உங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா?

ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆரோக்கியமற்ற டயட். பெரும்பாலும், கால்சியம், கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிளேக் போன்றவை தான் தமனிகளில் படியும்.

கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு என்பது பிசுபிசுப்பான ஒரு பொருள். இது இரத்தக் குழாய்களில் படிந்து தேங்க ஆரம்பித்தால், அதன் விளைவாக உயிரையே இழக்க நேரிடும். தற்போது உலகில் பலர் மாரடைப்பால் திடீரென்று இறப்பதற்கு முக்கிய காரணமே கொழுப்புத் தேக்கம் தான். உலகில் ஐந்தில் ஒருவர் சில வகையான இதய நோயால் மரணத்தை சந்திக்கின்றனர்.

ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆரோக்கியமற்ற டயட். பெரும்பாலும், கால்சியம், கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிளேக் போன்றவை தான் தமனிகளில் படியும். தமனிகள் என்பவை இதயத்திலிருந்து ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை உடலின் திசுக்களுக்கு வழங்கும் இரத்த குழாய்கள் ஆகும்.

Cholesterol Clogged Arteries Symptoms: 5 Foods To Decrease LDL, Triglycerides Level

தமனிகளில் உள்ள பிளேக்குகளை முழுமையாக சுத்தம் செய்யும் டயட் என்ற ஒன்று இல்லை. ஆனால் சில உணவுகள் அல்லது விஷயங்கள், தமனிகளில் உள்ள பிளேக்குகளைக் குறைக்கும். அதுமட்டுமின்றி, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அன்றாட உடற்பயிற்சிகள் மற்றும் உடல் எடையைக் குறைப்பதன் மூலம் குறைக்க முடியும்.

இப்போது இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்கியிருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கும் சில உணவுகளையும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்தக் குழாயில் கொழுப்பு தேங்கியுள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்!

இரத்தக் குழாயில் கொழுப்பு தேங்கியுள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்!

பக்கவாதம்

இதயத்தில் இருந்து மூளைக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை அனுப்பும் இரத்த குழாயில் கொழுப்புக்கள் தேங்கியிருந்தால், மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து, அதன் விளைவாக பக்கவாதம் ஏற்படும்.

களைப்பு மற்றும் தலைச்சுற்றல்

களைப்பு மற்றும் தலைச்சுற்றல்

ஒருவரது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால் அல்லது உடலின் மற்ற உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த அளவு குறையும் போது, தலைச்சுற்றல் மற்றும் அதிகப்படியான களைப்பை உணரக்கூடும். குறிப்பாக பெண்களுக்கு இம்மாதிரியான அறிகுறி அதிகம் தென்படும்.

மூச்சு விடுவதில் சிரமம்

மூச்சு விடுவதில் சிரமம்

இரத்தம் ஓட்டம் சிறப்பாக இருந்தால் தான், சிரமம் ஏதுமின்றி சுவாசிக்க முடியும். ஆனால் எப்போது இரத்த ஓட்டமானது ஒருவரது உடலில் குறைவாக உள்ளதோ, அப்போது மூச்சு விடுவதில் மிகுந்த சிரமத்தை அல்லது அசௌகரியத்தை உணரக்கூடும்.

மார்பு வலி

மார்பு வலி

இதயத்தில் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் போது தான் மார்பு பகுதியில் வலி ஏற்படும். அதுவும் மார்பு பகுதியில் வலி மட்டுமின்றி, ஏதோ ஒரு அழுத்தம், இறுக்கம், பிழிவது போன்ற உணர்வு அல்லது நெஞ்செரிச்சல் போன்றவற்றையும் உணரக்கூடும்.

கீழ் முதுகு வலி

கீழ் முதுகு வலி

எப்போது கீழ் முதுகுப் பகுதியில் இரத்த ஓட்டம் குறைவாக உள்ளதோ, முதுகெலும்புகளுக்கு இடையிலான வட்டு உடையக்கூடியதாக மாறும். இதன் விளைவாக கீழ் முதுகுப் பகுதியில் உள்ள நரம்புகள் கிள்ள ஆரம்பித்து, கடுமையான வலியை உண்டாக்கும்.

விறைப்புத்தன்மை பிரச்சனை

விறைப்புத்தன்மை பிரச்சனை

ஆணுறுப்பில் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் போது சந்திக்கும் முக்கியமான பிரச்சனை தான் விறைப்புத்தன்மை கோளாறு. எனவே திடீரென்று காரணமின்றி இப்பிரச்சனையை ஒரு இளம் ஆண் சந்தித்தால், அது இரத்தக்குழாயில் உள்ள அடைப்பைக் குறிக்கலாம். எனவே இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி உடலைப் பரிசோதிக்க வேண்டியது அவசியம்.

கை மற்றும் கால் வலி

கை மற்றும் கால் வலி

கை மற்றும் கால்களில் உள்ள இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்கி இருந்தால், வலியுடன், அடிக்கடி மரத்துப் போவது மற்றும் மிகுதியான குளிரை உணரக்கூடும்.

இப்போது உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க சாப்பிட வேண்டிய உணவுகளைக் காண்போம்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஏறக்குறைய 20 ஆண்டுகளாக, உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஓட்ஸை இதயத்திற்கு நன்மை பயக்கும் உணவுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. அப்போது இருந்து, ஓட்ஸ் மக்களிடையே மிகவும் பிரபலமான உணவாகிவிட்டது. ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றும் இரத்தக் குழாய்களை சுத்தம் செய்யும் சிறப்பான உணவாகும். இதய நோய் உள்ளவர்கள் தினமும் காலையில் ஒரு பௌல் ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

பருப்புக்களான துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போன்றவற்றில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதோடு பருப்பு வகைகளில் நார்ச்சத்தும் உள்ளது. ஆகவே இதுவும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். மேலும் பருப்பு வகைகளில் கொழுப்புக்கள் குறைவு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளதால், இதய நோயாளிகள் மற்றும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு பருப்பு வகைகள் சிறப்பான உணவுப் பொருளாகும்.

மஞ்சள்

மஞ்சள்

ஆயுர்வேத மருத்துவத்தில் ஆயிரம் வருடங்களாக மஞ்சள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மஞ்சளில் உள்ள ஸ்பெஷலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான குர்குமின், இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்காமல் தடுக்கும். ஆகவே அன்றாட உணவில் மஞ்சளை தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். அதோடு சமையலில் மஞ்சளை சேர்ப்பது மட்டுமின்றி, அடிக்கடி பாலில் மஞ்சள் தூள் சேர்த்தும் குடித்து வாருங்கள். இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் என்பதால், உடலுக்கு மிகவும் நல்லது. சமீபத்திய ஆராய்ச்சியில், ப்ராக்கோலி சாப்பிட்டால் புற்றுநோய் மற்றும் இதய நோய்களின் தாக்கத்தைத் தடுக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம், ப்ராக்கோலியில் உள்ள சல்போரஃபேன் என்னும் பொருள், குறிப்பிட்ட வகையான புரோட்டீனை செயல்படச் செய்யும். இந்த புரோட்டீன்கள் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்காமல் தடுக்கும். மேலும் ப்ராக்கோலியில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயை குடிப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை குறையும். இதனால் தான் மக்களிடையே க்ரீன் டீ பிரபலமானது. ஆனால், ஆராய்ச்சியானது க்ரீன் டீயில் உள்ள EGCG என்னும் பொருள், இரத்தக் குழாய்களில் படித்துள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைப்பதாக கூறுகிறது. மேலும் இந்த பொருள் அல்சைமர் நோயைத் தடுக்கவும் உதவும். ஒருவர் தினமும் க்ரீன் டீயை ஒரு கப் குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களின் அளவு குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion