For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல் அட்டாக் வந்தபின் என்ன உணவு சாப்பிட வேண்டும்? எதெல்லாம் சாப்பிடக்கூடாது?

|

இதய நோய்கள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் முதலில் நாம் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும். ஏனெனில் உணவிற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நிறையவே தொடர்பு உள்ளது. இப்பொழுது எல்லாம் 25 வயது இளைஞர்களுக்கு கூட ஹார்ட் அட்டாக் வந்து விடுகிறது. காரணம் நாம் உண்ணும் உணவுப் பழக்கம் தான். இந்த சின்ன வயசிலே அதிக கொலஸ்ட்ரால் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது இதயத்தை பாழாக்கி விடுகிறது என்று டாக்டர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹார்ட் அட்டாக்

ஹார்ட் அட்டாக்

அதிலும் நீங்கள் ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்த நபர் என்றால் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உணவை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

நீங்கள் உண்ணும் உணவே போதும் திரும்பவும் ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க முடியும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று அறிவியல் பூர்வமாக அவர்கள் நிரூபித்துள்ளனர்.

MOST READ: என் வயசு 28 தான்; ஆனா 70 பொண்ணுங்கள அனுபவிச்சிருக்கேன்... இப்ப சொந்த வாயால சூன்யம் வெச்சுக்கிட்டேன்

இதய ஆரோக்கிய உணவுகள்

இதய ஆரோக்கிய உணவுகள்

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் மற்றும் ஐரோப்பிய கார்டியாலஜிசியின் அமைப்பு கருத்துப்படி நிறைய பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது. சேச்சுரேட்டேடு கொழுப்பு, டிரான்ஸ் கொழுப்பு மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் வேண்டாம் என்கின்றனர். அதே மாதிரி வாரத்தில் இரண்டு நாட்களாவது மீன்கள் சாப்பிடுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.

இப்படி இதய ஆரோக்கியத்திற்காக மருத்துவர்கள் கூறும் உணவு முறையை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

மத்திய தரைக்கடல் டயட்

மத்திய தரைக்கடல் டயட்

இது மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மக்களால் பின்பற்றி வரும் உணவு முறையாகும். இதில் நிறைய பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், பயிறு, நட்ஸ், முழு தானியங்கள இவற்றுடன் கொஞ்சமாக சீஸ், முட்டை, யோகார்ட் சேர்த்து கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் மறக்காமல் இவர்கள் கடல் வகை உணவுகளை சாப்பிடுகிறார்கள். மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் காய்கறிகளை வதக்க செய்ய ஆலிவ்(மோனோசேச்சுரேட் கொழுப்பு) ஆயிலை மட்டும் பயன்படுத்துகின்றனர். இதனுடன் ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ் ரெட் வொயின் எடுத்துக் கொள்கிறார்கள்.

நிரூபிக்கப்பட்ட உண்மை

நிரூபிக்கப்பட்ட உண்மை

இந்த மத்திய தரைக்கடல் உணவுப் பழக்கம் ஹார்ட் அட்டாக்கை தடுக்கிறது என்று புதிய சான்றுகள் தெரிவிக்கின்றன. அதே மாதிரி ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்த நபர்கள் கூட இதை எடுத்துக் கொண்டு வந்தால் மறுபடியும் ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கப்படுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

MOST READ: மார்பு, மார்பு காம்புகளை எப்படி பராமரிக்க வேண்டும்? பெண்களுக்கும் சீம்பால் வருமா? எப்போது வரும்?

ஆராய்ச்சி ரிப்போர்ட்

ஆராய்ச்சி ரிப்போர்ட்

இந்த குறைந்த கொழுப்பை உடைய உணவு முறையை கடந்த 25 வருடங்களில் மட்டும் அதிகமான ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்ட 7000 மக்களுக்கு இதை பரிந்துரைத்தனர் . ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்தது என்னவென்றால் 5 வருடங்கள் இந்த உணவு முறையை பின்பற்றி வந்தவர்களுக்கு ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்றவற்றின் தாக்குதல்கள் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

பக்கவாதம்

பக்கவாதம்

இரண்டாவது சோதனைப்படி கிட்டத்தட்ட 55 வயதுடைய 30,000 ஹார்ட் அட்டாக் மற்றும் டயாபெட்டீஸ் கொண்ட மக்கள் இந்த உணவுப் பழக்கத்தை 56 மாதங்கள் பின்பற்றும் படி பரிந்துரைக்கப்பட்டது. இதிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் இந்த உணவுப் பழக்கத்தை பின்பற்றியவர்களுக்கு இதய நோய்கள், ஹார்ட் அட்டாக், பக்கவாதம் வரும் அபாயம் குறைந்திருந்தது ஆச்சர்யத்தை அளித்தது.

உங்களுக்கான சிறந்த உணவு

உங்களுக்கான சிறந்த உணவு

மேற்கண்ட ஆராய்ச்சி படி பார்த்தால் இந்த மத்திய தரைக்கடல் உணவு முறை ஹார்ட் அட்டாக் நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஒரு தடவை ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் கூட இந்த முறையை பின்பற்றி வந்தால் மறுபடியும் ஹார்ட் அட்டாக் வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

MOST READ: உங்க ஆண்குறியில வெள்ளை வெள்ளையா இருக்கா? அது எதனால வருதுனு தெரியுமா?

பின்பற்ற வேண்டியவை

பின்பற்ற வேண்டியவை

பதப்படுத்தப்பட்ட உணவுகள் வேண்டாம்.

பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் (பிரட், பாஸ்தா), ஒர் கைப்பிடியளவு நட்ஸ் என்று சாப்பிடுங்கள்.

வெண்ணெய் போன்றவற்றை தவிர்த்து ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளுங்கள்.

சிவப்பு இறைச்சி வேண்டாம் அல்லது மாதத்திற்கு இரண்டு முறை போதும்

வாரத்திற்கு இரண்டு முறையாவது மீன்கள், கோழி சாப்பிடுங்கள்

இரவு டின்னரின் போது ஒரு கிளாஸ் ரெட் வொயின் சாப்பிடுங்கள்.

இந்த உணவு முறையை பின்பற்றி வருவதால் தான் மத்திய தரைக்கடல் பகுதி மக்களுக்கு ஹார்ட் அட்டாக் அபாயம் இருப்பதில்லை. நாமும் இதைப் பின்பற்றி நலமுடன் வாழ்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Choosing Foods for a Post-Heart Attack Diet

There is no “official” definition of a Mediterranean diet. This is the name chosen to reflect the traditional eating habits of people who live in the Mediterranean regions. A Mediterranean diet is largely a plant-based diet that includes lots of fruits, vegetables, legumes, nuts, and whole grains, along with moderate servings of cheese, eggs, and yogurt, and with a few portions each week of fish and other seafood, and poultry.
Story first published: Friday, February 8, 2019, 17:10 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more