இந்த மாதிரி குளிச்சா உங்க நோய்கள் மாயமா போகுமாம்! அப்படி என்ன அபூர்வம்னு தெரிஞ்சுக்க இதப் படிங்க!!

Posted By: Gnaana
Subscribe to Boldsky

அலுவல் காரணமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கும், இரு சக்கர வாகனத்தில் அதிகம் அலைச்சலில் இருக்கும் விற்பனைப்பிரதிநிதிகளுக்கும், ஏற்படும் உடல் வலி, உடல் அசதி, மற்றும் இடுப்பு,கைகால் மூட்டுவலியை நாம் பைசா செலவில்லாமல் வீட்டிலேயே போக்கலாம்.

An amazing herbal bath to treat body pain and joint pain

ஒரு பைசா கூட செலவில்லாமல், இந்த மூலிகைக்குளியலை நாம் வீட்டிலேயே குளிக்கலாம், உடல்பு வலி,சோர்வு நீங்கி,புத்துணர்ச்சியுடன் உற்சாகத்தை உடனே அனுபவிக்கலாம். உடம்பு வலிக்கு விடை கொடுக்கும் இந்த மூலிகைக்குளியலுக்குத் தேவை, சில இலைகள் மட்டுமே! அது எந்த இலைகள்? எங்கு கிடைக்கும்? கிராமங்களில், வேலிகளுக்கு சப்போர்ட்டாக, "போத்து" எனும் சிறுமரவகை குச்சிகளை ஊன்றியிருப்பார்கள்.

அது ஆடுமாடுகளிடமிருந்து அந்த விளைநிலத்தை பாதுகாக்கும், வேலிகளுக்கும் தூணாக,இருக்கும் மேலும் அதிக உயரமும் வளராது. அத்தகைய வகைச்செடிகள்தான் நொச்சி,நுணா மற்றும் ஆடாதோடை மற்றும் வாதநாராயணா இலை,புளிய இலை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆடாதோடை இலை :

ஆடாதோடை இலை :

ஆடாதோடை செடிகள் , அவற்றின் அற்புத நோயகற்றும் தன்மைகளால், சித்தர்களால் கற்பமூலிகை எனப் பெயர் பெற்றது.

கிராமங்களில் சாலையோரம்,வீடுகளின் வாசலில் மற்றும் வயல்களின் வேலிகளில் அதிக அளவில் காணப்படும். ஆடாதோடை இலைகள் தசைவலிகளைப் போக்கும், நாட்பட்ட சளியைப்போக்கும், ஜுரம் நீக்கும். தொண்டைப்பாதிப்புகள் நீக்கி குரல்வளம் சீராக்கும்.

வாத நாராயண இலை :

வாத நாராயண இலை :

வாதநாராயணா இலை, அனைத்துவகை வாதங்களும் சரியாகும், கட்டிகள் மற்றும் வீக்கம் தீரும். உடல்வலி போக்கும்.வாதநாராயணா இலையுடன் பூண்டு சேர்த்து வேகவைத்து,உணவுடன் கலந்து சாப்பிட, வாயு மற்றும் மூட்டுவலியால் தீரும். இதன் இலை, எல்லாவகையிலும் நன்மை செய்யும்.

நுணா இலை :

நுணா இலை :

நுணா இலை, மிகுந்த மருத்துவ பலன்கள் உடையது பொதுவாக வெப்பம் தணிக்கும்,வயிற்றுக்கோளாறுகள் நீக்கும்,நுணா இலைச்சாறு இடுப்புவலி போக்கும், நுணாக்காயுடன் கல் உப்பு சேர்த்து அரைத்து காயவைத்து பல்துலக்கிவர, அனைத்துவகை பல்நோய்கள் நீங்கும். இதன் வேர்ப்பட்டை,இலைகள் மற்றும் காய்கள் பல்வேறு நோய்கள் தீர்க்கக்கூடியது.

நொச்சி இலை :

நொச்சி இலை :

நொச்சி இலை,சிறந்த கிருமிநாசினி இதன் அனைத்து பாகங்களும் பல்வேறு நோய்களுக்குத்தீர்வாகும், நொச்சி இலைச்சாறு நாட்பட்ட புண்களை ஆற்றும், இலைகளை வைத்து ஒத்தடம் கொடுக்க,சுளுக்கு விலகும், நொச்சிஇலைக் குளியல் முதுகு வலி நீக்கும்,வாதம் போக்கும். நொச்சி இலை சருகைக் கொண்டு, [ காய்ந்த இலை ] வீட்டில் மூட்டம் போட்டுவர,கொசுத்தொல்லை அடியோடு நீங்கும்.

புளிய இலை :

புளிய இலை :

புளிய இலை, உடலுக்கு குளிர்ச்சி தரும், மூட்டு வீக்கம் மற்றும் வலி போக்கும். சரி, இவற்றையெல்லாம் எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போமா!

உபயோகிக்கும் முறை :

உபயோகிக்கும் முறை :

வாதநாராயணன் இலை, நொச்சி இலை,நுணா இலை,ஆடாதோடை இலை மற்றும் புளிய இலை. இவற்றை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து நீரில் நன்கு அலசி, பின் முழுவதும் நீர் நிரம்பிய ஒரு பாத்திரத்தில் அல்லது அண்டாவில், இவையனைத்தையும் இட்டு, இதமான சூட்டில் கொதிக்கவைக்கவேண்டும்.

உடல் சூடு தாங்கும் வெப்ப அளவு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, உடல் வலி எங்கெங்கு இருக்கிறதோ, அங்கே ஒரு துணியை இந்த நீரில் நனைத்து சிறிதுநேரம் ஒத்தடம் கொடுத்துவிட்டு, பிறகு மீதி உள்ள நீரில் குளித்துவிடவேண்டும். தேவைப்பட்டால், சிறிது சாதாரண வெந்நீரில் குளித்து, குளியலை முடிக்கலாம்.குளித்தபின், வலிகள் நீங்கி,புத்துணர்ச்சியுடன் உற்சாகத்தை உணரலாம்.முயன்று பாருங்கள்! இதில் சில இலைகள் கிடைக்காவிட்டாலும், கிடைக்கும் இலைகளைக்கொண்டு, முயன்று பாருங்கள்.

 கிடைக்கும் இடங்கள் :

கிடைக்கும் இடங்கள் :

இத்தகைய அற்புத ஆற்றல்கொண்ட இந்த மூலிகைகளை நாம் காசு கொடுத்து கடையில் வாங்கத்தேவையில்லை, இவற்றையெல்லாம்,இயற்கை நமக்கு இலவசமாகவே அளிக்கிறது,இந்த வளங்களெல்லாம்,நம்முடைய கிராமங்களில் இருக்கிறது. சரி, நகரங்களில் வசிக்கும் நாங்கள் என்ன செய்வது, என்று கேட்கிறீர்களா? வார லீவு நாளில், வண்டியை எடுத்துக்கொண்டு நகரத்தின் வெளியே உள்ள, கிராமப்புறங்களில் தேடினால் நிச்சயம் கிட்டும், இல்லையெனில், உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் கிராமங்களிலிருந்து கிடைக்குமா,என்று பாருங்கள். கிடைப்பதில் சிரமமா, கவலை வேண்டாம், நாட்டுமருந்துக்கடைகளில், நொச்சி தைலம் மற்றும் வாதத்தைலம் என்பவை கிடைக்கும், அவற்றை வெந்நீரில் கொதிக்கவைத்து குளிக்கலாம்.

மேலும் நகரங்களில்,சொந்த வீடுகளில் வசிப்போர் அவசியம் வீடுகளில், நொச்சி ,நுணா,ஆடாதோடை மற்றும் வாதநாராயணா இவற்றை வளர்த்து வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

An amazing herbal bath to treat body pain and joint pain

An amazing herbal bath to treat body pain and joint pain
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more