இந்த காயை பார்த்திருக்கீங்களா?... இது ஒன்னே இத்தனை பிரச்னையை சரிபண்ணுமாமே...

Posted By: gnaana
Subscribe to Boldsky

எண்பதுகளில் பிறந்திருந்தால், மூலிகைகள்தான் உங்களை வளர்த்திருக்கும். ஆமாம், இன்றுள்ளதுபோல, குழந்தைமருத்துவர், குழந்தைமருத்துவமனைகள் இல்லாத அந்த காலத்தில், பாட்டிகள்தான், குழந்தை மருத்துவர்கள்.

health

குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும் காலத்திலிருந்து, பாட்டிகள் மூலிகைகளில்தான் உடல் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பார்கள். இதில் முதன்மையானதுதான் மாசிக்காய்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாசிக்காய்

மாசிக்காய்

மாசிக்காய் என்பது ஒரு காயல்ல, ஒரு மரத்தின் பிசின், காய்ந்து, மாசிக்காய் ஆகிறது.

பச்சிளம் குழந்தைகளின் சுவாசக்கோளாறு முதல் வயிற்றுப்போக்கு வரை அனைத்துக்கும் ஒரே மருந்தாக, அக்காலத்தில் மாசிக்காய் பயன்பட்டது.

குழந்தைகளுக்கு மட்டுமன்றி, பெரியவர்களுக்கும், தொண்டை வலி, சரும பாதிப்புகள், இதய வியாதிகள், பல்வலி, மூல வியாதி, ஆண்மைக் கோளாறு போன்ற பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றல்மிக்கது.

சுவாசக்கோளாறுகள்

சுவாசக்கோளாறுகள்

டான்சிலிஸ் எனும் தொண்டைபிரச்னைகளை, ஆபரேஷன் செய்யவேண்டிய தேவைகள் ஏதுமின்றி, முழுவதுமாக, குணமாக்கும் ஆற்றல், மாசிக்காய்க்கு உண்டு. காலமாற்றங்களில் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறலும், இளைப்பும் ஏற்பட்டு, பசியெடுக்காமல்ம் சோர்ந்திருப்பார்கள். மாசிக்காய், துளசி, தூதுவளை, அதிமதுரம், கண்டங்கத்திரி, ஆடாதோடை, சித்தரத்தை இவற்றைப்பொடியாக்கி, விரல்நுனியளவு தினமும் இருவேளை, தேனில்கலந்து குடிக்கவைத்து வந்தால், முச்சிரைப்பு, விரைவில் விலகிவிடும். நாம் உட்கொள்ளும்உணவை, சாம்பிள் டெஸ்ட்செய்து, ரிப்போர்டை உடனே, மூளைக்கு அனுப்பும்செயல்தான், தொண்டையிலுள்ள டான்சில் சுரப்பிகளின் முழுநேர வேலை. உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் பாதிப்பால், டான்சில் கிருமிகள் பாதிக்கும்போது, வீங்க ஆரம்பித்து, தொண்டையில் வலி மற்றும் எதையும் சாப்பிடமுடியாதநிலையை ஏற்படுத்திவிடுகிறது.

மாதவிலக்கு

மாதவிலக்கு

பெண்களுக்கு, மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வயிற்றுவலி, அதிக இரத்தப்போக்கு மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பாதிப்புகளை குணமாக்கும்.

மாதவிலக்கில், பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கை நிறுத்த, மாசிக்காயை, தேனில் குழைத்து, தினமும் மூன்று வேளை சாப்பிட்டுவரவேண்டும்.

மாசிக்காயை நீரிலிட்டு காய்ச்சிவைத்துக்கொண்டு, அந்தநீரை தினமும் அவ்வப்போது குடித்துவர, பெண்களின் வெள்ளைபடுதல் பாதிப்பு குணமாகும்.

மாதவிலக்கு நேரத்தில், மாசிக்காய் தூளை பாலில் கலந்து, தினமும்குடிக்க, கடுமையான மாதவிலக்கு வயிற்றுவலி, இடுப்புவலி மற்றும் உடற்சோர்வு நீங்கிவிடும்.

உரை மருந்து

உரை மருந்து

குழந்தைகளின் மாந்தம், வயிறு உப்புதல் போன்ற பாதிப்புகளை சரிசெய்யும், உரைமருந்து.குழந்தைக்கு பசியில்லாதபோது, பால் கொடுப்பதால் ஏற்பட்ட, அஜீரணத்தில் வயிறு உப்பி, குழந்தைக்கு பாலில் நாட்டமிருக்காது. உரைமருந்து இதை சரிசெய்யும். உரைமருந்தை வீடுகளில் பெரியோர், ரெடியாக வைத்திருப்பார்கள். மாசிக்காய், ஜாதிக்காய், வசம்பு, அதிமதுரம், கடுக்காய், சுக்கு, திரிகடுகம், சித்தரத்தை. இந்தப்பொடிகளை கற்பூரவல்லி சாற்றில் கலந்து, வெயிலில் காயவைத்து, கட்டியாக்கி சேமித்து வைப்பார்கள்.

குழந்தை மந்தம்

குழந்தை மந்தம்

குழந்தைகளுக்கு, மாந்தம் போன்ற பாதிப்புவரும் சமயங்களில், உள்ளங்கையளவு கொண்ட உரைகல் எனும் சிறுகல்லில் தாய்ப்பால் சில துளிகள் விட்டு, அதில், ஒரு இழைப்பு மட்டும், இந்த மூலிகைக்கட்டியை இழைத்து, அதைக்குழைத்து, குழந்தையின் நாக்கில் தடவுவார்கள். இதனால், குழந்தைகளின் அஜீரணம் சரியாகி, வயிறு இயல்பாகி, பசியெடுத்து பால்குடிக்க ஆரம்பிக்கும். சிறந்த நோயெதிர்ப்பு ஆற்றல்மிக்க மருந்து இது. குழந்தைகளுக்கு ஏற்படும், வயிற்றுப் போக்கை நிறுத்தும்.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாத ஒன்றை, தாய் உட்கொண்டால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு. ஏற்பட்டிருக்கலாம்.

மாசிக்காயை உரைகல்லில், சிலதுளி தாய்ப்பால் விட்டு, ஒரேஇழைப்பு இழைத்து, குழந்தையின் நாக்கில்தடவ, வயிற்றுப்போக்கு, நீங்கி, அழுத குழந்தை சிரிக்க ஆரம்பிக்கும். பல்முளைத்த குழந்தைகளுக்கு இனிப்பு அதிகமாகக்கொடுத்தால், உடல் சூடாகி, இரத்தம் சளி கலந்த சீதபேதி, மலவாயில் எரிச்சல் ஏற்பட்டு, குழந்தைகளின் வாயில் வெண்ணிற மாவு போன்ற படலம், படர்ந்திருக்கும். மாசிக்காயை நெய்யில்வதக்கி, பொடியாக்கி தேனில்கலந்து கொடுக்க, சீதபேதி தணிந்துவிடும்.

ஜலதோஷம்

ஜலதோஷம்

மாசிக்காயை நீரிலிட்டு சுண்டக்காய்ச்சி, அதில் படிகாரத்தூளும், சிறிது தேனும் கலந்து, தினமும் இருவேளை வாய்கொப்புளித்து வரவேண்டும். மாசிக்காய், திருநீற்றுப் பச்சிலையுடன் வறுத்த மிளகைச்சேர்த்து அரைத்து, தொண்டையில் தடவிவரலாம்.

மாசிக்காய், திரிபலா, திரிகடுகு இவற்றை கற்பூரவல்லி இலைச்சாற்றில் இட்டு மையாக அரைத்து, சிறு உருண்டைகளாக்கி காயவைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

தினமும் சாப்பிட்டபின், வாயில் இந்த உருண்டையை போட்டு, உமிழ்நீரோடு மெதுவாக விழுங்கவேண்டும். அல்லது பொடியாக்கி, தேனில் குழைத்துத்தரலாம்.

மாசிக்காய் மருந்து, தொண்டைபாதிப்பை சரிசெய்து, டான்சில்ஸ் சுரப்பியை, நல்லமுறையில் இயங்க வைக்கும். அத்துடன், தொண்டைவலி, இருமல், ஜலதோஷம், தொண்டைகட்டிக் கொள்வது போன்ற பிரச்னைகளையும் குணமாக்கும் ஆற்றல்மிக்கது.

ஆண்மையிழப்பு கோளாறுகள்

ஆண்மையிழப்பு கோளாறுகள்

உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்ததால், சிலருக்கு, நரம்புகள் பலவீனமாகி, உயிரணுக்கள் உற்பத்தி பாதித்து, மகப்பேறடையும் வாய்ப்பு பாதிக்கும்.

மாசிக்காய், கடுக்காய், ஜாதிக்காய், ஆவாரம்பசை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை நன்கு தூளாக்கி அத்துடன் வல்லாரை இலைப்பொடியை சேர்த்து, தினமும், நெய்யில் கலந்து சாப்பிட, உடல் சூடு தணிந்து, உயிராற்றல் மேம்பட்டு, ஆண்மை பாதிப்புகள் விலகிவிடும்.

சருமப்பொலிவு

சருமப்பொலிவு

மாசிக்காய், ஜாதிக்காய் இரண்டையும் சிலதுளிகள் நீர்விட்டு, கல்லில் இழைத்து, துளசித்தூள் கலந்து, முகப்பருக்களின் மேல்வைத்துவர, வடுக்கள் இல்லாமல் பருக்கள் உதிர்ந்துவிடும். துளசித்தூளுக்குப்பதில், எலுமிச்சை சாற்றையும் பயன்படுத்தலாம்.

மாசிக்காய், ஜாதிக்காய் மற்றும் கிராம்பைத்தூளாக்கி, இந்தக்கலவையை முகத்தில் தடவி, சற்றுநேரம் கழித்து முகத்தை கழுவிவர, முகத்தின் பொலிவு கூடிவிடும்.

அரைடம்ளர் நீரில் சிறுமாசிக்காய் மரப்பட்டையை இட்டுமூடிகாய்ச்சி, ஆறவைக்கவும். நீர், குளிர்ந்ததும், அந்தநீரில் மாசிக்காய், ஜாதிக்காய் மற்றும் சந்தனத்தூளை சேர்த்து, முகத்தில் பசைபோல பூசவும். பின்னர், முகத்தை அலச, அதுவரை அழுதுவடிந்த முகம், இப்போது தேவதைபோல, ஜொலிக்க ஆரம்பிக்கும்.

ஊறவைத்த மாசிப்பட்டையை அரைத்து, பாலாடைகலந்து வாரமிருமுறை, முகத்தில் பூசிவர, கண்களின்கீழ் தொங்கும் இரப்பைகள் மற்றும் தளர்ந்த முகதசைகள் இருகி, முகம் இளமைப்பொலிவுடன் மின்னும்.

பிற நன்மைகள்

பிற நன்மைகள்

மாசிக்காய் குடிநீரில் வாய்கொப்புளிக்க, ஈறு உறுதியாகி, பல்பாதிப்புகள் சரியாகும், வாய்ப்புண் குணமாகும். சர்க்கரை பாதிப்பு குணமாகும்.

அளவுக்குமீறி சாப்பிட்ட மயில்துத்தம், அபின், எட்டி போன்ற விஷங்களை முறிக்கும்.

மாசிக்காயுடன், மணத்தக்காளி கீரையை சேர்த்து, நீரிலிட்டுகாய்ச்சி குடித்தால், வாய்ப்புண், தொண்டைப்புண் மற்றும் அல்சர் எனும் வயிற்றுப்புண் குணமாகும்.

மாசிக்காயை நீரிலிட்டு பசையாக்கி, ஆசனவாயில் வைத்துவர, மூலபாதிப்புகள் குணமாகும், தீப்புண்மேல் வைத்துவர, காயங்கள் விரைவில் ஆறும்.

மாசிக்காயை பாலில் இழைத்து சிறிது நாக்கில் வைத்துவர, இதய பதட்டம் நீங்கும்.

மாசிக்காய்தூளை மூக்கில் உறிஞ்ச, மூக்கில் இரத்தம் வடிவது, நீங்கும்.

மாசிக்காய்தூளை தினமும் சாப்பிட, இரத்தவாந்தி குணமாகும்.

மாசிக்காய், ஜாதிக்காய், அதிமதுரம், அக்ரகாரம், சுக்கு, ஏலக்காய், மிளகும் ஓமம் இவற்றுடன் இருமடங்கு கிராம்பு சேர்த்து தூளாக்கி, தினமும் சாப்பிட்டுவர, ஆஸ்துமா, குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

health benefits of maasikaai

It is called Oak Gall. It is neither a plant nor a tree. It is a result of a metamorphosis process.