கொல்லிமலையில் கிடைக்கும் அபூர்வ மூலிகையான யானை கொழிஞ்சி அழிவதற்கு யார் காரணம் ?

By: Gnaana
Subscribe to Boldsky

காடுகளில், மலைகளில் கிடைக்கும் எண்ணற்ற மூலிகைச் செடிகள், மரங்கள் போன்றவற்றின், அரிய பலன்களை தொன்மையான ஏடுகளின் மூலம் அறிந்து, தேடி அவற்றை எடுத்து, உடல் வியாதிகள் போக்க, மருந்தாக்குகிறோம்.

காடுகளில், மலைகளில் உள்ள பழங்குடியினர், அவர்களின் உடல் பாதிப்பை போக்க, என்ன செய்வார்கள்? அவர்களுக்கு யார், மருந்துகளைக் கொடுப்பார்கள்?

தேனீக்களை ஏமாற்றுவது போல, மலைவாழ் மக்களையும் வஞ்சித்து, அவர்களுக்காக விளையும் இயற்கை விளை பொருட்களையும் நாம் தொடர்ந்து, அபகரித்துக்கொண்டு, அவற்றின் வளர்ச்சியையும், மலைவாழ் மக்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கச் செய்கிறோம்.

மலைவாழ் பழங்குடியினரின், உடல் நலத்திற்கு தேவையான, மூலிகைகளை அவர்களே, காட்டில் சேகரித்துக் கொள்வார்கள், ஆயினும், அவர்களின், இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையை, நமது, அளப்பரிய தேவைகளின் காரணமாகக் குலைத்துவிடாமல் இருந்தால், சரி.

அடர்ந்த காடுகள் நிறைந்த மலைகளில் வசிக்கும், பழங்குடியினருக்கு, அவர்களின் உடல் நலத்திற்கு தேவையானவை எது என அறிந்து, தேவைக்கேற்ப அவற்றை உட்கொண்டு, உடல் நலம் பெறுவார்கள்.

அப்படி அவர்கள், உடல் நலம் காக்க, சிறந்த வரப்பிரசாதமாக, மருந்தாக மட்டுமன்றி, அவர்களின் அதிர்ஷ்ட அணிகலனாகவும் விளங்கி வருவதுதான், யானைக் கொழிஞ்சி!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரமாண்டமான கொழிஞ்சி :

பிரமாண்டமான கொழிஞ்சி :

காடுகளில், பிரமாண்டமான மரம் போன்ற தோற்றத்தில், எண்பது தொண்ணூறு அடி உயரம் வரை விரிந்து பரந்த கிளைகளுடன், வானளாவி நிற்கும், யானைக் கொழிஞ்சி, ஒரு மரமல்ல, உண்மையில் அது ஒரு கொடி வகைத் தாவரம் என்றால், வியப்பாகத் தான் இருக்கும்.

பிரமாண்டம் என்பது, உயரம் மட்டுமல்ல, அதன் காய்களும்தான், கிட்டத்தட்ட ஆறடி உயரத்தில், காணப்படும் அதன் காய்கள், இவ்வளவு பெரிய காயா, என்று பிரமிக்க வைக்கும்.

இந்த பிரமாண்டம், வெளிநாடுகளில் இல்லை, நமது நாட்டிலேயே, நமக்கு அருகில் உள்ள மலைகளிலேயே, இருக்கிறது என்றால், உண்மையில் இந்தக் கொடியை நேரில் காணும் ஆவல் சிலருக்கு ஏற்படும்.

Image source

காணப்படும் இடங்கள்!!

காணப்படும் இடங்கள்!!

வடவள்ளி, இரிக்கி என்ற பெயர்களில் அழைக்கப்படும் யானைக் கொழிஞ்சி, தமிழகத்தின் கொல்லிமலை, சேர்வராயன் மலை, ஏற்காடு மற்றும் ஜவ்வாது மலைகளில், மிக அரிதாகக் காணப்படுகின்றன. ஆப்பிரிக்க தேசங்களைப் பூர்வீகமாகக் கொண்ட யானைக் கொழிஞ்சி, பின்னர் ஆசிய நாடுகளுக்கும், அவற்றை ஒட்டிய தீவுகளுக்கும் பரவியது

இயற்கையின் அதிசயம் :

இயற்கையின் அதிசயம் :

விதைகளின் மூலம், அதிக காலம் எடுத்துக்கொண்டு வளரும் யானைக் கொழிஞ்சி, நன்கு வளரும்போது, இவற்றின் அடித்தண்டு, பெரிய மரத்தின் பருமனைக் கொண்டிருக்கும், பெரிய கிளைகளுடன் காணப்பட்டாலும், இவற்றின் தண்டுகள், சுற்றியுள்ள மரங்களின், கிளைகளைப் பற்றிக்கொண்டு, அவற்றைச் சுற்றிப் படர்ந்து வளர்கின்றன.

இவை மரங்களைப் பற்றிப் படர, இவற்றின் இலைகளே, பிடிமானம் போன்று செயல்படுவது, இயற்கையின் அதிசயம்தான். படரும் தன்மைகள், இவை முளைக்கத் தொடங்கியது முதலே, ஆரம்பித்துவிடுகிறது.

மிகப் பெரிய பழங்கள்!!

மிகப் பெரிய பழங்கள்!!

யானைக் கொழிஞ்சி, மரங்களைப் பற்றிப் படர்ந்து வளருவதைக் காண, பசுமையான அடர்ந்த இலைப்பந்தல் போன்ற தோற்றத்தில் இருக்கும்.

குளிர்காலம் முடிந்து, கோடைக்காலம் தொடங்கும் நாட்களில் இந்தக் கொடியில் பூக்கள் பூக்கும், அவற்றில் சில மட்டுமே, காயாகி, பழமாகும். இந்த பிரமாண்டமான கொடியின் காய்கள் கனிந்து பழமாகும்போது, இத்தனைப் பெரிய பழமா, என்று மலைப்பாக இருக்கும்.

கொழிஞ்சி என்ற பெயர்க்கான காரணம் :

கொழிஞ்சி என்ற பெயர்க்கான காரணம் :

யானைக் கொழிஞ்சியின், பசுமையான இலைகளுடன் கூடிய கிளைகள், யானைகளின் விருப்பமான தீனியாகும், கிளைகளை யானைகள் பற்றி ஓடிக்கும்போது, கிளைகளில் இருந்து தண்ணீர் வடியும், அந்தத் தண்ணீரே, யானைகள் இவற்றை விரும்பி உண்பதற்குக் காரணம் என்றும், யானைகளுடன், பழங்குடி இனத்தவரும், இதன் கிளைகளை ஒடித்து, கோடைக்காலங்களில், தாக சாந்தி செய்து கொள்வார்கள் என்கின்றனர். அதனால்தான், இதன் பெயர் யானைக் கொழிஞ்சி, என்றானது என்கின்றனர்.

மலைவாழ் மக்களின் உடல் நலத்திற்கு ஆதாரம் :

மலைவாழ் மக்களின் உடல் நலத்திற்கு ஆதாரம் :

யானைக் கொழிஞ்சி பழத்தில், அதிகபட்சம் முப்பது விதைகள் இருக்கும், இந்த விதைகளும் மரப்பட்டைகளுமே, மலைவாழ் மக்களின் உடல் நலத்திற்கு, அதிகம் பயன்படுகின்றன. . மூன்றடி முதல் ஆறடி உயரத்தில், உலர்ந்த விதைகளைக் கொண்டு காணப்படும் பழங்களின் பெரிய வடிவம் காரணமாகவே, யானைக் கொழிஞ்சி என்ற பெயர் வந்தது என்று சிலர் கூறினாலும், மற்றவர்கள் வேறு காரணம் கூறுவர்.

பஞ்ச காலத்தில் உணவாகும், யானைக் கொழிஞ்சி விதைகள்:

பஞ்ச காலத்தில் உணவாகும், யானைக் கொழிஞ்சி விதைகள்:

காடுகளில் கடும் வறட்சி ஏற்படும் காலங்களில், யானைக் கொழிஞ்சியின் விதையே, பழங்குடியினருக்கு, உணவாகப் பயன்படும். இதன் விதைகள் அப்படியே உண்ண, விஷமாகும், எனவே, இதை அதிக நேரம் தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது, நன்றாக காயவைத்து, நெருப்பில் சுட்டோ சாப்பிடுவார்கள். இந்த விதைகளில், புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளன.

நோய்களை குணமாக்கும் :

நோய்களை குணமாக்கும் :

பக்க வாதம் கைகால், உடல் வலி, சளி பாதிப்புகள், பார்வைக் கோளாறுகள், வயிறு மற்றும் கல்லீரல் பாதிப்புகளைப் போக்கும் வைத்தியத்தில், மரப்பட்டைகளும், விதைகளும் பயன் தருகின்றன. கொடிப்பட்டையின் சாறு, உடலுக்கு ஊட்டம் தரும் பானம்போல, மலைவாழ் மக்களால், உபயோகிக்கப்படுகின்றன.

வண்ணக்கனவுகள் தரும் :

வண்ணக்கனவுகள் தரும் :

ஆப்பிரிக்க தேசங்களில், யானைக் கொழிஞ்சியை, ஆற்றல்மிக்க கனவுகளின் கொடியாகக் கருதினர். இரவு உறங்கப்போகுமுன், விதையின் பருப்பை புகையிலை மற்றும் இறைச்சி சேர்த்து, புகை போல பிடிக்கின்றனர். இதன் மூலம், விரும்பிய கனவுகளை உறக்கத்தில் அடைய முடியும், என நம்பினார்கள்.

எலும்பு பாதிப்பு :

எலும்பு பாதிப்பு :

விதை, இலைகள் மற்றும் பட்டைகளைப் பயன்படுத்தி மருந்து தயாரித்து அதனை மஞ்சள் காமாலை, எலும்பு பாதிப்புகளைப் போன்ற நோய்களுக்கு தருகின்றனர். அதனால்தான் கொல்லிமலையில் மருந்துகளுக்கு விசேஷத்தன்மை உண்டு.

விதைகளின் நன்மை :

விதைகளின் நன்மை :

விதை, இலைகள் மற்றும் பட்டைகளை அரைத்து, அதை, உடலில் தடவி வர, வியாதிகள் அகலும் என்று நம்புகின்றனர். மேலும், உடலில் ஏற்பட்ட காயங்களை ஆற்றவும், பல் வலியைப் போக்கவும், இந்தப்பசையையே, பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

அதிர்ஷ்டம் மிக்க யானைக் கொழிஞ்சி விதைகள்:

அதிர்ஷ்டம் மிக்க யானைக் கொழிஞ்சி விதைகள்:

யானைக் கொழிஞ்சி விதைகள் அதிர்ஷ்டத்தைத் தரவல்லவை என்று, பழங்குடி இனத்தவர், குழந்தைகளின் கழுத்தில் இதன் விதைகளை கயிற்றில் கோர்த்து, அணிவிக்கின்றனர்.

ஆண்கள் மற்றும் பெண்கள் இதன் விதைகள் மூலம், செய்யப்பட அணிகலன்களை காதில் அணியும் தோடு போன்றும், கழுத்தில் அணியும் மாலைகள் போன்றும் அணிந்து கொள்கின்றனர்.

பயன்கள் :

பயன்கள் :

யானைக் கொழிஞ்சி பழத்தின் பசை, நீர்நிலைகளில் இருக்கும், மீன்கள் உள்ளிட்டவற்றை பிடிக்கப் பயன்படுகிறது.கொல்லிமலை உள்ளிட்ட மலைவாழ் மக்களில் சிலர், இந்தச்செடியின் காய்களை, விதைகளை. சோப் போலவும், ஷாம்பூ போலவும் இன்றும், பயன்படுத்தி வருகின்றனர்.

கயிறு செய்ய :

கயிறு செய்ய :

மலைவாழ் மக்களின் தீப்பந்தத்திற்கு, இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணை பயன்படுகிறது. பட்டையில் இருந்து எடுக்கப்படும் நார், வலை பின்னவும், வலுவான கயிறு செய்யவும் பயன்படுகிறது.

யானைக் கொழிஞ்சி மரங்கள் அழிவதற்குக் காரணம் :

யானைக் கொழிஞ்சி மரங்கள் அழிவதற்குக் காரணம் :

யானைக் கொழிஞ்சி ஆரம்ப முதலே, தமது வளர்ச்சிக்கு பிற மரங்களைச் சார்ந்தே இருக்கிறது. இது வளர வளர, அருகில் உள்ள மரங்களை தனது கொடியின் மூலம், வலுவாகப் பின்னி, அவற்றின் வளர்ச்சியை பாதிப்பது மட்டுமல்லாமல், சமயங்களில், அந்த மரங்களின் அழிவுக்கும் காரணமாகிவிடுகிறது.

இதனால், அரிதான செம்மரங்கள், கருங்காலி மற்றும் தேக்கு போன்ற மரங்களின் வளர்ச்சி தடைபடுகிறது. இந்த பாதிப்புகளைக் களையவே, அந்த மரங்களைப் பற்றியிருந்த யானைக் கொழிஞ்சி கொடிகளை, அழித்து விட்டனர். இதுவே, யானைக் கொழிஞ்சி கொடிகளின் அழிவுக்குக் காரணமாகி விட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Miracle benefits of Entada Rheedii tree and its uses

Miracle benefits of Entada Rheedii tree and its uses
Story first published: Wednesday, December 6, 2017, 12:30 [IST]
Subscribe Newsletter