Latest Updates
-
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்...
காலில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. அது இதய நோயின் எச்சரிக்கை அறிகுறியா இருக்கலாம்..
Symptoms Of Heart Disease In Feet In Tamil: உலகளவில் அதிக இறப்புக்கான முக்கிய காரணிகளில் ஒன்று தான் இதய நோய். இந்த இதய நோயால் உலகளவில் கிட்டத்தட்ட சுமார் 17.9 மில்லியன் மக்கள் இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதோடு 5 இறப்புகளில் 4 இறப்புக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்கள் காரணமாக இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. எனவே இதய நோயின் ஆரம்ப அறிகுறிகளை ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பொதுவாக உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை நமக்கு உணர்த்தும் விதமாக உடல் நமக்கு ஒருசில அறிகுறிகளை அடிக்கடி சந்திக்க வைக்கும். அதுவும் ஒருவருக்கு இதய நோய் இருந்தால், நிச்சயம் குறிப்பிட்ட அறிகுறிகளை அடிக்கடி சந்திக்க நேரிடும். இந்த அறிகுறிகளை கவனித்து ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால், இதய நோயால் உயிரிழப்பதைத் தடுக்கலாம்.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மடாலஜி (AAD)- சேர்ந்த நிபுணர்களின் கூற்றுப்படி, இதயத்தில் பிரச்சனை இருந்தால், அதன் அறிகுறிகள் நகங்கள் மற்றும் சருமத்தில் தெரியத் தொடங்குமாம். எனவே சருமத்தில் ஏதேனும் மாற்றங்களை கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது தவிர உடலில் விவரிக்க முடியாத அளவில் திடீரென்று வீக்கங்களைக் கண்டால், அதுவும் இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கால்களில் திரவங்கள் தேங்கும் போது இப்படியான வீக்கங்கள் ஏற்படும். இன்னும் தீவிர நிலையில் இந்த வீக்கங்களானது மேல் கால் பகுதி மற்றும் இடுப்புகளில் கூட ஏற்படலாம். அந்த வீக்கங்களுடன் சருமத்தின் நிறம் நீலம் அல்லது ஊதா நிறத்தில் மாறி காணப்பட்டால், இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம்.
எப்போது உடலின் ஏதாவது ஒரு பகுதியில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல், இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறதோ, அப்போது அந்த பகுதி நிறம் மாறி காணப்படும். இதை உடனே கவனித்து சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அதன் விளைவுகாக மரணத்தை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இப்படியான அறிகுறி தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். இது இதய நோயின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இப்போது இதய நோய் இருந்தால் வெளிப்படும் பிற அறிகுறிகளைக் காண்போம்.
விவரிக்க முடியாத உடல் சோர்வு
நீங்கள் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த உடல் சோர்வு அல்லது களைப்பை அனுபவித்தால், அதுவும் போதுமான ஓய்வை எடுத்தும் உடல் சோர்வை சந்தித்தால், இதய நோய் இருக்க வாய்ப்புள்ளது. இப்படியான உடல் சோர்வு வழக்கமான நடவடிக்கைகளின் போது காணப்படலாம். அத்துடன் மூச்சுத் திணறலையும் சந்திக்கலாம்.
நெஞ்சு பகுதியில் அசௌகரியம்
நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டாலே மாரடைப்புக்கான அறிகுறியாக இருந்தாலும், நெஞ்சு பகுதியில் அழுத்தம், அமுக்குவது போன்ற அசௌகரியங்களை அவ்வப்போது சந்திக்க நேரிடும். சில சமயங்களில் இந்த அசௌகரியம் லேசானதாக இருக்கலாம் அல்லது கடுமையானதாக இருக்கலாம். எப்படி இருந்தாலும், இப்படியான அறிகுறியை சந்தித்தால் சாதாரணமாக எடுக்காதீர்கள்.
மூச்சுத் திணறல்
தினசரி உடல் செயல்பாடுகளின் போது அல்லது ஓய்வு நிலையில் இருக்கும் போது சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறலை சந்தித்தால், அது இதய நோய் இருப்பதற்கான ஒரு முக்கியமான மற்றும் எச்சரிக்கை அறிகுறியாகும். எனவே இந்த அறிகுறியை சந்தித்தால், மருத்துவரை உடனே அணுகுங்கள்.
வீக்கம்
கால்கள், கணுக்கால், பாதம் அல்லது அடிவயிறு போன்ற பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டால், அது இதய செயலிழப்பு அல்லது பிற இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். எப்போது இதயத்தால் போதுமான இரத்தத்தை திறம்பட அழுத்த முடியாமல் போகிறதோ, அப்போது திரவங்கள் உடலின் கீழ் பகுதியில் தேங்கி, வீக்கத்தை ஏற்படுத்தலாம்.
தலைச்சுற்றல் அல்லது மயக்கம்
உட்கார்ந்து எழுந்து நிற்கும் போது தலைச்சுற்றல் அல்லது மயக்க உணர்வை சந்தித்தால், மூளைக்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லை என்று அர்த்தம். மேலும் இது இதய நோயின் ஒரு பொதுவான அறிகுறியும் கூட.
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் சந்தித்தால், அதை அலட்சியப்படுத்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்தால், இதய நோயின் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், அதை சரியான சிகிச்சை அளித்து மரணம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











