For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாருக்கெல்லாம் கார்டியாக் அரெஸ்ட் வர வாய்ப்புள்ளது தெரியுமா?

|

பிரபல இந்திய நடிகை ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த போது திடீரென்று கார்டியாக் அரெஸ்ட்ரால் மரணத்தைத் தழுவியது பலருக்கும் அதிர்ச்சிகரமாக இருந்தது. 54 வயதுடைய ஸ்ரீதேவி மரணத்திற்கு முன் தன் கணவருடன் நன்கு பேசிக் கொண்டிருந்தார். இரவு டின்னருக்கு வெளியே போகலாம் என்று திட்டம் தீட்டியதால், ஸ்ரீதேவி குளித்துவிட்டு தயாராகி வருகிறேன் என்று குளியலறைக்கு சென்றார். குளிப்பதற்கு சென்ற அவர் திடீரென்று கார்டியாக் அரெஸ்ட் வந்து உயிரைத் துறந்தார்.

Causes Of Cardiac Arrest You Should Know

கார்டியாக் அரெஸ்ட் அவ்வளவு கொடியதா என்று நீங்கள் கேட்கலாம். உண்மையிலேயே இது மிகவும் மோசமான ஒன்று. இது வருவதற்கு முன்பு எந்த ஒரு அறிகுறியும் தென்படாது. அப்படி வந்தால், உயிரையே பறித்துவிடும். பலரும் கார்டியாக் அரெஸ்ட் மற்றும் மாரடைப்பை ஒன்று என நினைக்கிறார்கள். மாரடைப்பு வந்தால் கூட ஒருவரைக் காப்பாற்றி விடலாம். ஆனால் கார்டியாக் அரெஸ்ட் வந்தால், இதயம் செயலிழப்பதோடு, உடலின் மற்ற உறுப்புகளுக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் தடைப்பட்டு, அனைத்து உறுப்புக்களும் செயலிழந்து மரணத்தை தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

உங்களுக்கு கார்டியாக் அரெஸ்ட் என்னும் இதய முடக்கம் எந்த காரணங்களுக்கு எல்லாம் வரும் என தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். இங்கு எந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு எல்லாம் கார்டியாக் அரெஸ்ட் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதயத்தசைநோய் (Cardiomyopathy)

இதயத்தசைநோய் (Cardiomyopathy)

இதயத்தசை நோய் என்பது இதய தசைகளானது மிகவும் கடினமாகி, சுருங்கி விரிய முடியாத நிலையாகும். இந்த நோய் இருந்தால், இதய தசைகய் நீண்ட நேரம் போதுமான இரத்தத்தை வழங்காமல், இரத்தத்தை அழுத்துவதை நிறுத்தி வைத்திருக்கும். ஒவ்வொரு முறை இதயம் இரத்தத்தை அழுத்தும் போதும், இதயத்துடிப்பானது 30 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

இதய செயலிழப்பு

இதய செயலிழப்பு

இதய செயலிழப்பு என்பது உடலுறுப்புக்கள் மற்றும் திசுக்கள் போதுமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனைப் பெறாத நிலையில் ஏற்படும் நிலையாகும். இந்நிலையால் நுரையீரல் மற்றும் இதர உறுப்புக்களில் இருந்து இதயத்திற்கு வரும் இரத்தம் மீண்டும் அழுத்துவதற்கேற்ப போதுமான அளவில் இருக்காது. இதனால் இரத்த நாள தந்துகிகளில் இருந்து நீர்க்கசிவு ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு கார்டியாக் அரெஸ்ட் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கரோனரி ஆர்டரி நோய்

கரோனரி ஆர்டரி நோய்

இதயத்தில் உள்ள தமனிகள் பொதுவாக மென்மையாக இருக்கும். ஆனால் எப்போது தமனிகளின் சுவர்களில் காறைகளை படிய ஆரம்பிக்கிறதோ, அப்போது தமனிகள் குறுக ஆரம்பிக்கும். இதன் விளைவாக இதய தசைகளுக்கு இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் செல்வது தடுக்கப்பட்டு, அதன் விளைவாக திடீரென்று கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட வாய்ப்புள்ளது.

ப்ரூகாடா சிண்ட்ரோம்

ப்ரூகாடா சிண்ட்ரோம்

ப்ரூகாடா சிண்ட்ரோம் என்பது மிகவும் அரிதான மரபுவழி இதயக் கோளாறு ஆகும். இது இதயத்தின் மின் அமைப்பிற்கு இடையூறு விளைவிக்கும். ப்ரூகாடா சிண்ட்ரோமின் முதன்மையான அறிகுறிகளுள் ஒன்று, வழக்கத்திற்கு மாறான இதயத் துடிப்பு மற்றும் இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அதனால் திடீரென்று கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட வாய்ப்புளது.

மார்பன் சிண்ட்ரோம்

மார்பன் சிண்ட்ரோம்

இது ஒரு மரபணுக் கோளாறு. இது உடலின் அனைத்து உறுப்புக்களிலும் உள்ள இணைப்புத்திசுக்களை பாதிக்கும். பெரும்பாலும் இதயம், இரத்தநாளங்கள், கண்கள், எலும்பு மண்டலம் போன்ற பகுதிகளைத் தாக்கும். இதில் 2 வகைகள் உள்ளன. அவையதவன: டைப் 1 மற்றும் டைப் 2 ஆகும்.

பிறவியிலேயே இதய நோய்

பிறவியிலேயே இதய நோய்

இந்த நோயானது வயிற்றில் சிசுவாக இருக்கும் போதே ஏற்படும் ஓர் இதய பிரச்சனையாகும். கருவில் வளரும் குழந்தையின் ஆரம்ப கால வளர்ச்சியில் ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால், குழந்தைகளின் இதயம் சாமாரணமானதாக இருக்காது. ஒருவேளை கர்ப்பிணிப் பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருந்தால் அல்லது வேறு ஏதேனும் குறிப்பிட்ட மருந்துகளை எடுக்க வேண்டி இருந்தாலோ, அது குழந்தைக்கு பிறவிலேயே இதய நோயின் அபாயத்தை அதிகரித்துவிடும். மேலும் இந்த குழந்தைக்கு கார்டியாக் அடெஸ்ட் வரும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

இதய மருந்துகள்

இதய மருந்துகள்

இதய மருந்துகள் இதய துடிப்பின் வேகத்தை அதிகரித்து, திடீர் கார்டியாக் அடெஸ்ட்டை உண்டாக்கும். இதய துடிப்பின் வேகத்தை சரிசெய்வதற்கு பயன்படுத்தப்படும் மருந்துக்ள, வெண்ட்ரிகுவார்களின் ஆபத்தான துடிப்பை உண்டாக்கிவிடும். இதனால் இரத்தத்தில் உள்ள மக்னீசியம் மற்றும் பொட்டாசியத்திள் அளவில் திடீரென்று மாற்றம் ஏற்பட்டு, இதனால் இறப்பை சந்திக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

முந்தைய மாரடைப்பு

முந்தைய மாரடைப்பு

ஒருவருக்கு ஏற்கனவே மாரடைப்பு வந்திருந்தால், அத்தகையவர்களுக்கு கார்டியாக் அரெஸ்ட் வருவதற்கு வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. அதிலும் மாரடைப்பு வந்து மாதம் கழித்து, திடீரென்று கார்டியாக் அரெஸ்ட் வருவதற்காக அபாயம் அதிகமாகவே உள்ளது. எனவே கவனமாக இருங்கள்.

அசாதாரண இரத்த நாளங்கள்

அசாதாரண இரத்த நாளங்கள்

பிறக்கும் போதே இதயத்தில் உள்ள தமனிகள் அசாதாரணமாக இருந்தால், அவர்கள் திடீரென்று மரணமடையவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுவும் இம்மாதிரியான பிரச்சனையை கொண்டவர்கள், கடுமையான உடல்ரீதியான செயல்பாடுகள் அல்லது தடகள நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, அட்ரினலைன் வெளியிடப்பட்டு, திடீரென்று கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவாற்கான அபாயம் அதிகரிக்குமாம்.

இதய வால்வு நோய்

இதய வால்வு நோய்

இதயத்தில் உள்ள வால்வுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வால்வுகள் பாதிக்கப்பட்டிருந்தால், இதயத்தில் இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படும். இதனால் இதயம் மிகவும் சிரமப்பட்டு இரத்தத்தை தமனிகளின் வழியே மற்ற உறுப்புகளுக்கு அனுப்ப வேண்டியிருக்கும். இதய வாய்வுகள் ஒருவேளை சரியாக மூடிப்படாமல் இருந்தால், அழுத்தப்பட்ட இரத்தம் மீண்டும் பின்னோக்கி வந்து, திடீரென்று கார்டியாக் அரெஸ்ட்டை உண்டாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Causes Of Cardiac Arrest You Should Know

Cardiac arrest strikes immediately without any warnings, so it is considered as being very deadly. Know about the causes of cardiac arrest.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more