For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதய ஆரோக்கியம் மோசமாக இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

|

மனித உடலில் இதயம் மிகவும் முக்கியமான உறுப்புக்களில் ஒன்றாகும். மேலும் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் சில முக்கிய செயல்பாடுகளை செய்யக்கூடியது. இருப்பினும் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையால் இதய ஆரோக்கியம் மோசமாகிறது.

2020 ஆம் ஆண்டு கூட இதய நோய்கள் உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. ஆகவே வயதைப் பொருட்படுத்தாமல், எந்த ஒரு உடல் பிரச்சனையையும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். சமீப காலமாக கூட பலர் மாரடைப்பால் மரணித்துள்ளனர்.

MOST READ: சொன்னா நம்பமாட்டீங்க... இதெல்லாம் மாரடைப்பை வரத் தூண்டும்... உஷாரா இருந்துக்கோங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோவிட்-19 மற்றும் இதய நோய்

கோவிட்-19 மற்றும் இதய நோய்

தற்போது கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் போது, பல்வேறு ஆய்வுகளில் கொரோனா வைரஸ் இதயத்திற்கு நீண்ட கால மற்றும் குறுகிய கால சேதத்தை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் ஒன்றிற்கு மேற்பட்ட இதய நோய்களைக் கொண்டவர்களுக்கு இந்த வைரஸ் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் அறியப்படுகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் வயதானவர்கள் தான் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற ஆரம்ப கால நம்பிக்கைக்கு மாறாக, தற்போது இளைஞர்கள் கூட இந்நோய் காரணமாக கடுமையான இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

30 வயதை எட்டியவரா?

30 வயதை எட்டியவரா?

என்ன தான் இளமையாக இருந்தாலும், உடலினுள் ஏதேனும் தவறாக இருந்தால், அது குறிப்பிட்ட சில அறிகுறிகளை வெளிக்காட்டும். அதிலும் 30 வயது என்பது உடல் புதிய செல்களை உருவாக்குவதை நிறுத்தும் காலமாகும். மேலும் 30-களில் நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய சில ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் அறிகுறிகளை சந்திக்கக்கூடும். இப்போது ஒருவரது இதயம் ஆரோக்கியமாக இல்லாமல், மிகவும் மோசமாக இருந்தால் வெளிப்படும் சில முக்கிய அறிகுறிகளைக் காண்போம்.

நெஞ்சு பகுதியில் அசௌகரியம்

நெஞ்சு பகுதியில் அசௌகரியம்

நெஞ்சு பகுதி பாரமாகவோ, இறுக்கமாகவோ, வலியுடனோ அல்லது ஏதேனும் குத்துவது போன்ற அசௌகரியங்களை நீங்கள் சந்தித்தால், அது உங்கள் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்பு இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் அடிக்கடி நெஞ்சு பகுததியில் அசௌகரியங்களை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி, அவரிடம் இதுக்குறித்து பேசுங்கள்.

குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல்

குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல்

சில சமயங்களில் உண்ணும் சில உணவுகளால் குமட்டல் அல்லது நெஞ்சு பகுதியில் எரிச்சல் ஏற்படலாம். ஆனால் ஒருவருக்கு இம்மாதிரியான அனுபவத்தை அடிக்கடி சந்தித்தால், அது இதயம் மிகவும் மோசமான ஆரோக்கியத்தில் உள்ளது என்பதற்கான ஓர் அறிகுறியாக இருக்கலாம்.

தொண்டை வலி

தொண்டை வலி

தொண்டை மற்றும் தாடை வலி ஆகியவை இதய ஆரோக்கியத்துடன் சிறிதும் தொடர்பில்லை என்றாலும், உங்களுக்கு தொண்டை மற்றும் தாடை வலியால், நெஞ்சு பகுதியில் அடிக்கடி வலி வந்தால், அது இதய ஆரோக்கியம் மோசமாக இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

களைப்பு

களைப்பு

நீங்கள் வேகமாக களைப்படைந்துவிடுகிறீர்களா அல்லது எந்த ஒரு கடுமையான வேலையும் செய்யாமல் மிகுதியான சோர்வை உணர்கிறீர்களா? அப்படியானால் அது உங்கள் இதயம் பலவீனமாக உள்ளது என்பதைக் குறிக்கிறது. எனவே உஷாராகி உடனே மருத்துவரை அணுகி பேசுங்கள்.

குறட்டை

குறட்டை

தற்போது இளம் வயதினர் கூட அதிகம் அவஸ்தைப்படும் ஓர் பொதுவான பிரச்சனையாக குறட்டை உள்ளது. வழக்கத்திற்கு மாறாக குறட்டையின் சப்தமானது அளவுக்கு அதிகமாக இருப்பது, மூச்சுத்திணறலின் அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் இதயத்தில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

குறிப்பு

குறிப்பு

இதயத்தைக் குணப்படுத்துவது என்பது கடினம் மற்றும் இது ஒரு நீண்ட செயல்முறை ஆகும். ஏனெனில் உடலிலேயே இதயம் தான் ஒரு நொடி கூட ஓய்வெடுக்காமல் வேலை செய்யும் உறுப்பு. எனவே நாள் முழுவதும் சற்றும் ஓய்வின்றி வேலை செய்யும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவுகளை உண்பது, அன்றாடம் உடற்பயிற்சிகளை செய்வது போன்ற நல்ல பழக்கங்களை மேற்கொள்ளுங்கள். முக்கியமாக உங்கள் இதயம் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Symptoms Of Poor Heart Health In Tamil

Here are some important symptoms of poor heart health, especially if you are in your 30s in tamil. Read on...