இயற்கை உணவுகள் உங்களுக்கு பிடிக்குமா? அப்போ இந்த மூலிகை உணவுகளை ட்ரை பண்ணுங்க!!

By: Gnaana
Subscribe to Boldsky

நடுத்தர வயதுகளில் உணவுப்பழக்கத்தை சரியாக அமைத்துக் கொண்டால், உடலில் எந்த பாதிப்பும் இல்லாமல் எதிர்வரும் வாழ்நாட்களை மகிழ்வுடனும் நிம்மதியுடனும் கழிக்க முடியும். ஆயினும் ஏனோ, யாரும் உணவை ஒரு முக்கியமான ஒன்றாகப் பொருட்படுத்துவதில்லை, அதற்கான தேவை வந்து, மருத்துவர் அறிவுறுத்திய பின்னர்தான், உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள்.

சிலர் மட்டுமே, அத்தி பூத்தாற்போல, தினசரி உணவில் கட்டுப்பாட்டைக் கடைபிடித்து, உடல் நலத்தைப் பாதுகாத்து, மற்றவர்களுக்கும், அதன் பயன்களை எடுத்துக்கூறுகின்றனர்.

Nature Foods recipes to live healthily

உடலுக்கு நன்மைகள் தரும் சமச்சீரான இயற்கை உணவு வகைகளில், சிறப்பிடம் பெறுவது, மூலிகைகள் ஆகும். அரிய தானியங்கள், மூலிகைக் கீரைகள் இவற்றைக் கொண்டு தயாராகும் மூலிகை உணவுகள் உடலில் உள்ள பாதிப்புகளை சரியாக்கி, உடலின் ஆற்றலை சமநிலைப்படுத்தி, மருந்துகள் உண்ணாமலே, உடலை வளமாக்கக்கூடியவை.

மூலிகைகளை அவை கிடைக்கும் சமயங்களில் வாங்கி, உபயோகித்து வரலாம், அல்லது அனுபவமிக்க சித்த மருத்துவர்களிடம் கேட்டு, உடல் நிலைகேற்ற மூலிகைப் பொருட்களை, நாட்டு மருந்து கடைகளில் வாங்கிப் பயன்படுத்தி, வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைத்திருக்க வேண்டிய மூலிகைப் பொருட்கள். :

வைத்திருக்க வேண்டிய மூலிகைப் பொருட்கள். :

கேழ்வரகு, சாமை, குதிரைவாலி போன்ற தானியங்கள் அல்லது நவ தானிய சத்து மாவு.கொண்டைக்கடலை, கொள், எள், வல்லாரைப்பொடி, பிரண்டைப் பொடி, சுக்குப்பொடி மற்றும் இந்துப்பு.

இந்தப் பொருட்களைக்கொண்டு நாம் சில மூலிகை சிற்றுண்டி, மூலிகைத் துவையல் போன்ற உணவு வகைகளை செய்து, எல்லோரும் பகிர்ந்து சாப்பிட, சத்து மிகுந்த புது சுவையுடன் இருக்கும். மேலும் முளைகட்டிய தானியங்களை உண்டுவர, உடல் பாதிப்புகள் அகன்று, உடல் வலுவாகும். முளைகட்டிய தானியங்களில் இருந்து, சத்தான சுவைமிக்க மூலிகை அடையை, எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

 மூலிகை அடை :

மூலிகை அடை :

கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு இவற்றை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து, இரவில் ஓரிரு முறை தண்ணீரை மாற்ற விரைவில் முளைவிட்டு விடும், இல்லையெனில் முதல் நாள் காலையில் இருந்தே ஊற வைக்கலாம்.

தேவையானவை :

வல்லாரைப்பொடி, சீரகப்பொடி, முருங்கைப்பூப்பொடி, சுக்குப் பொடி இவற்றுடன் சாமை, எள், சோளம், பீன்ஸ் கறி வேப்பிலை மற்றும் இந்துப்பு.

 செய்முறை :

செய்முறை :

முளைகட்டிய கொண்டைக் கடலை மற்றும் பச்சைப் பயிறு இவற்றை தனியே எடுத்துக்கொண்டு, அவற்றை கொரகொரப்பாக அம்மியில் அரைத்து எடுத்து வைத்துக்கொண்டு, அத்துடன் நறுக்கிய பீன்ஸ், மற்றும் மற்ற மூலிகைப் பொடிகளையும் கலந்து, சுவைக்கேற்ப இந்துப்பு சேர்த்துக்கொண்டு, சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த மாவில் அரைத்து வைத்த துளசி மற்றும் வில்வம் இலைகளைச் சேர்த்து, நன்கு கலக்கி சற்று நேரம் ஊற வைக்கவும். அத்துடன் நறுக்கிய சிறிய வெங்காயத்தையும் மிளகுப் பொடியையும், கறி வேப்பிலையையும் கலக்கவும்.

அடை :

அடை :

தோசைக்கல்லை சூடேற்றி, மூலிகை மாவில் ஒரு கரண்டி மாவை கல்லில் ஊற்றி, அடை போல, சற்று கனமாக மாவை ஊற்றி, வார்க்கவும். நல்லெண்ணை கொண்டு, இந்த அடையை வார்த்தெடுக்க, சாப்பிட மிருதுவாக, சுவைக்க அற்புதமாக இருக்கும், இந்த மூலிகை அடை.

சற்று மெனக்கெடும் வேலைதான், இந்த மூலிகை அடை தயாரிப்பு. ஆயினும், இதன் நன்மைதரும் பயன்களை அறிந்தால், எத்தனை சிரமங்கள் வேண்டுமானாலும் அடையத் தயார், நாங்களும் அனைத்து மூலிகைகளையும் சேகரித்து, இந்த அடையை எங்கள் வீடுகளில் செய்வோம், என்பார்கள் தாய்மார்கள்.

 முளை கட்டிய மூலிகை அடையின் பயன்கள்.

முளை கட்டிய மூலிகை அடையின் பயன்கள்.

அதிக நார்ச்சத்து மிக்கதாகையால், மலச்சிக்கலை போக்கிவிடும். உடலில் செரிமான ஆற்றலை மேம்படுத்தி, உடலின் வாத பாதிப்புகளை சரியாக்கும். சளி, இருமல் போன்ற சுவாச பாதிப்புகளை நீக்கும்.

 வயிற்றுப் புண்களை குணப்படுத்தும் :

வயிற்றுப் புண்களை குணப்படுத்தும் :

உடலில் உள்ள பித்தத்தை சரியாக்கி, இரத்தத்தை சுத்திகரித்து, இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பு மற்றும் மிகையான பொருட்களை வெளியேற்றும் ஆற்றல் மிக்கது.

வயிற்றில் காணப்படும் வயிற்றுப் புண் பாதிப்புகளை சரியாக்கி, சிறுநீர்ப் போக்கை இலகுவாக்கி, சிறுநீரக பாதிப்புகளை குணமாக்க வல்லது.

எளிதில் செரிமானமாகும் மூலிகைகளால் செய்யப்பட்டதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை எல்லோரும், அச்சமின்றி சாப்பிடலா

 நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தி :

உடலில் வியாதி எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் நலத்தை சீராக்கும் ஆற்றல் மிக்கது, இந்த மூலிகை மாவு.

இந்த மூலிகை மாவில் அடைதான் செய்ய வேண்டுமென்பது இல்லை, இதில் உங்கள் சிந்தனைக்கு, வானமே எல்லை!

சுவைமிக்க இந்த மூலிகை சத்து மாவில், இட்லி, தோசை செய்தும் சாப்பிடலாம். காய்கறிகள் நிறைந்த சாம்பார் போலவும் செய்து, சிற்றுண்டிகளுக்கு ஊற்றி, சாப்பிடலாம்.

இத்துடன் சிறிது பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து, சுவைமிக்க சட்னியாக, டிபன் வகைகளுக்கு பயன்படுத்தலாம்.

அதிக அளவில் புரோடீன் நிறைந்த உணவு என்பதால், அவ்வப்போது செய்து பிள்ளைகளுக்குக் கொடுத்து வர, சிறுவர்களின் உடல் வளர்ச்சிகளுக்கு, சிறந்த உணவாகத் திகழும்.

 செவன் கப் சுண்டல்

செவன் கப் சுண்டல்

செவன் கப் ஸ்வீட் சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லது சுவைத்திருப்பீர்கள், பால், கடலைமாவு, நெய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்ந்த மைசூர் பாகு போன்ற ஒரு இனிப்பு வகை.

இந்த செவன் கப் சுண்டல், முழுக்க மூலிகைகள் நிரம்பியது, செவன் கப் சுண்டல் செய்வதற்கு எளிதான, ஒரு மாலைச்சிற்றுண்டி. பிள்ளைகள் இதன் சுவையை விரும்பி சாப்பிடுவார்கள். செய்முறையைப் பார்க்கலாமா?

தேவையானவை :

தேவையானவை :

கொண்டைக்கடலை ஒரு கப், நிலக்கடலை ஒரு கப், பச்சைப்பயிறு ஒரு கப், சோளம் ஒரு கப், தேங்காய்த் துருவல் ஒரு கப், பாதாம் பருப்பு கால் கப், முந்திரி கால் கப் சிறிது இந்துப்பு.

 செய்முறை :

செய்முறை :

பாதாம் மற்றும் முந்திரியைத் தவிர மற்ற கடலை வகைகளை நன்கு ஊறவைத்து வேக வைத்து, தனியே எடுத்துக்கொள்ளவும். வாணலியில் தேங்காய்த் துருவலை சற்றே வறுத்து வைத்துக்கொண்டு, பின்னர் சற்று நெய் ஊற்றி, முந்திரியை வறுத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில், வேகவைத்த கடலைகளுடன், தேங்காய்த் துருவலை சேர்த்து அத்துடன் பாதாம் மற்றும் முந்திரியை கலந்து, சிறிது இந்துப்புத்தூளை சுவைக்கேற்பத் தூவவும். சுவையான, செவன் கப் சுண்டல் தயார். தேவைப்பட்டால், சிறிது பெருங்காயத்தூள் தூவிக்கொள்ளலாம்.

 நன்மைகள் :

நன்மைகள் :

குழந்தைகளுக்கு வித்தியாசமான சுண்டல், முந்திரியின் சுவையில், நாவில் இனிப்பாகக் கரையும். அதிக புரோடீன் சத்து மிக்க இந்த தானிய சுண்டல், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் உறுதுணை புரிந்து, அவர்களின் ஞாபக சக்தி ஆற்றலைத் தூண்டும் தன்மை கொண்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nature Foods recipes to live healthily

Nature Foods recipes to live healthily
Story first published: Wednesday, December 20, 2017, 8:00 [IST]
Subscribe Newsletter