For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏராள மருத்துவ குணங்களை பெற்ற அபூர்வ மரங்களில் ஒன்றான இத்தி மரத்தின் நன்மைகள்!!

மருத்துவ குணங்களை நிரம்பபெற்றுள்ள இத்தி மரத்தின் அபூர்வ குணங்களைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

By Gnaana
|

இத்தி என்றும் குருக்கத்தி என்றும் அழைக்கப்படும் மரம், ஐம்பது அடி உயரம் வரை வளர்ந்து, குடை போல பரந்து விரிந்த கிளைகளுடன், நெருக்கமான பசுமை வண்ண இலைகளைக் கொண்டு, நிழல் தரும் கனி மரமாகும். இளைப்பாற நிழலும், புசிக்க கனிகளும் தரும் இத்தி, தொன்மையான மரங்களில் ஒன்று.

தமிழகத்தின் அநேக இடங்களில் காணப்படும் இத்தி மரங்கள், வட மாநிலங்களில் அதிக இடங்களில் நிழலுக்காக வளர்க்கப்படுகின்றன. குடகு மலைப்பகுதிகளில் உள்ள காபிச் செடிகளுக்கு நிழல் தரும் மரங்களாகவும், வளர்க்கப்படுகின்றன.

ஆல மரத்தின் இலைகளைப் போன்ற நீண்ட இலைகளைக் கொண்ட மரங்களின் கிளைகளில், அத்திப்பழங்கள் போன்ற சிறிய பழங்கள் கொத்துக்கொத்தாக கனிந்து காணப்படும். இந்த மரங்களின் இலைகள், வேர்கள், மரப்பட்டை, காய்கள் மற்றும் கனிகள் மருத்துவ பலன்கள் மிக்கவை. மரத்தின் பட்டைகளைக் கீற, பால் சுரக்கும்.
இத்தி மரங்களில் கல் இத்தி மற்றும் பாறை இடுக்குகளில் வளரும் காட்டு இத்தி என்று சில வகைகள் உள்ளன. அதில் ஒரு வகை, திருக்கோவில்களில் குருக்கத்தி என்று அழைக்கப்படும் தல மரமாக திகழ்கின்றன.

கல் இத்தி மரம், வேர்களைக் கொண்டு பிற மரங்களின் கிளைகளைப் பற்றி, அதன் மூலம் நன்கு வளர்ந்து, வேர்கள் தரையை அடைந்ததும், வேர்களின் சத்துக்கள் மூலம், கனிகள் செழுமை பெறும், வேர்கள் எண்ணிக்கை அதிகரிக்க, வேர்கள், வளரும் மரங்களின் தண்டுகளை சுற்றிப் படர்ந்து, அவற்றின் சக்தியைக் கிரகித்து, அந்த மரங்களை பட்டுப் போகச்செய்து, தாம் செழித்து வளரும் தன்மை மிக்கவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ficus Virens - a miracle herb to cure many ailments

Ficus Virens- a miracle herb to cure many ailments
Desktop Bottom Promotion