For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் இந்த மூலிகை உங்களை நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்

|

இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் பல அற்புத பரிசுகளில் முக்கியமானவை மூலிகைகள். ஒவ்வொரு மூலிகையும் நமக்கு ஒவ்வொரு பலன்களை வழங்கவல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மூலிகைகள் அவசியமானவை. ஆனால் நாம் செயற்கை மருந்துகளான மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இயற்கையின் மீது வைப்பதில்லை. இயற்கையை மதிக்காததற்கு நாம் கொடுக்கும் விலைதான் நாம் இழக்கும் நமது ஆரோக்கியமும் அதற்காக செலவழிக்கும் அளவில்லா பணமும்.

Health benefits of purslane

குறிப்பாக நம் இந்தியா பல அதிசய மூலிகைகளின் பிறப்பிடமாக விளங்குகிறது. ஆனால் அந்த அற்புத மூலிகைகளை நாம் வெறும் சாதாரண சாலையோர செடிகளாக மட்டுமே நினைக்கிறோம். அப்படி நாம் அலட்சியமாக நினைத்து பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்திருக்கும் ஒரு செடிதான் பார்சலின் என்னும் கங்காவள்ளி. நீங்கள் அறியாத இந்த மூலிகையின் ஆரோக்கிய பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கங்காவள்ளி

கங்காவள்ளி

கீரை வகையை சேர்ந்த இந்த கங்காவள்ளி சுவையான அதேசமயம் ஆரோக்கியமான ஒரு பொருளாகும். குறிப்பாக இது குழந்தைகளுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடிய ஒன்றாகும். இந்த பச்சை மூலிகையில் அதிகளவு ஒமேகா 3 அமிலம் உள்ளது மேலும் நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற மிகமுக்கியமான சத்துக்கள் உள்ளது. இதனை பொதுவாக பருப்புக்கீரை என்று அழைப்பார்கள். இந்த சத்துக்கள் உங்களுக்கு அளிக்கும் பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கங்காவள்ளியில் உள்ள ஒமேகா 3 அமிலம் உங்கள் உடலில் உள்ள LDL என்னும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது இதய ஆரோக்கியத்திற்கு அவசியமான நல்ல கொழுப்புகளை உருவாக்குகிறது. ஒமேகா 3 அமிலம் அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வது மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும் என்பது நிருபிக்கப்பட்ட ஒன்று. மேலும் இது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

எடை குறைப்பு

எடை குறைப்பு

ஆராய்ச்சிகளின் படி உங்கள் கங்கா வள்ளியில் மிகக்குறைந்த அளவு கலோரிகளே உள்ளது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் இதனை உங்கள் உணவில் நிச்சயம் இடம்பெற வேண்டிய ஒரு முக்கிய பொருளாக மாற்றியுள்ளது. இதன்படி இதை உணவில் சேர்த்துக்கொண்டால் உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு பசியெடுக்காது. இதனால் உங்கள் உடலில் கலோரிகள் அதிகரிப்பது குறைக்கப்படுகிறது. இதனால் உங்கள் எடை சீராக பராமரிக்கப்படுகிறது.

குழந்தைகள் வளர்ச்சி

குழந்தைகள் வளர்ச்சி

பார்சலினில் நல்ல கொழுப்பு அமிலமான ஒமேகா 3 அமிலம் போதுமான அளவில் உள்ளது. இதன் மீது நடத்தப்பட்ட ஆய்வில் ஒமேகா 3 அமிலத்தை குழந்தைகளின் உணவில் சேர்ப்பது அவர்களுக்கு வளர்ச்சி குறைபாடுகள் ஏற்படுவதை தடுக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதனை உணவில் சேர்த்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு ஆகும்.

MOST READ: தப்பு பண்ணலாம்... ஆனா, இந்த அளவுக்கு எல்லாம் பண்ணக் கூடாது - # Funny Photos

குடல்நோய்கள்

குடல்நோய்கள்

வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால் நாம் முதலில் நாடுவது மாத்திரைகளையும், ஊசிகளையும்தான். ஆனால் இன்றும் சீனாவில் வயிற்றுப்போக்கு மற்றும் மற்ற குடல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தபட்டு வரும் பரமபரிய மருத்துவ பொருள் பார்சலின்தான். இதனை சீன மொழியில் மா ச்சி க்சியன் என்று அழைக்கிறார்கள். இதில் மலிடிக் அமிலம், சிட்ரிக் அமிலம், அலனைன் போன்றவை அனைத்துவிதமான குடல் நோய்களையும் குணமாக்கக்கூடும்.

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

இது உங்கள் சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கக்கூடிய ஒன்று. இதன் இலைகளில் அதிகளவு வைட்டமின் ஏ உள்ளது. இதன் மூலம் இது பூச்சிக்கடிகள் மற்றும் பாம்புக்கடி போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக செயல்படக்கூடும். மேலும் சரும பொலிவு, சுருக்கங்களை விரட்டுதல், சிதைந்த செல்களை வெளியேற்றுதல் போன்ற செயல்களை செய்யக்கூடியது.

புற்றுநோயை தடுக்கக்கூடும்

புற்றுநோயை தடுக்கக்கூடும்

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் ஒரு நோய் என்னவெனில் அது புற்றுநோய்தான். இதன் எண்ணெயில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் விஷத்தன்மையை குறைக்கக்கூடிய தன்மையுடையது. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சில புற்றுநோய்களை தடுக்க உதவுகிறது. குறிப்பாக கல்லீரல் மற்றும் வாய் புற்றுநோய்களை தடுக்கிறது. இதில் உள்ள பீட்டாசயனின் மற்றும் பேடேக்ஸாந்தின்ஸ் உடலின் எதிர்ப்பு சக்திகளுடன் நேரடி தொடர்புடையது. இதன் மூலம் அவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க கூடும்.

கண் ஆரோக்கியம்

கண் ஆரோக்கியம்

வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் இரண்டும் கண் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிகவும் அவசியமான பொருட்களாகும். இந்த் இரண்டுமே பர்செலனில் அதிகம் உள்ளது. இவை கண்களின் செல்களை தாக்கும் நச்சுப்பொருள்களிடம் இருந்து உங்கள் கண்களுக்கு பாதுகாப்பை தருகிறது.

MOST READ: உங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா?

எலும்புகளின் ஆரோக்கியம்

எலும்புகளின் ஆரோக்கியம்

எலும்புகள் மற்றும் தசைகளை வலிமையாக்க விரும்புபவர்களுக்கு பார்செலின் ஒரு மிகச்சிறந்த தேர்வாகும். இதில் உள்ள கால்சியம், மக்னீசியம், இரும்புசத்து ஆகியவை உங்கள் எலும்புகளை வலிமையாக்குவதோடு உங்களின் குணமாகும் சக்தியையும் அதிகரிக்கும். இது பொதுவான வயதாவதால் ஏற்படும் கோளாறுகள் மற்றும் ஆஸ்டாபோரோசிஸ் போன்ற குறைபாடுகள் ஏற்படுவதை தடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health benefits of purslane

Purslane is a leafy vegetable that most likely originated in Asian region. The health benefits of purslane include its ability to aid in weight loss, improve heart health and prevent certain cancers.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more