Latest Updates
-
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
ஆபத்தான பெருங்குடல் புற்றுநோய் உங்களுக்கு வராமல் தடுக்க... நீங்க இந்த விஷயங்கள ஃபாலோ பண்ணா போதுமாம்!
உலக மக்களிடையே அதிகரித்து வரும் ஒரு ஆபத்து காரணியாக புற்றுநோய் இருக்கிறது. பல்வேறு புற்றுநோய்களால் ஏற்படும் இறப்பு உலகளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெரும்பாலான மக்களுக்கு வரும் முக்கிய புற்றுநோயாக பெருங்குடல் புற்றுநோய் இருக்கிறது. இது பெருங்குடலில் உருவாகி செரிமான மண்டலத்தில் முடிவடைகிறது.
இது பெருங்குடல் புற்றுநோய் அல்லது மலக்குடல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. பெருங்குடல் புற்றுநோய் பொதுவாக வயதானவர்களை அதிகம் பாதிக்கிறது. இருப்பினும், இது எந்த வயதினரையும் பாதிக்க வாய்ப்புள்ளது. பெருங்குடலின் உட்புறத்தில் உருவாகும் சிறிய, புற்றுநோயற்ற உயிரணுக்களான பாலிப்கள், காலப்போக்கில் பெருங்குடல் புற்றுநோயாக உருவாகிறது.

தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கலாம். வயது மற்றும் குடும்ப வரலாறு உள்ளிட்ட சில ஆபத்து காரணிகள் தவிர்க்க முடியாதவை என்றாலும், ஆரம்பகால பரிசோதனை மற்றும் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் எடையை நிர்வகித்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் பெருங்குடல் புற்றுநோய் உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கலாம். இக்கட்டுரையில் பெருங்குடல் புற்றுநோய் உருவாவதை எவ்வாறு தடுக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஸ்கிரீனிங் பரிசோதனை செய்ய வேண்டும்
பெருங்குடல் புற்றுநோயைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி,சரியான வயதில் ஸ்கிரீனிங் செய்து பார்ப்பது. நாம் ஒவ்வொருவரும் 45 வயதிற்குப் பிறகு வழக்கமான ஸ்கிரீனிங் பரிசோதனை செய்ய வேண்டும். இது புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும். மேலும், இதற்கான சிகிச்சை மேற்கொண்டு குணப்படுத்தலாம். புற்றுநோயாக உருவாகக்கூடிய பாலிப்ஸ் எனப்படும் அசாதாரண வளர்ச்சியைக் கண்டறிவது நோயைத் தவிர்க்க உதவும்.
பெருங்குடல் புற்றுநோயை ஸ்கிரீனிங் செய்வது எளிது. இதில் கொலோனோஸ்கோபி, நெகிழ்வான சிக்மாய்டோஸ்கோபி, CT காலனோகிராபி மற்றும் ஸ்டூல் டெஸ்ட் ஆகியவை அடங்கும். இருப்பினும், இந்த பரிசோதனை அடிக்கடி நடத்தப்பட வேண்டும். நோயாளியின் மருத்துவ வரலாறு அல்லது பிற ஆபத்து காரணிகளை அடிப்படையாகக் கொண்டும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படலாம்.
புகைபிடிப்பதை நிறுத்துங்கள்
தொடர்ந்து அல்லது வழக்கமாக புகைப்பிடிப்பவர்களுக்கு பெருங்குடல் அல்லது மலக்குடல் புற்றுநோய் உருவாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. புகைபிடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது புகைபிடிப்பவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
பெருங்குடல் புற்றுநோய் அபாயம் அதிகமாக சிகரெட் புகைத்தல் மற்றும் கால அளவு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஆதலால், புற்றுநோய் உருவாகும் வாய்ப்பைக் குறைக்க நீங்கள் புகைபிடிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.
மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்
பெருங்குடல் புற்றுநோயின் அதிக ஆபத்து மது அருந்துவதோடு தொடர்புடையதாகவும் இருக்கிறது. மது அருந்துவதை கைவிடுவதன் மூலம் பெருங்குடல் புற்றுநோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்கலாம். ஆல்கஹால் உட்கொள்ளலை ஆண்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு பானங்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு பானத்திற்கு மேல் குடிக்க வேண்டாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆரோக்கியமான எடையை நிர்வகிக்கவும்
அதிக எடை அல்லது பருமனானவர்களை பெருங்குடல் புற்றுநோய் அதிகம் பாதிக்கிறது. மேலும், ஆண்களின் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) அதிகமாக இருக்கும்போது பெண்களை விட பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்க்கான ஆபத்து அதிகம் உள்ளது. ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும், அதிக உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமும் உங்கள் எடையைக் கட்டுப்படுத்தலாம்.
ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் அதிகம் உள்ள ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது, பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறையத் தொடங்கும். கூடுதலாக, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் ஆட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சியை தவிர்க்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் அவை பெருங்குடல் புற்றுநோயின் அதிக ஆபத்துடன் தொடர்புடையவை.
வழக்கமான உடல் செயல்பாடு
நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாவிட்டால், பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, உங்கள் உடல் வலிமையை அதிகரிப்பது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைத்து, உங்கள் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் பாதிப்பு ஏற்படாமலும் தடுக்க உதவும்.
ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால், வாரத்தில் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். ஏனெனில் இது உங்கள் எடையைக் கட்டுப்படுத்த உதவும். மேலும், வாரத்திற்கு 150 நிமிடங்கள் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவது நன்மை பயக்கும். இந்த ஆரோக்கியமான பழக்கங்கள் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

