For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூட்டு வீக்கத்தையும், சிறுநீரக பாதிப்புகளையும் சரிசெய்யும் வெள்ளரி பிஞ்சு!!

வெள்ளரிப் பிஞ்சை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத மருத்துவ பலன்களை இந்த கட்டுரையில் காணலாம்.

By Gnaana
|

மனிதருக்கு உடல் நலம் தரும் கொடி வகைகளில் உள்ள மூலிகைகளில் வெள்ளரியும் ஒன்று. வெள்ளரி பிஞ்சு, காய் மற்றும் பழம் உடலுக்கு நன்மைகள் செய்பவை. வளமான மண்களில் மட்டும் விளையும் வெள்ளரி, எல்லா சீசன்களிலும் தேவையுள்ள ஒரு சிறந்த காய்கறி வகையாகும்.

கொடியாகப் படர்ந்து வளரும் வெள்ளரியை, வீடுகளில் தோட்டங்களில், தொட்டிகளில் கூட வளர்த்து, தினமும் வெள்ளரிப் பிஞ்சை சாப்பிட்டு, உடல் நல வளம் பெறலாம்.

Eating of Cucumber helps you to treat arthritis and kidney problems

வெள்ளரியில் அதிக அளவில் காணப்படும் நீர்த்தன்மையால், நா வறட்சியைப் போக்கி, வயிற்று எரிச்சல், சிறுநீரக பாதிப்புகளை சரி செய்கிறது. செரிமான சக்தியைத் தூண்டுகிறது. இதில் புரதம், இரும்புச்சத்து தாதுக்கள் மற்றும் சுண்ணாம்புச்சத்து மிகுந்துள்ளன. சுண்ணாம்புச்சத்து, இரத்த அழுத்த பாதிப்புகளை சரி செய்யும்.

முக்குற்றங்கள் எனும் வாதம், பித்தம் கப பாதிப்புகளை உடலிலிருந்து விலக்கி, இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. உடலின் சரும பாதிப்புகளை சரி செய்து, மலச் சிக்கலையும் போக்கும்.

கல்லீரல், மூளைச் சூட்டை தணித்து, அவற்றுக்கு புத்துணர்வு தந்து, உடல் உள்ளுறுப்புகளின் இரணங்களை ஆற்றும். புகை பிடிப்பவர்களின் உடலை பாதிக்கும் நிகோடின் நச்சு பாதிப்புகளை, வெள்ளரி சரிசெய்கிறது.

கோடையில் காசு கொடுத்து, குளிர் பானங்கள், ஐஸ்க்ரீம் போன்ற உடலுக்கு ஊறு விளைவிக்கும் பொருட்களை பருகுவதைத் தவிர்த்து, வெள்ளரி பிஞ்சு, வெள்ளரி பழம் போன்ற இயற்கை தந்த கோடை குளிர் உணவுகளை சாப்பிட, கோடைக் காலத்தில் உடலில் ஏற்படும் நீர்ச் சத்து குறைபாடு பாதிப்புகள், நா வறட்சி, அதிக தாகம் போன்றவை நீங்கி, உடல் நலமடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eating Cucumber helps you to treat arthritis and kidney problems

Eating Cucumber helps you to treat arthritis and kidney problems
Story first published: Tuesday, October 3, 2017, 9:57 [IST]
Desktop Bottom Promotion