சீந்தில் என்ற அதிசய மூலிகைப் பற்றி தெரியுமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

சீந்தில் கொடி என்பது மரத்தில் படரும் தாவரம். இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். கிராமத்தில் குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்காமலிருக்க இந்த கொடியின் தண்டினை எண்ணெயில் போட்டு அதனை தலையில் தேய்த்து குளிக்க வைப்பார்கள்.

Amazing health properties of Giloy root

இதிலிருந்து பல்வேறு நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் தாவர அறிவியல் பெயர் Tinospora cordifolia என்பதாகும். இது அற்புத அரிய மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைச் செடி. இதன் சத்துக்களைப் பற்றியும் நன்மைகளைப் பற்றியும் ஊட்டசத்து நிபுணர் அன்ஷுல் ஜெய் பரத் கூறுகிறார்.

நாள்பட்ட காய்ச்சலுக்கு :

அடிக்கடி வரும் காய்ச்சலுக்குசிறந்த மருந்தாக இந்த மூலிகை விளங்குகிறது. இதிலுள்ள குணங்கள் காய்ச்சலில் அறிகுறிகளையும் முறியடிக்கிறது. மிகவும் தீவிர காய்ச்சல்களான டெங்கு, மலேரியா மற்றும் ஸ்வைன் ஃப்ளூ ஆகியவற்றை விரட்டி அடிக்கிறது.

Amazing health properties of Giloy root

ஜீரண் சக்தியை அதிகப்படுத்தும் :

ஜீரண சக்தியை தூண்டும். மலச்சிக்கலை சரிபடுத்தும். அரை கிராம் சீந்தில் பொடியை நெல்லிக்காயுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகிவிடும்.

Amazing health properties of Giloy root

வாதத்தை சரிபடுத்தலாம் :

ஆர்த்ரைடிஸ் மற்றும் அதனால் உண்டாகும் கடுமையான மூட்டு மற்றும் இணைப்பு வலிகளை சீந்தில் கொடி கொண்டு குணமாக்கலாம். சீந்தில் தண்டை பொடி செய்து ஆயுர்வேத மருந்தகங்களில் விற்ப்பார்கள். அதனை பாலில் கலந்து கொதிக்க வைத்து, குடித்தால் ஆர்த்ரைடிஸினால்  உண்டாகும் பாதிப்புகள் விலகிப் போய்விடும்.

Amazing health properties of Giloy root

கண்பார்வையை அதிகப்படுத்தும் :

சீந்தில் பொடியை நீரில் கொதிக்க வைத்து அதனை கண்களில் தடவினால், கண் பார்வை தெளிவாக இருக்கும். இது பரவலாக இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.

சர்க்கரை வியாதி, ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் :

இதிலுள்ள ஆன்டி கிளைசமிக் குணங்கள், குளுகோஸ் ரத்தத்தில் அதிகமாவதை தடுத்து, கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதே போல், ஆஸ்துமா மற்றும் மூச்சிரைப்பு , வறட்டு இருமல் ஆகியவற்றை சரிபடுத்துகிறது.

Amazing health properties of Giloy root

நோய் எதிர்ப்பு சக்தி :

இவற்றில் சக்திவாய்ந்த ஆன்டி - ஆக்ஸிடென்ட் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும், நச்சுக்களை வெளியேற்றுகிறது. கல்லீரல் பாதிப்பிகளையும், சிறு நீரக தொற்றையும் குணப்படுத்தும் ஆற்றலுடையது.

English summary

Amazing health properties of Giloy root

An ayurvedhic root contains huge medicinal properties that keeps you healthier.
Subscribe Newsletter