For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த எண்ணெய்களில் ஏதாவது ஒன்றில் சமைப்பது இதய நோய் ஏற்படும் ஆபத்தை பாதியாக குறைக்குமாம்...!

நீங்கள் தேர்ந்தெடுக்கும் உணவுப் பொருட்களில் கலோரி உள்ளடக்கம் குறைவாக இருந்தாலும், எண்ணெய் வகை உங்கள் ஆரோக்கியத்தில் நீண்டகால எதிர்மறை அல்லது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

|

நாம் வீட்டில் அடிக்கடி பயன்படுத்தும் சமையல் எண்ணெய் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். அதேசமயம், ஆரோக்கியமான எண்ணெய்கள் நமது இருதய ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது மட்டுமின்றி எந்த எண்ணெயில் சமைக்கிறீர்கள் என்பதும் முக்கியமானதாகும்.

Best Cooking Oils to Keep Heart Disease at Bay in Tamil

நீங்கள் தேர்ந்தெடுக்கும் உணவுப் பொருட்களில் கலோரி உள்ளடக்கம் குறைவாக இருந்தாலும், எண்ணெய் வகை உங்கள் ஆரோக்கியத்தில் நீண்டகால எதிர்மறை அல்லது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதிக கொழுப்பு உள்ளடக்கம் உள்ளவர்கள் தங்கள் சமையல் எண்ணெய் தேர்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆரோக்கியமான இதயத்திற்கு என்ன எண்ணெயில் சமைக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் பாலிபினால்கள் எனப்படும் தாவர அடிப்படையிலான கலவைகள் இருப்பதால் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது. ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் எடையை குறைக்க உதவும். ஆலிவ் எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன, அவை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன, இதனால் இதய நோய்களைத் தடுக்கின்றன.

சூரியகாந்தி எண்ணெய்

சூரியகாந்தி எண்ணெய்

சூரியகாந்தி எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது, இது இதயத்திற்கு நல்லது. சூரியகாந்தி எண்ணெய் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. சூரியகாந்தி எண்ணெய் மிகவும் சத்தான மற்றும் இதயத்தை வலுப்படுத்தும் சமையல் எண்ணெயாக கருதப்படுகிறது.

சோயாபீன் எண்ணெய்

சோயாபீன் எண்ணெய்

பெயரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது போல, இது சோயாபீன்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. சோயா எண்ணெயில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இந்த எண்ணெய் உடலில் கொழுப்பு திரட்சியின் அடுக்குகளைக் குறைக்க உதவுகிறது. இது இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.இது பல்வேறு இதய நோய்களைத் தடுக்கும் அதே வேளையில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

கனோலா எண்ணெய்

கனோலா எண்ணெய்

ராப்சீட்டில் இருந்து பெறப்பட்ட கனோலா எண்ணெய் அதிக கொழுப்பு அளவுகள் அல்லது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த எண்ணெய்களில் ஒன்றாகும். கனோலா எண்ணெய் உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது, மேலும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் வைட்டமின் ஈ மற்றும் கே நிறைந்துள்ளது மற்றும் நல்ல கொழுப்பு உள்ளது.

அவோகேடா எண்ணெய்

அவோகேடா எண்ணெய்

அவோகேடா எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே ஆகியவை இதயத்திற்கு நல்லது. இந்த எண்ணெய் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Cooking Oils to Keep Heart Disease at Bay in Tamil

Here is the list of the best cooking oils to keep heart disease at bay.
Story first published: Monday, August 1, 2022, 16:51 [IST]
Desktop Bottom Promotion