Latest Updates
-
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா?
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரு அதிர்ஷ்டப் பொருள் கிடைக்கப்போகுது?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும்.

எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
புதிய இடங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். நீங்கள் நினைத்த முயற்சிகள் நிறைவேறும். நிர்வாகத்தில் உள்ளவர்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய நிலுவையில் இருந்த கடன் தொல்லைகள் தீரும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். தொழிலில் பல புதிய நபர்களை பங்குதாரர்களாகச் சேர்ப்பீர்கள். உங்களுடைய எல்லா காரியங்களுக்கும் உங்களுடைய நண்பர்கள் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எந்தவொரு காரியத்தையும் கூடுதல் நிதானத்துடன் அணுக வேண்டியது நல்லது. நிலுவையில் இருந்த கடன் தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய தொழிலை மேம்படுத்துவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். மனதுக்குள் இருந்து வந்த சங்கடங்கள் குறைந்து மனதில் ஒரு தெளிவு பிறக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய பேச்சுத் திறமையினால் மனதுக்குள் பெருமையடையும் படி விஷயங்கள் நடக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரங்கள் சம்பந்தப்பட்ட புதிய யுக்திகளைக் கற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்கின்ற வேலையில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்புண்டு. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

கடகம்
வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். உங்களுடைய உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர ஆரம்பிக்கும். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். கேளிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுக்குக் கிடைக்கப் போகும் கௌரவப் பதவிகளால் உங்களுடைய மதிப்பு உயர ஆரம்பிக்கும். வெளிவட்டாரங்களில் உங்களுடைய மதிப்பு உயரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்
உங்களுக்கு தேவையில்லாத வீண் அலைச்சல்கள் ஏற்படும். வாகனங்களில் பயண்ஙகள் மேற்கொள்கின்ற பொழுது கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். உங்களுடைய சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். உங்களுக்கான ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். உங்களுடைய உறவினர்களால் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். தொழில் நிமித்தமாக வெளியிடப் பயணங்கள் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமாகவும் இருக்கும்.

கன்னி
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். புதிய ஆட்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட வீண் அலைச்சல்களால் உங்களுக்கு லாபம் உண்டாகும். பல நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும். எந்த பிரச்சினையாக இருநு்தாலும் நிதானமாகக் கையாண்டு வெற்றி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

துலாம்
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. முக்கியப் பணியில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வீண் கவலைகள் தோன்றும் வாய்ப்புண்டு. உங்களுடைய செயல்பாடுகளில் சிறிது கவனம் தேவை. வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே உள்ள வாக்குவாதங்கள் குறைந்து அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். பெற்றோர்களுடைய சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்
முக்கியப் பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பெற்றோர்களின் உடல்நலத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து பணம் சேமிக்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகளைச் சமாளித்து லாபம் அடைவீர்கள். நீங்கள் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

தனுசு
புதிதாக வேலை தேடுகின்றவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் மூலமாகத் தொழிலை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் உண்டாகும். உங்களுடைய உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கச் செய்யும். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் கருத்து மோதல்கள் தோன்றலாம். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாகவும் இருக்கும்.

மகரம்
சர்வதேச வணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் மூலமாக உங்களுக்குச் சாதகடான நிலைகள் உருவாகும். வெளிநாடுகளில் பயணங்கள் மேற்கொள்வதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகள் கைகூடி வரும். பண விஷயங்களில் நீங்கள் சாதுர்யமாகப் பேசி சமாளிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

கும்பம்
நால்நடைகள் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்களுடைய ஆதரவினால் உங்களுக்கு மனம் மகிழ்ச்சி அடையும். பரம்பரை சொத்துக்களால் பெரும் நன்மை உண்டாகும். உங்களுடைய செயல்பாடுகளால் வேகம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்கத் தரப்பிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த பணிகள் சிறப்பாக முடியும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலம் நிறமாகவும் இருக்கும்.

மீனம்
கடல்வழிப் பயணங்களால் றன்மை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். வாரிசுகளின் மூலமாக உங்களுக்கு விரயச் செலவுகள் உண்டாகும். உயர் கல்விக்கான முயற்சிகள் நீங்கள் எதிர்பார்த்த பலன்களைத் தரும். கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்திப் பாராட்டுக்களைப் பெறுவார்கள். உடன் பிறப்புகளிடம் நிதானமாக நடந்து கொள்வது நலம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











