இதய நோய் இருந்தால் காலையில் எழுந்ததும் இந்த அறிகுறி தெரியுமாம்.. உஷாராகிக் கோங்க...

Heart Disease Symptoms In Tamil: உலகளவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் தலைமுறையினர் மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்கள் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 18 மில்லியன் பேர் இதய நோயால் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

இதய நோய்க்கு முக்கிய காரணம் தற்போதைய ஆரோக்கிமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் தான். எனவே இதய நோய் வரக்கூடாது என்று விரும்பினால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று இதய நோயின் அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Heart Disease Symptoms In Tamil People With Heart Problem Notice This One Sign When You Wake Up

இதய நோய் எப்போதும் ஒரே நாளில் வராது. அது வருவதற்கு பல மாதங்கள், ஏன் ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் இதய நோய் ஒருவருக்கு வந்துவிட்டால், அது ஒருசில அறிகுறிகளை மெதுவாக வெளிக்காட்ட தொடங்கும். இந்த அறிகுறிகளை கவனித்து மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தால், மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைத் தடுக்கலாம்.

சர்குலேசன் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே ஒரு பொதுவான அறிகுறி காலையில் எழுந்ததும் சந்திப்பது தெரிய வந்தது. அது என்னவெனில் இதயத்துடிப்பு ஒழுங்கற்று இருப்பது. இதை மருத்துவ ரீதியாக இதய அரித்மியா என்று அழைப்பர்.

எப்போது ஒருவரது இதயம் சரியாக செயல்படவில்லையோ அல்லது இதயத்தில் பிரச்சனை இருக்கிறதோ, அப்போது இதயத் துடிப்பு வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இருக்கலாம். சுருக்கமாக கூற வேண்டுமானால், இதய படபடப்பு அதிகமாக இருக்கும்.

இப்படி ஒருவருக்கு படபடப்பு பல காரணங்களால் ஏற்படலாம். அதில் சில ஆரோக்கியத்தை பாதிக்காவிட்டாலும், சில உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே உங்களுக்கு காரணமின்றி காலையில் எழுந்ததும் இதய படபடப்பு அதிகமாக இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.

இதய அரித்மியாவின் பொதுவான அறிகுறிகள்

* படபடப்பு உணர்வு அதிகமாக இருக்கும்
* இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்
* மெதுவான இதயத்துடிப்பு
* மூச்சுத்திணறல்
* நெஞ்சு வலி
* மனக்கவலை
* மிகுந்த உடல் சோர்வு
* தலைச்சுற்றல்
* அதிகமான வியர்வை
* மயக்கம்

இதய அரித்மியாவானது இதய செயலிப்பு, கரோனரி இதய நோய், மாரடைப்பு, கார்டியோமயோபதி போன்றவற்றினால் கூட ஏற்படலாம். எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் காலையில் எழுந்ததும் அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.

இதய நோயின் பிற பொதுவான அறிகுறிகள்

* இதய நோயின் ஒரு பொதுவான அறிகுறி தான் நெஞ்சு வலி. இது மார்பு பகுதியின் மையத்தில் அல்லது இடது பக்கத்தில் அழுத்தம், பிசைவது அல்லது வலி போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
* வேலை செய்யும் போது அல்லது ஓய்வு நேரத்தில் மூச்சுத்திணறலை சந்திப்பது.
* எந்த ஒரு கடினமான வேலையை செய்யாமலும், மிகுந்த உடல் சோர்வை அல்லது உடல் பலவீனமாக இருப்பதை உணர்வது.
* தலைச்சுற்றல் அல்லது மயக்கம் போன்ற உணர்வு
* கால்கள், கணுக்கால், பாதங்கள் அல்லது வயிற்றுப் பகுதியில் வீக்கம் போன்றவையும் இதய நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
* இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும் இதய நோய் அறிகுறியாகும்.
* எந்த ஒரு காரணமும் இல்லாமல் அதிகமாக வியர்த்தால், அது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

Image Courtesy: eternalcreative

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion