Latest Updates
-
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது!
இதயம் பெரிய ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் விசித்திரமான 5 அறிகுறிகளை பட்டியலிட்ட இதய நோய் நிபுணர்!
Heart Disease Symptoms In Tamil: நமது உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒரு உறுப்பில் பிரச்சனை என்றாலும், அதை உடலின் மற்ற பகுதிகளும் ஒருசில அறிகுறிகளின் மூலம் சுட்டிக்காட்டும். எனவே ஒருவர் தங்களின் உடலை சரியாக கவனித்து வந்தால், உடலில் இருக்கும் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளலாம். அந்த வகையில் தற்போது உலகளவில் பெரும் கவலைக்குரிய ஒன்றாக இதய நோய் உள்ளது. சொல்லப்போனால் உலகில் இதய நோயால் ஏராளமானோர் நாளுக்கு நாள் மரணமடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஒருவருக்கு இதய நோய் இருந்தால், நெஞ்சு பகுதியில் மட்டும் தான் வலி ஏற்படும் என்பதில்லை. மாறாக வேறு சில அறிகுறிகளும் உள்ளன. அதுவும் விசித்திரமான சில அறிகுறிகளும் இதயம் பெரிய ஆபத்தில் இருப்பதைக் குறிக்கும். ஆனால் இந்த அறிகுறிகள் அனைத்தும் பெரும்பாலானோரால் புறக்கணிக்கக்கூடிய வகையில் சாதாரண அறிகுறிகளாக இருக்கும்.
இருப்பினும் ஒருவர் வழக்கத்திற்கு மாறாக ஒருசில அறிகுறிகளை தொடர்ந்து சந்திக்கும் போது, அது என்னவென்பதை உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இப்படி செய்யும் போது, நோயின் தீவிரத்தை குறைக்க எளிதில் சிகிச்சை அளிக்கவும் முடியும் மற்றும் உயிரிழப்பையும் தடுக்கலாம்.
இதயநோய் நிபுணரும் இதய மாற்று அறுவை சிகிச்சை வல்லுநருமான டாக்டர் டிமிட்ரி யரனோவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதயம் பெரிய ஆபத்தில் இருப்பதைக் குறிக்கும் மிகவும் விசித்திரமான மற்றும் கவனிக்கப்படாத 5 எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "இதயம் எப்போதும் எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்தாது. பல தீவிரமான இதயப் பிரச்சனைகள், மக்கள் புறக்கணிக்கும் அல்லது முற்றிலும் கண்டுகொள்ளாத வழிகளில் வெளிப்படுகின்றன. எனவே ஏதாவது சரியில்லை என்று தோன்றினால் அதை நம்பி, உடனே மருத்துவரை அணுகுங்கள்".
1. தாடை அல்லது பல் வலி
இதய நோயின் ஆரம்ப அறிகுறிகளுள் ஒன்று, காரணமின்றி ஏற்படும் பல் அல்லது தாடை வலியாகும். குறிப்பாக பெண்களிடையே இந்த அறிகுறி தெரியும். ஆனால் பெரும்பாலானோர் இதை பல் பிரச்சனையாக கருதி விட்டுவிடுவார்கள். ஆனால் இது ஆஞ்சினா போன்ற கடுமையான இதய நோய்களின் அறிகுறியாக அல்லது மாரடைப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
2. கால் வீக்கம்
கால்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறதா? பொதுவாக கால் வீக்கமானது திரவங்கள் தேங்குவதால் ஏற்படும். அதுவும் இதயத்தில் தீவிர பிரச்சனை இருந்தால், முக்கியமாக இதய செயலிழப்பாக இருந்தால், இந்த வித்தியாசமான அறிகுறி தெரியக்கூடும் என்று டாக்டர் கூறினார். ஏனெனில் எப்போது இதயத்தால் இரத்தத்தை திறம்பட பம்ப் செய்ய முடியவில்லையோ, அப்போது கால்களில் திரவங்கள் தேங்கத் தொடங்கும். இது வீக்கத்தையும், அசௌகரியத்தையும் உண்டாக்கும். முக்கியமாக இரவு நேரத்தில் தீவிரமாக இருக்கும். எனவே கால் வீக்கத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
3. படுக்கும் போது மூச்சுத் திணறல்
படுக்கும் போது சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்கிறீர்களா? அப்படியெனில் அந்நிலை ஆர்த்தோப்னியா ஆகும். இது இதயச் செயலிழப்பின் ஒரு முக்கிய அறிகுறியாகும் என்று இதயநோய் நிபுணர் கூறுகிறார். அதுவும் இரவு தூங்கும் போது, உங்கள் தலைக்கு கூடுதல் தலையணை தேவைப்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள் என்றும் டாக்டர் கூறுகிறார்.
4. குமட்டல் மற்றும் வியர்வை
பெண்கள் காரணமின்றி குமட்டலும், வியர்வையையும் அதிகம் சந்தித்தால், அதுவும் மாரடைப்பின் அறிகுறிகள் என்று டாக்டர் கூறுகிறார். அதுமட்டுமின்றி, அத்துடன் சோர்வு, தலைச்சுற்றல் அல்லது பதட்டம் போன்றவையும் ஏற்படலாம். எனவே உங்களுக்குள் ஏதோ சரியில்லை என்று தோன்றினால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
5. விறைப்புத்தன்மை குறைபாடு
விறைப்புத்தன்மை குறைபாடு என்பது ஆணுறுப்பில் உள்ள இரத்த நாள நோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம் என்றும், இதயம் தொடர்பான வெளிப்படையான அறிகுறிகள் தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இது வெளிப்படக்கூடும் என்றும் இதயநோய் நிபுணர் எச்சரிக்கிறார். பொதுவான ஆணுறுப்புக்கு இரத்தத்தை வழங்கும் தமனிகள், இதய தமனிகளை விடச் சிறியவை. எனவே தான் முன்கூட்டியே இது பாதிக்கப்படுகிறது. எனவே இந்த அறிகுறியை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

