For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி உங்களுக்கும் இருக்கா? இந்த பழத்த சாப்பிடுங்க... சீக்கிரம் சரியாகிடும்...

|

பட்சர் புரூம் என்னும் இலையடி பழச்செடி, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட புதர் செடியாகும். இரண்டிலிருந்து மூன்றடி உயரம் வரை வளரக்கூடிய இதன் பழங்கள் பிரகாசமாக சிவப்பு நிறத்தில் காணப்படும்.

தண்டுகள், தட்டையாக கரும்பச்சை நிற இலைபோன்று காட்சியளிக்கும். பட்சர் புரூம் பல மருத்துவ குணங்கள் கொண்ட தாவரமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயன்கள்

பயன்கள்

சிறுநீரை பிரிப்பதற்கு, மலமிளக்கியாக, இரத்த ஓட்டத்தை குறைபாட்டை சீராக்குவதற்கு மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு பட்சர் புரூம் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர் அதிக மருத்துவ பண்புகள் கொண்டது.

MOST READ: கார்பைடு கல் வைத்து பழுக்காத நல்ல மாம்பழங்களை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?

சிறுநீர் மற்றும் மலம் வெளியேற

சிறுநீர் மற்றும் மலம் வெளியேற

உடலில் அதிகப்படியாக இருக்கும் நீரை பிரித்து வெளியேற்றவும், உணவு மண்டல இயக்கத்தை சீராக பராமரிப்பதற்காக கழிவுகளை வெளியேற்றவும் புட்சர் புரூம் மருந்தாக செயல்படுகிறது.

நரம்பு சிலந்தி மற்றும் வீக்கங்கள் குணமாக

நரம்பு சிலந்தி மற்றும் வீக்கங்கள் குணமாக

வெரிகோஸ் வெயின் என்னும் நரம்பு சிலந்தி மற்றும் கால்களில் வீக்கங்களால் அவதிப்படுவோருக்கு இது அருமருந்தாக விளங்குகிறது. தனியாக மற்றும் வைட்டமி சி அல்லது ஹெஸ்பரிடின் என்னும் பயோஃபிளவினாய்டு உடன் பட்சர் புரூமை எடுத்துக்கொண்டால் வலி, வீக்கம், இறுக்கம், அரிப்பு மற்றும் கால்களில் கனமாக உணருதல் போன்ற உடல் உபாதைகளிலிருந்து குணம் கிடைக்கும் என்பதற்கு அறிவியல் பூர்வமான பின்புலம் உள்ளது.

MOST READ: மெட்ரோவுல போயி இந்த ஆளு பார்த்த வேலய பாருங்க... எங்க இருந்துடா வர்றீங்க...

புற்றுநோய் சிகிச்சை

புற்றுநோய் சிகிச்சை

முன்பக்க கைகளில் குறிப்பாக மார்பக புற்றுநோய்க்கான ஹீமோதெரபி என்னும் வேதிய சிகிச்சை பெற்ற பின் ஏற்படும் வீக்கத்திற்கு இது மருந்தாக பயன்படுகிறது. இதை இன்னும் ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டும்.

மலக்குடல்

மலக்குடல்

மலக்குடலின் அடிப்பகுதியில் ஏற்படும் வீக்கம், நோய் தொற்று போன்ற ஆரோக்கிய குறைபாடுகளை குணப்படுத்த இது உதவுகிறது. கண்களின் அடிப்பகுதியில் ஏற்படும் கருவளையத்தை குறைக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. கண்களுக்கு அடியில் தோலிலுள்ள துளைகளை சுத்தப் படுத்துவதால், சரும பாதிப்பை இது குறைக்கிறது என்றும் நம்பப்படுகிறது.

எப்படி கிடைக்கின்றன?

எப்படி கிடைக்கின்றன?

பட்சர் புரூமிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் பொடி, காப்ஸ்யூல் என்னும் குளிகை, திரவமாகிய சாறு மற்றும் பூசக்கூடிய கிரீம் என்று பலவிதங்களில் கிடைக்கிறது. இந்த தயாரிப்புகள் இன்னும் முறைப்படுத்தப்படவில்லை. ஆகவே, நம்பிக்கையான கடைகளில் மட்டும் இவற்றை வாங்கலாம். உடல் நல குறைபாடுக்கு ஏற்ப, உரிய அளவில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

MOST READ: இது நெஜமாவே பேயாம்... அந்த கண்ணாடியில இருக்கற திகில் உருவத்த நல்லா பாருங்க...

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

இதை எடுத்துக்கொண்டதால், சிறிதளவு வயிற்று வலி ஏற்பட்டதாக ஒரு சிலர் கூறுவதை தவிர வேறு எதுவும் பக்கவிளைவுகள் இதுவரை அறியப்படவில்லை. நீரிழிவு பாதிப்புள்ள சிலருக்கு மட்டும் புட்சர் புரூம் சிகிச்சையை ஆரம்பித்த பின்னர் நச்சுத்தன்மை தாக்கம் ஏற்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து விரிவான ஆய்வுகள் இன்னும் செய்யப்படவில்லை. ஆனாலும், பட்சர் புரூம் சார்ந்த மருந்துகளை உண்ணும் முன்னதாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: cancer
English summary

Butcher’s Broom: Uses and Side Effects

Butcher’s broom is a shrub with rigid flattened stems that resemble leaves, which are called cladophylls. The plant grows up to 30 cm tall. The plant produces tiny greenish white flowers during late winter and spring. The flowers develop on the cladophylls, which turn into red berries. This plant is quite similar to the edible asparagus plant.
Story first published: Wednesday, May 15, 2019, 13:55 [IST]