For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாரடைப்புக்கான அறிகுறி உங்கள் உடலில் தோன்றிய பின் அதிலிருந்து மீள்வது எப்படி?

|

உடலுக்குத் தேவையான அளவு இரத்தத்தை போதுமான அளவு பம்ப் செய்ய முடியாத நிலை இதயத்திற்கு ஏற்படுவதை இதய செயலிழப்பு என்று கூறுவர்.

Heart Failure

குறைவான அளவு இரத்த விநியோகம் காரணமாக பல்வேறு உடல் உறுப்புகளும் சரியாக செயல்படாத நிலை ஏற்படுகிறது. இதய தசைகள் பலவீனமானதை இது உணர்த்துகிறது, இரத்தம் பம்ப் செய்யப்படுவது குறையும்போது, எதிர்காலத்தில் பல தீவிர சிக்கல்கள் உண்டாகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்

அறிகுறிகள்

இதய செயலிழப்பு உண்டாவதற்கான அறிகுறிகள் சிலவற்றை கீழே கொடுத்துள்ளோம்.

. மூச்சுத்திணறல்

. சோர்வு மற்றும் பலவீனம்

. வேகமான இதயத்துடிப்பு அல்லது அசாதாரணமான இதயத்துடிப்பு

. திடீர் எடை அதிகரிப்பு

. பசியுணர்வு இழப்பு

. அடிவயிறு வீக்கம்

. கவனம் செலுத்துவதில் கடினம்

. மார்பு வலி

. கால் மற்றும் கால் மணிக்கட்டு வீக்கம்

MOST READ: இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரு அதிர்ஷ்டப் பொருள் கிடைக்கப்போகுது?

தடுப்பது எப்படி?

தடுப்பது எப்படி?

உங்கள் வாழ்க்கை முறை, இதய செயலிழப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். மோசமான வாழ்க்கை முறை, இதய செயலிழப்பு வாய்ப்பை நிச்சயம் அதிகரிக்கும். உங்கள் இதயம் சீராக பம்ப் செய்வதற்கு ஏற்ற முறையில் நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆரோக்கியமான இதய செயல்பாட்டை ஊக்குவிக்கும். இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற சில குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளோம். இவற்றைப் பின்பற்றி, பல்வேறு வகையான இதய செயலிழப்பு அறிகுறிகளிடமிருந்து உங்கள் இதயத்தைப் பாதுகாத்திடுங்கள்.

உடனடியாக கவனியுங்கள்

உடனடியாக கவனியுங்கள்

இதயத்தில் சிறு சிறு இதர பாதிப்புள் ஏற்பட்டால், அதனை அலட்சியம் செய்யாமல் உடனடியாக அதற்குத் தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். அப்படி செய்யாமல் விடும்போது, ஒரு சில இதய பாதிப்புகள், இதய செயலிழப்பைத் தூண்டலாம். இரத்த அழுத்த நிலையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இதய செயலிழப்பு வாய்ப்பைக் குறைக்கும் விதத்தில் உங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

மருந்துகளைச் சார்ந்து இருப்பதை ஓரளவிற்கு தவிர்க்கப் பழகுங்கள். ஒருவேளை, மாரடைப்பு தொடர்பான அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஏனென்றால், மாரடைப்பு , இதயச் செயலிழப்பிற்கு வழி வகுக்கலாம்.

MOST READ: சளியும் இருமலும் உயிரையே வாங்குதா? இந்த வீட்டு வைத்தியத்த மட்டும் ட்ரை பண்ணுங்க... போதும்

உணவைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்

உணவைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்

இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுவதால், இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் குறைக்கப்படுகிறது. உங்கள் தினசரி உணவில், கொழுப்பு அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறே, சர்க்கரை மற்றும் உப்பின் அளவையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

நல்ல கொழுப்பு உணவுகள், நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் இணைத்துக் கொள்ளுங்கள். இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் சில இதோ உங்களுக்காக.. இலையுடைய பச்சைக் காய்கறிகள், முழு தானியம், பெர்ரி, நட்ஸ், விதைகள், ஒரு சிறு அளவு டார்க் சாக்லேட்.

புகைப்பழக்கத்தைக் கைவிடுங்கள்

புகைப்பழக்கத்தைக் கைவிடுங்கள்

இதய நோய் ஏற்பட ஒரு மிக முக்கியக் காரணம், புகை பிடிப்பது. நிகோட்டின் உட்கொள்ளல், இரத்தக் குழாய்களைச் சுருக்கி, இதயம் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. கார்பன் மோனோ ஆக்சைடு, இரத்தத்தில் பிராணவாயு அளவைக் குறைக்கிறது, இதனால், இரத்தக் குழாய்களில் சேதம் ஏற்படுகிறது. புகை பிடிக்க வேண்டும் என்ற உங்கள் ஆவலை பல வழிகளில் கட்டுப்படுத்த முயற்சிப்பதால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

நீண்ட நேரம் உட்கார்ந்தபடி இருக்க வேண்டாம்

நீண்ட நேரம் உட்கார்ந்தபடி இருக்க வேண்டாம்

இன்றைய நாட்களில் பலரும் கணினி முன் அமர்ந்து வேலை செய்யத் தொடங்கி விட்டனர். அதனால் ஒரு நாள் முழுக்கவே உட்கார்ந்தபடியே முடிந்து விடுகிறது. வழக்கமான உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் இருப்பதில்லை. ஆனால் நீண்ட நேரம் உட்கார்ந்துக் கொண்டே இருப்பதால் இதய நோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

ஆகவே முடிந்த அளவுக்கு உட்கார்ந்திருக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளவும். மதிய உணவிற்குப் பின் சற்று நேரம் உங்கள் அறையிலேயே நடக்கலாம். உடற்பயிற்சி செய்வதற்கு உங்கள் நேரத்தில் சிறிதை ஒதுக்கி உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

MOST READ: இப்படி வர்ற ஆபத்தான கொப்புளத்த எப்படி செலவில்லாம சரி பண்ணலாம்?

உடல் எடையை நிர்வகியுங்கள்

உடல் எடையை நிர்வகியுங்கள்

உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், உடனடியாக எடை குறைப்பை மேற்கொள்ளுங்கள். உடல் பருமன், இதய நோய் ஏற்படுவதற்கான ஒரு மிகப் பெரிய அறிகுறியாகும். உடல் பருமன், உங்கள் இரத்த அழுத்த நிலையை அதிகரிக்கலாம், இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு கேடு தரும் விஷயமாகும். அதிக உடல் செயல்பாடுகள் மூலம் உங்கள் உடல் எடையைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு ஆரோக்கியமான இதயத்திற்குத் தேவையானது சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே. உங்கள் வாழ்க்கை முறையில் மிகச் சிறிய மாற்றம் செய்வதால் , உங்கள் இதய ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது. ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை தேர்வு செய்வதால், முழுக்க முழுக்க மாத்திரை மருந்துகளை சார்ந்து இருக்கும் நிலையைப் போக்கி ஆரோக்கியமாக வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: heart இதயம்
English summary

How to Fight the Symptoms of Heart Failure

Heart failure affects nearly 6 million Americans. Roughly 670,000 people are diagnosed with heart failure each year. It is the leading cause of hospitalization in people older than age 65.
Story first published: Thursday, April 11, 2019, 14:45 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more