உடலில் உள்ள நச்சுக்களை உடனடியாக வெளியேற்றும் பால் நெருஞ்சில்

By Gnaana
Subscribe to Boldsky

பசிக்கும்போது, கண்ணில் படுவதையெல்லாம் தின்றுவிடுகிறோம், சிக்கன் ஃபிரை, புது எண்ணையில் பொறித்ததா? அல்லது பலமுறை உபயோகித்த எண்ணையா? நூடுல்ஸில் சேர்க்கும் மசாலாவில் அஜி நமோடா இருக்குதா? சோடாப்பூ இருக்கா? இட்லி மாவுல மைதா கலந்துருக்கா? சாதத்துலே சுண்ணாம்பு இருக்கா? இப்படி எதையாவது நாம் கவனித்திருக்கிறோமா?

health

மேலே சொன்னதெல்லாம், உன்னதமானப்பொருட்கள் அல்ல, அவையெல்லாம், உடலுக்கு தீங்குவிளைவிக்கும் கெமிக்கல்கள், இவை உடலில் சேரும்போது, நச்சுத்தன்மைகள் இரத்தத்தில் கலந்து, அஜீரணம், நச்சுக்கொழுப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாக்சின்கள்

டாக்சின்கள்

நச்சுக்கள் உணவின் வழியே கலந்து வந்தாலும், உடலிலுள்ள தற்காப்பு சிஸ்டம்,அவற்றைக் கழிவுகளின் வழியே வெளியேற்ற முயலும், அது முடியாதபோது, அவற்றை, உடலில் வேறெங்கும் செல்லவிடாமல், ஒரு இடத்தில் தடுத்து வைத்துக்கொள்ளும். அது எந்த இடம் என்று தெரியுமா?

கல்லீரல்! அதுதான், உடலில் சேரும் நச்சுக்கள், செரிமானமாகாத உணவுகளை, தன்னில் சேர்த்து வைக்கிறது. உடலில் சேரும் நச்சுக்களை, குப்பைக்கிடங்கு போல சேகரித்து வைத்து, மொத்தமாக வெளியேற்றும் வேலையைத்தான், கல்லீரல் செய்து வருகிறது.

கல்லீரல்

கல்லீரல்

நச்சுக்களால் கல்லீரலும் பாதிக்கப்பட்டு, உடல்நலம் கெடும்போதுதான், கல்லீரலின் அத்தியாவசியம் நமக்கு உறைக்கிறது. நாக்கைக் கட்டுப்படுத்தாமல், சுவைக்கு ஆசைப்பட்டு, அவற்றின் நச்சுக் கெமிக்கல் பொருட்களால், உடல்நலம் கெடும்போதுதான், ஞானோதயம் வருகிறது.

கல்லீரல் பாதிப்பின் உச்சமாக, கல்லீரல் செயல்படாத நிலை ஏற்படும்போது, தற்காலத்தில், மேலை மருத்துவத்தில், கல்லீரல் மாற்று ஒன்றுதான் தீர்வு என்று, கல்லீரலை மாற்றிவிடுகிறார்கள். நோயின் காரணமறிந்து, அதைத் தீர்க்க முயலாமல், அறுவை ஒன்றே தீர்வு எனும் மேலைமருத்துவத்தை விரும்பாமல், இயற்கை மூலிகை மருத்துவத்தின் மூலம், உடல்நலத்தைக் காக்க, பலரும் மூலிகைத் தீர்வுகளை நாடுகின்றனர். கல்லீரலைக் காக்கும் அதிசய மூலிகை,

பால் நெருஞ்சில் எனும் மில்க் தஸ்சில்.

பால் நெருஞ்சில் எனும் மில்க் தஸ்சில்.

கல்லீரல் மட்டுமல்ல, மண்ணீரல், பித்தப்பை போன்ற உடலின் அத்தியாவசிய உறுப்புகளையும், காக்கும் மாமருந்து, பால் நெருஞ்சில். பக்க விளைவுகள் இல்லாத, பால் நெருஞ்சிலுக்கு இணையான மருந்துகள், மேலை மருத்துவத்தில் இல்லை. உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரலைக் காப்பதிலும், மன அழுத்தத்தை சரிசெய்வதிலும், உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துவதிலும், பால் நெருஞ்சிலுக்கு ஈடு ஏதுமில்லை.

மெடிட்டெரேனியன் நாடுகளான ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் பெருமளவில் வளரும் முள் செடிதான், பால் நெருஞ்சில். சாதாரண களைச்செடியாக வறண்ட நிலங்கள், தோட்டங்களில் எங்கும் வளரும் பால்

நெருஞ்சில் செடி, ஆறடி உயரம் வரை வளரக்கூடியது. கோடை வெயிலிலும் வற்றாத தாவரமாக விளங்கும் முட்கள் நிறைந்த பால் நெருஞ்சில் செடி, ஊதா நிற மலர்களைக் கொண்டது. செடியின் இலைகளில் காணப்படும் வெண்ணிறத் தீற்றல்கள், கன்னி மேரியின் பால் சிதறல்கள் எனப்படுகின்றன. மிகத் தொன்மையான ஆண்டுகளுக்கு முன்னரே, ஐரோப்பிய நாடுகளில், பால் நெருஞ்சில் செடிகள், அதன் மருத்துவ தன்மைகளுக்காகவும், ஊட்டச்சத்துமிக்க தன்மைக்காகவும், சாலட் போன்ற உணவுவகைகளில் சேர்க்கப்பட்டன.

அரும் மருந்து

அரும் மருந்து

மேலை நாடுகளில், பால் நெருஞ்சில் செடியின் இலைகள் மற்றும் விதைகள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மூலிகை மருத்துவத்தில் முக்கிய பங்கு வகித்தன. கிரேக்க மூலிகை மருத்துவர்கள், பாம்பின் விஷக்கடியைப் போக்க மருந்தாகப் பயன்படுத்தினர். முதலாம் நூற்றாண்டில் ப்லினி எனும் ஆய்வாளர், நச்சுகளால் பாதிக்கப்பட்ட கல்லீரலை, மீண்டும், சீராக இயங்க வைக்கக்கூடியது, பால் நெருஞ்சில் என்கிறார்.

நவீன மருத்துவம், மனநிலை கோளாறுகள், பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் உற்சாகமின்மை போன்றவற்றால், கல்லீரலின் பாதிப்பு ஏற்படுகிறது என்று அறிந்து, அதைப் போக்க, பால் நெருஞ்சிலை மருந்தாக, பருவகால சத்து டானிக்காக பயன்படுத்தி, கல்லீரலின் பாதிப்புகளை சரியாக்கினர்.

தாய்ப்பால்

தாய்ப்பால்

பெண்களின் தாய்ப்பால் சுரப்புக்கு, உணவுகளில் சேர்த்தனர், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், நரம்புக் கோளாறுகள் மற்றும் பெண்களின் மாதவிலக்கு பாதிப்புகளுக்கும், பால் நெருஞ்சிலையே, மருந்தாகப் பயன்படுத்திவந்தனர். உடல் நச்சுக்கழிவுகளை அகற்றும் தொழிற்சாலை, வேதிக்கூடம் என அழைக்கப்படும் உடலின் இரண்டாவது பெரிய உறுப்பான கல்லீரல் பாதிப்புகளை, பால் நெருஞ்சில் மட்டுமே குணப்படுத்தும்.

பீட்டா கரோட்டின், முசிலேஜ், சிலிமோனின், பாதிக்கப்பட்ட கல்லீரல் செல்களில் புரோட்டின் தொகுப்பை அதிகரிக்க உதவும் RNA தன்மைகளை ஏற்படுத்தி, நச்சுக்களை கல்லீரலில் ஈர்ப்பதைத் தடுத்து நிறுத்தும் அதிமுக்கிய காரணியான சிலிமரின், அபிகெனின், கால்சியம், அத்தியாவசிய கொழுப்பு எண்ணை, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம் மற்றும் துத்தநாக தாதுக்களை உள்ளடக்கியது.

மருத்துவத் தன்மைகள்.

மருத்துவத் தன்மைகள்.

பால் நெருஞ்சில், கல்லீரலின் அனைத்து பாதிப்புகளையும் குணப்படுத்தும் சக்திமிக்க பானமாகப் பயன்படுகிறது. கல்லீரலை நச்சுக்கள், மாசுகழிவுகள் மற்றும் தனித்திறன் செல்களின் பாதிப்பைத்தடுத்து, புதிய கல்லீரல் செல்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது.

ஹெப்படிஸ்

ஹெப்படிஸ்

ஹெப்படிஸ் கோளாறால், பாதித்த கல்லீரலின் செல்களை அகற்றி, புதிய கல்லீரல் செல்களை உற்பத்தி செய்யும் சிலிமாரின் ஃபிளாவனாய்டுகள், ஹெப்படடைஸ் பாதிப்பை, உடலிலிருந்து விலக்குகிறது. சிர்ரோசிஸ், ஆல்கஹால் விஷம், மஞ்சள் காமாலை, கல்லீரல் கொழுப்பு மற்றும் ஹெப்படைஸ் பாதிப்பை, உடலில் இருந்து விலக்குகிறது.

பித்தநீரை உருவாக்குவதில் துணையாக இருக்கும் பால் நெருஞ்சில், கொழுப்பை கரைப்பதில் முக்கியமாக விளங்குகிறது. கல்லீரல் மற்றும் பித்தப்பை நச்சுக்கள், நிகோடின், ஆல்கஹால், கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சுக்கள், இரத்தத்தில் கலக்காமல் தடுப்பதில், சிறப்புடன் செயல்படுகின்றன. நச்சுக் காளான் போன்ற கொடிய விஷத்தைக் கூட, முறிக்கும் இயல்பு மிக்கது, பால் நெருஞ்சில்.

சிறுநீரகப் பிரச்னைகள்

சிறுநீரகப் பிரச்னைகள்

மூளை, சிறுநீரகம், பித்தநீர் நாளங்களை, வேதிநச்சுக்கள் தாக்காமல் காக்கிறது. கல்லீரலில் ஏற்படும் நெடுநாள் பாதிப்புகளால், இன்சுலின் தடைபடும்போது, பால் நெருஞ்சில் இன்சுலின் சுரப்பை, சீராக்கி, இரத்த சர்க்கரை அளவை, சீராக்குகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, பால் நெருஞ்சில், தாய்ப்பால் சுரப்பை ஊக்குவித்து, பாலூட்டும் தாய்மார்களின், தாய்ப்பால் குறைபாட்டை சரிசெய்வதில் பயன்படுத்தப்பட்டது.

சிலிபினின் எனும் பால் நெருஞ்சிலின் சத்து, தோலில் ஏற்படும் கேன்சர், மற்ற வகை கேன்சர்களால் பாதிப்படையும் செல்களுக்கு பதில், புதிய செல்களை உருவாக்கி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை, அதிகரிக்கிறது.

வயிற்றுவலி

வயிற்றுவலி

கீமோதெரபி சிகிச்சையின்போது, கேன்சர் பாதிப்பு உள்ளவர்கள், பால் நெருஞ்சிலை தினமும் சாப்பிட்டு வர, சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள், சிகிச்சையின் தீவிரத்தால் பாதிக்கப்படாமல் காக்கும். நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, வயிற்றுப் பிடிப்பு மற்றும் சுவாச பாதிப்புகளால்

ஏற்படும் தும்மல் போன்ற அலர்ஜிகளை சரிசெய்வதில், சிறந்த மூலிகை மருந்தாகசெயல்படுகிறது. தாய்மார்களின் பால் சுரப்பை ஊக்குவிக்கும், பால் நெருஞ்சில் தேநீர். பால் நெருஞ்சில் விதைகளை அரைத்து, நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை

புற்றுநோய்

புற்றுநோய்

தினமும் இருவேளை, தேநீர் போல பருகிவர, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். பால் நெருஞ்சில் இலைகளை, வதக்கி கூட்டு போல செய்தோ அல்லது கடைந்தோ சாப்பிடலாம், இலைகளை பச்சையாகவும் சாப்பிடலாம். விதைகளை வறுத்து, சுவைக்கலாம், அல்லது தேநீராக்கி, பருகி வரலாம். இதன் மொட்டுக்களும், மருந்தாகின்றன.

உணவில் பால் நெருஞ்சிலை சேர்த்துவர, மார்பக கேன்சர், கருப்பை கேன்சர் மற்றும் புரோஸ்டேட் கேன்சர் போன்றவை உடலை அணுகாமல் தடுக்க முடியும் என்கின்றன, ஆய்வுகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    amazing health benefits of milk thistle

    milk thistle is a flowering plant that is part of the daisy family
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more