For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாரடைப்பு ஒருமுறை வந்தபின் என்ன உணவு சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது...

மாரடைப்பு மற்றும் பக்கவாதங்கள் வந்த பிறகு, என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுங்கள்.

|

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். அதிலும் நமது இதயம் மற்றும் இரத்த குழாய்களின் ஆரோக்கியத்திற்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் அவசியம்.

Best Food to Eat After Stroke

சரியான ஊட்டச்சத்துக்கள் இன்மையால் நமக்கு பக்கவாதம் மற்றும் ஆரோக்கிய குறைபாடு ஏற்படும் ஆபத்து இருக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே ஆரோக்கியமான உணவுகள் உங்களை பக்கவாதத்திலிருந்து காப்பாற்றுகிறது என்றே கூறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டயட்டின் முக்கியம்

டயட்டின் முக்கியம்

ஒரு முறை நீங்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் மறுபடியும் பக்கவாதம் வர வாய்ப்புள்ளது. இதை தடுக்க ஒரே வழி உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும். உடற்பயிற்சி, உடல் எடை பராமரிப்பு, புகைப்பிடிக்காமல் இருத்தல் மற்றும் ஆல்கஹால் தவிர்த்தல் போன்றவை உங்களுக்கு பக்கவாதம் வரும் அபாயத்தை குறைக்கிறது என்கிறார்கள்.

க்ளீவிலேண்டு கிளினிக் ஆய்வு கூறுகிறது. எனவே பக்கவாதம் வந்தவர்கள் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள், சர்க்கரை, கொலஸ்ட்ரால் மற்றும் சேச்சுரேட்டு கொழுப்பு உணவுகள் போன்றவற்றை தவிருங்கள்.

MOST READ: ராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு?

டயட் பரிந்துரை

டயட் பரிந்துரை

பக்கவாதம் வந்த பிறகு உங்கள் இதயம் மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்க சில உணவுப் பழக்கத்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதன் படி க்ளீவிலேண்டு கிளினிக் கருத்துப் படி தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகள் பக்கவாத நோயாளிகளுக்கு நிறைய நன்மைகளை தருகிறது.

இதில் நார்ச்சத்துகள் மட்டும் இல்லாமல் நிறைய ஊட்டச்சத்துக்களும் அடங்கியிருப்பது நிறைய இதய ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. நேஷனல் ஸ்டோக் அசோசியேஷன் படி சிட்ரஸ் பழங்கள் மற்றும் பிரக்கோலி போன்றவை பக்கவாதத்தை தடுக்கக் கூடியதாக உள்ளது. அதே மாதிரி தானியங்களில் நிறைய நார்ச்சத்துக்கள், விட்டமின்கள், மினரல்கள் உள்ளன.

MOST READ: 13 வயசுல 4 இன்ச் அளவு இருந்தா நார்மலா? பிறப்புறுப்பின் சரியான அளவை தெரிந்து கொள்வது எப்படி?

அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள்

அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள்

இந்த விட்டமின்கள் மற்றும் மினரல்கள் பக்க வாதம் வராமல் தடுக்க உதவுகிறது. இதில் போலிக் அமிலம், கால்சியம், விட்டமின் பி6 மற்றும் பி12 மற்றும் பொட்டாசியம் போன்றவை பக்கவாதம் வராமல் தடுக்க உதவும் ஊட்டச்சத்துக்கள். இந்த ஊட்டச்சத்துக்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகளவு இருப்பதால் மறுபடியும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது.

நேஷனல் ஸ்டோக் அசோசியேஷன் ரிப்போர்ட் படி போலிக் அமிலம் அல்லது விட்டமின் பி பற்றாக்குறை நிறைய பேரிடம் இருக்கிறது இதுவே பக்கவாதம் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. எனவே இந்த விட்டமின்கள் அடங்கிய வாழைப்பழம், பயிறு வகைகள், தானியங்கள், மீன்கள் போன்றவற்றை சாப்பிடுங்கள். சில நேரங்களில் மருத்துவரின் பரிந்துரை பேரில் விட்டமின் மாத்திரைகளைக் கூட எடுத்துக் கொள்ளலாம்.

மத்திய தரைக்கடல் உணவுப் பழக்கம்

மத்திய தரைக்கடல் உணவுப் பழக்கம்

மெரிடேரியன் டயட் ஒரு ஆரோக்கியமான உணவுத் திட்டம் ஆகும். அதிலும் பக்கவாத நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த முறை. இது 60% வரை பக்கவாதம் வரும் அபாயத்தை குறைக்கிறது. ஏனெனில் இந்த டயட்டில் ஆரோக்கியமான எண்ணெய்களான ஆலிவ் ஆயில், மீன்கள், கொஞ்சம் கொலஸ்ட்ரால் உணவுகள், சேச்சுரேட்டு உணவுகள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அதே மாதிரி பழங்கள், காய்கறிகளான கேரட், ப்ளூ பெர்ரி, திராட்சை போன்றவைகளும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மீன்கள், பாலசெமிக் வினிகர், கேனோலா ஆயில் போன்றவை களும் சேர்க்கப்படுகின்றன.

MOST READ: உங்க கல்லீரலை ஒரு ராத்திரியில சுத்தம் செய்யணுமா?... இந்த தண்ணிய குடிங்க...

ஏற்ற உணவுகள்

ஏற்ற உணவுகள்

பக்கவாத நோயாளிகள் ஒரு வித்தியாசமான உணவு முறையை கையாள வேண்டியிருக்கிறது. பக்கவாதம் வந்தவர்களால் உணவை மென்று சாப்பிடுவது கடினமாக இருக்கும். எனவே இவர்களுக்கு நீர்ம வடிவில் கூலாக, ஜூஸாக உணவை வழங்கலாம்.

அதே மாதிரி இறைச்சி போன்றவற்றை அரைத்து கொடுக்கலாம். வலுவில்லாத மென்மையான உணவுகள் ஏற்றதாக இருக்கும். திரவ வடிவில், ஈரமான உணவுகள், மென்மையான ஸ்நாக்ஸ் வகைகள் போன்றவற்றை நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளலாம். இது பக்கவாத நோயாளிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Food to Eat After Strokes

If you’ve survived a stroke, you may find that you need to make changes to your diet: To prevent another stroke, you’ll want to eat foods that are healthier for your cardiovascular system and help lower cholesterol and blood pressure.
Desktop Bottom Promotion