்புவோம். இவை கோடையின் வெப்பத்தை தணிக்க உதவும் என்றபோதிலும், பழச்சாறுகளில் நார்ச்சத்து அதிகம் இல்லை மற்றும் இயற்கை சர்க்கரையும் அதிகமாக இருக்கிறது. ஆதலால், நீரிழிவு நோயாளிகள் பழச்சாறுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் ஜூஸ் குடிக்க வேண்டும் என்று விரும்பினால், புதிய பழங்களை கொண்டு வீட்டிலேயே ஜூஸ் தயாரித்து சர்க்கரை சேர்க்காமல் அருந்தலாம். பாக்கெட்டுகளில் தொகுக்கப்பட்ட பழச்சாறுகளை முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
உங்கள் உணவை கலக்கவும்
ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான உணவை சாப்பிடுவதை விட, அதை மாற்ற வேண்டும். இதனால் உங்கள் உடல் உறிஞ்சுவதற்கு அதிக நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் கிடைக்கும். மாலை நேரங்களில் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிக்கு பதிலாக வெள்ளரிக்காய் துண்டுகள் அல்லது தர்பூசணி துண்டுகளை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்.
90% பழங்கள் தண்ணீரால் ஆனது என்பதால், அவை பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு அளிக்கின்றன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், போதுமான திரவங்களை குடிப்பது அவசியம். இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது மற்றும் இயற்கையாகவே உடலை குளிர்விக்க உதவும் உணவுகளை சாப்பிடுவது அவசியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



