Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
இருதய நோய்களில் இருந்து மீண்டு வந்த 200,000 பேர் தினமும் இதை தான் சாப்பிட்டார்களாம்!
இருதய நோய்களில் இருந்து மீண்டு வந்த 200,000 பேர் தினமும் இதை தான் சாப்பிட்டார்களாம்!
உங்களுக்கு சீஸ் சாப்பிடுவது மிகவும் பிடித்த விஷயம் என்றால் இந்த செய்தி உங்களுக்கு இனிமையான ஒரு செய்தியாக இருக்கும். புதிய கண்டுபிடிப்பு ஒன்றில் ஆராய்ச்சியாளர்கள் தினமும் 40 கிராம் அளவு சீஸ் சாப்பிடுவது உங்களது இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறியுள்ளனர்.
நாம் இதுவரை சீஸ் ஒரு ஆரோக்கியமற்ற உணவு என்று நினைத்து தான் ஒதுக்கி இருப்போம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை.. நாம் எந்த அளவு சாப்பிடுகிறோம் என்பதை பொருத்து தான் அது ஆரோக்கியமான உணவா இல்லை ஆரோக்கியமற்ற உணவா என்பது மாறுபடும். இந்த பகுதியில் வெண்ணெய்யின் ஆரோக்கிய நலன்களை பற்றி காணலாம்.

கார்டிவாஸ்குலர் நோய்
புதிய ஆய்வு ஒன்று நாம் ஆரோக்கியம் இல்லை என்று நினைத்து சாப்பிடாமல் இருக்கும் இந்த சீஸ் ஆனது உடலுக்கு மிகவும் நல்லது என்றும் இது கார்டிவாஸ்குலர் இருதய நோயில் இருந்து நம்மை காப்பாற்ற உதவுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

இதில் என்ன இருக்கிறது?
இந்த சீஸ் அனைவருக்குமே பிடிக்கும் என்பதில் துளியும் கூட சந்தேகமே இல்லை என்று சொல்லலாம். இதில் உடலுக்கு மிக முக்கியமான கால்சியம், ஜிங்க், விட்டமின் ஏ மற்றும் பி 12 ஆகியவை உள்ளன. இந்த சீஸ்ஸில் உடலுக்கு தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

ஏன் தீங்கு எங்கிறோம்?
நாம் அதிகமாக சீஸ் சாப்பிடுவது என்பது உடல் எடையை அதிகரிக்கும் என்றும், உடல் எடை அதிகரிப்பதன் மூலமாக இது இருதய பிரச்சனைகள் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறுப்படுகிறது. இது உண்மை என்றாலும் நாம் அதிகமாக சாப்பிடுவதன் காரணமாகவே இந்த பிரச்சனை உண்டாகும்.

ஆய்வு
இந்த சீஸ் சாப்பிட்டால் உண்மையில் இருதய நோய் பாதிப்பு உண்டாகுமா என்பது பற்றி நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 200,000 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் 10 ஆண்டுகளாக தொடர்ந்து சீஸ் சாப்பிட்டு வந்தார்கள்.. 10 ஆண்டுகள் கழித்து இவர்களது உடலை பரிசோதனை செய்து பார்த்த போது அவர்களுக்கு எந்தவித இருதய கோளாறும் உண்டாகவில்லை..

எப்படி இது சாத்தியம்?
ஆய்வில் கலந்து கொண்டவர்கள் தினசரி 40 கிராம் அளவு சீஸ் மட்டுமே சாப்பிட்டு வந்தனர். அதாவது 1.41 அவுண்ஸ் ஆகும். இதனால் அவர்களுக்கு 10 சதவீதம் அளவு இருதய ஸ்ரோக் வரும் பிரச்சனை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 14 சதவீதம் அளவுக்கு அவர்கள் கார்டிவாஸ்குலர் இருதய நோயில் இருந்து தப்பித்துள்ளனர்.

பல் குழிவுறுதல்
சீஸ் ஒரு சுவையான, ஆரோக்கியமான் உணவாகும். ஒரு அவுன்ஸ் சீஸ் 27mg கொழுப்பு சத்தை வழங்குகிறது. இது அதிக அளவு கொழுப்பு சத்தாகும். ஆனாலும் இதில் வேறு சில சத்துக்களும் அடங்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு அவுன்ஸ் சீஸில் 7gm புரோட்டின் அடங்கியுள்ளது. 20% கால்சியம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் கொழுப்பு இழப்பை ஊக்குவிக்க மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பல் குழிவுறுதலைத் தடுக்கவும் உதவுகிறது.

எடையை குறைக்கலாம்
வெண்ணெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று தான் நினைத்துக் கொண்டிருப்பீர்கள் ஆனால் நீங்கள் அளவுடன் வெண்ணெய்யை சாப்பிட்டால் இது உங்களது உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவும். வெண்ணையில் உள்ள லெசிதின் உங்களது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதனால் உங்களது உடல் எடை குறையும்.

தொற்றுகளை தடுக்கும்
வெண்ணெய் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருளாகும். அதனால வெண்ணெய் சாப்பிடுவதால் உங்களது உடலில் உள்ள சிறுசிறு நோய் தொற்றுகள் அழிந்து போகும். அதனால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி
வெண்ணெய்யை சாப்பிடுவதால் உங்களது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உங்களது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய சத்துக்கள் வெண்ணெய்யில் உள்ளது. எனவே இது உங்களை நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது.

மூளை செயல்பாடு
நமது மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், சட்டென்று யோசித்து முடிகளை திறமையாக எடுக்கவும் இந்த வெண்ணெய் மிகவும் உதவியாக இருக்கிறது. எனவே நீங்கள் சுறுசுறுப்பான மூளையின் இயக்கத்திற்கு வெண்ணெய் சாப்பிடலாம்.

சரும பிரச்சனை
வெண்ணெய்யை சாப்பிடுவதால் உங்களது சருமம் வெண்ணெய் போல பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். வெண்ணெய்யில் உள்ள செலினியம் மற்றும் விட்டமின் இ ஆகியவை உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கிவகிக்கிறது.

புற்றுநோய்
அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் புற்றுநோய் பாதிப்பிலிருந்து தப்பிக்க நீங்கள் வெண்ணெய் சாப்பிடலாம். வெண்ணெய் சாப்பிடுவது என்பது உங்களை புற்றுநோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.

தூக்கமின்மை
தூக்கமின்மை பிரச்சனை என்பது பலரையும் அச்சுறுத்தும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. இந்த தூக்கமின்மை பிரச்சனைக்கு இந்த வெண்ணெய் மருந்தாக பயன்படுகிறது. அதுமட்டுமின்றி தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இது மருந்தாக பயன்படுகிறது. எனவே நீங்கள் இந்த வெண்ணெய்யை அளவுடன் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்...

தீராத மூட்டுவலி
இன்று மூட்டுவலி பிரச்சனை என்பது ஒரு கொடிய பிரச்சனையாக உள்ளது. சிறிது தூரம் கூட நடக்கமுடியால் இது தொல்லை தருகிறது.. மூட்டுவலி, நாள்பட்ட மூட்டுவலி போன்ற பிரச்சனைகளுக்கு வெண்ணெய்யில் உள்ள கால்சியம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

யாருக்கு எல்லாம் முக்கியமாக தேவை?
விளையாட்டு வீரர்கள், உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் வெண்ணெயை உணவுடன் அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம். காசநோய் உள்ளவர்களுக்கும் நல்லது. இது அதிக நேரத்துக்கு உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். உடல் எடை குறைவான டீன் ஏஜ் இளைஞர்களும் ஓரளவுக்கு வெண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது.

குழந்தைகளுக்கு
வளரும் குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம். குறிப்பிட்ட வயதில் சரியான எடை இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு வெண்ணெயை உணவுடன் சேர்த்துக் கொடுத்தால், உடல் புஷ்டியாகும். அதாவது, நான்கு வயதில் ஒரு குழந்தை 18 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் சில குழந்தைகளுக்கு வயது கூடக்கூட எடை குறையும். இதுபோன்ற நேரத்தில் அந்தக் குழந்தைகளுக்கு வெண்ணெயைக் கொடுக்கலாம். பொதுவாகக் காலை நேரங்களில் சாப்பிடலாம். மாலை, இரவு வேளைகளில் சிறிதளவு கொடுக்கலாம்.

எப்படி சாப்பிடலாம்?
பெரும்பாலும் வெண்ணெயை பிரெட் மீது தடவியே பயன்படுத்துவோம். இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி நமக்கே சில வேளைகளில் சலிப்பைத் தரும். எனவே, சர்க்கரை பொங்கல், சப்பாத்தி, உப்புமா போன்றவற்றுடன் சிறிதளவு சேர்ப்பது சுவையைக் கூட்டும். சூடான சாம்பாரில் சேர்த்து சாப்பிடலாம். தோசை சுடும்போது வெண்ணெய் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

அதிகமாக பாதிப்பு உண்டாகும்!
பசி எடுக்கும் தன்மையைக் குறைத்துவிடும். அதிகமாக வெண்ணெய் பயன்படுத்துவதால் இதயம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை தொடர்வது மட்டுமின்றி, உடல் பருமன் கூடி, குண்டான உடல் தோற்றத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஆகவே, கவனம் தேவை!



Click it and Unblock the Notifications