For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திரிபலாவை பருவ மழைக்காலங்களில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

திரிபலாவை மழைக்காலத்தில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Hari Dharani
|

வாழ்க்கை முறை மாற்றங்களால் வயது வந்தோருக்கும் முதியோருக்கும் ஏற்படும் ஒவ்வாமை நோய்கள் பொதுவானதாக இருக்கிறது. நாகரிக வளர்ச்சி மற்றும் பரபரப்பான வாழ்க்கை சூழல் நமது உணவுமுறைகளில் கூட மிகத்தீவிரமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. உணவு பழக்கங்களில் ஏற்படும் மாற்றமானது, உடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான இயக்கத்தை பயங்கரமாக பாதிக்கிறது.

குடல்களை சுத்தப்படுத்தி உடலை இளைக்க வைக்கும் ஆயுர்வேத மூலிகை இவைதான்

இந்த சூழ்நிலையில், நமது உடலின் ஆரோக்கியம் காக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதிலும் ஜீரண மண்டலத்தின் நலத்தை பாதுகாப்பது மிக முக்கியம்.

நல்ல செரிமான திறனை வளர்க்க மிக எளிய வழி என்னவென்றால் திரிபலாவை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதே. திரிபலா ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படும் சிறந்த மூலிகை கலவைகளில் ஒன்று. திரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் கலவையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கிறது

மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கிறது

ஆயுர்வேத நூல்களும் அதற்கு சமகால ஆய்வுகளும் கூறுவது என்னவெனில், திரிபலா இரைப்பையில் இருந்து உணவை விரைவில் செரிக்கவைத்து, வயிற்றை காலியாக்குகிறது. இதனால் நீண்டகால மலச்சிக்கலில் இருந்து உங்களை விடுவிக்கிறது.

திரிபலாவில் உள்ள மூன்று மூலிகை பொருட்களுமே நமது உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த மூலிகைகள் உடலினுள் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது, அதே சமயம் ஜீரண சக்தியையும் மேம்படுத்துகிறது.

 இரைப்பை :

இரைப்பை :

திரிபலாவில் உள்ள நெல்லிக்காய், ஒவ்வாமை மற்றும் அழற்சி நீக்கியாக இருந்து, குடலின் உள்பகுதியை புத்துயிர் பெறச்செய்கிறது. மேலும் இது குடற்சுவர்களை புத்துணர்வு பெறச்செய்வதோடு அவற்றை ஆசுவாசப்படுத்தி, அடிவயிற்று வீக்கம் மற்றும் ஒவ்வாமை தொந்தரவுகளில் இருந்து உங்களை விடுவிக்கிறது.

முறையான குடலியக்கத்தை பராமரிக்கிறது

முறையான குடலியக்கத்தை பராமரிக்கிறது

திரிபலா வளர்சிதை மாற்றங்களை தூண்டி, உங்கள் உடலின் ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. தினமும் இரவு உறங்கச்செல்லும் முன்னர் சிறிதளவு திரிபலாவை உட்கொண்டால் உங்கள் குடலியக்கம் சீராக இருக்கும்.

 உடலின் நச்சுக்களை நீக்குகிறது

உடலின் நச்சுக்களை நீக்குகிறது

ஆயுர்வேத நூல்களின் கூற்றுப்படி, திரிபலா இறைபணி மற்றும் குடல்களில் உள்ள வளர்சிதை கழிவுகள் மற்றும் செரிமான கழிவுகளை முற்றிலும் அகற்றி, உங்கள் உடலின் நச்சுப்பொருட்கள் நீக்குவானாக விளங்குகிறது.

இது இயற்கையான ஆன்டிஆக்சிடண்ட்

இது இயற்கையான ஆன்டிஆக்சிடண்ட்

திரிபலாவில் உள்ள காலிக் அமிலம், பிளவனாய்டுகள், டானின்கள் போன்ற பல ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உடலின் கழிவுகளை வெளியேற்றி வயிற்றை சுத்தப்படுத்துவதில் உதவுவதோடு, திசுக்களை சேதப்படுத்தக்கூடிய தீவிர காரணிகளை குறிவைத்து தாக்குகிறது.

இந்த மூன்று மூலிகைகளில் உள்ள மூலக்கூறு செயலிகள் ஆன்டிஆக்ஸிடென்ட் திறன்களை வலுவான முறையில் உடலுக்குள் செலுத்தி உங்கள் குடல் மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே இந்த மழைக்காலத்தில் உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நன்கு பாதுகாத்து சிறப்பான நாட்களை எதிர்நோக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Five Ways Triphala Can Help You Maintain Digestive Wellness This Monsoon

Five Ways Triphala Can Help You Maintain Digestive Wellness This Monsoon
Desktop Bottom Promotion