உங்களுக்கு அடிக்கடி தும்மல் வருதா? இதை ட்ரை பண்ணுங்க!!

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் மூக்கின் வழியாக ஏதாவது தூசு அல்லது கிருமி நுழைந்துவிட்டால், உடனடியாக அதனை வெளியேற்ற மூளை தரும் சமிக்ஞைதான் தும்மல். அவற்றிற்கு எதிர்ப்பு காட்டும் விதமாக உடலுக்குள் சென்றுவிடாமல் காப்பாற்ற தும்மி அவற்றை வெளியே அனுப்ப முயலும்.

6 Instant home remedies to stop Sneezing

அந்த சமயங்களில் தும்மல் வருவது இயற்கை. ஆனால் சிலருக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் மிகவும் சென்ஸிடிவாக இருக்கும். அதனால் அடிக்கடி தும்மல் குறிப்பாக காலையில் வந்து கொண்டிருக்கும்.

லேசாக குளிர் காற்று பட்டாலோ, தூசு இருந்தாலோ தும்மிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் என்ன செய்தால் இந்த தும்மல் சரியாகும் என தெரிந்து கொள்ள இதை படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு ஏலக்காய் :

கருப்பு ஏலக்காய் :

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ள ஏலக்காயை வாசனைக்காக தனை போட்டாலும் அதன் சக்தி அலர்ஜியை கட்டுப்படுத்தும். தினமும் இரண்டு ஏலக்காயை மென்று சாப்பிட்டு பாருங்கள். தும்மல் நிற்கும்.

சிட்ரஸ் பழங்கள் :

சிட்ரஸ் பழங்கள் :

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் அதிக ஃப்ளேவினாய்டு இருப்பதால் அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றன.

கிருமிகளின் தாக்கத்தையும் கட்டுப்படுத்துவதால் தும்மல் வராமல் காக்கலாம். ஆகவே சிட்ரஸ் பழங்களை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 நெல்லிக்காய் :

நெல்லிக்காய் :

நெல்லிக்காயில் அதிக விட்டமின் சி மற்றும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருப்பதால் அவை அலர்ஜியை கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினமும் காலை மாலை இருவேளை நெல்லிக்காயை சாப்பிட்டால் தும்மல் குணமாகும்.

இஞ்சி :

இஞ்சி :

இஞ்சி கிருமிகளை எதிர்க்கும். அதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்தும். சிறு துண்டு இஞ்சி எடுத்து நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். பின் வெதுவெதுப்பான நிலையில் அதனை வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால் தும்மல் வருவது நிற்கும்.

துளசி :

துளசி :

துளசி முற்றிலும் அலர்ஜியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. கிருமிகளையும் அழிக்கும். துளசியை பச்சையாக மென்று சாப்பிடுங்கள். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தும்மல் வருவது நின்று போகும். ஜலதோஷம், காய்ச்சல் உங்களை விட்டு விலகியே இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Instant home remedies to stop Sneezing

5 Instant home remedies to stop Sneezing
Story first published: Tuesday, February 7, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter