Latest Updates
-
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சக்கராசனம் செய்வது எப்படி? அதன் நன்மைகள் என்ன? யாரெல்லாம் செய்யக்கூடாது?
Chakrasana Benefits: பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருவித உடற்பயிற்சி தான் யோகாசனம். இந்த யோகாசனங்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் சக்கராசனம். இந்த ஆசனமானது சக்கரம் போன்ற நிலையைக் கொண்டிருப்பதால், சக்கராசனம் என்ற பெயரைப் பெற்றது.
சக்கராசனம் செய்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இந்த ஆசனத்தை செய்வதன் மூலம், உடல் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும் மற்றும் தொப்பையை குறைக்க நினைப்போர் இந்த ஆசனத்தை மேற்கொள்வது நல்லது. நீங்கள் வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க முயற்சிப்பவராயின், இந்த ஆசனத்தை தினமும் மேற்கொண்டால் நற்பலனை விரைவில் காணலாம். இப்போது இந்த சக்கராசனத்தை எப்படி செய்வது, அதன் நன்மைகள் என்ன மற்றும் யாரெல்லாம் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்

முதுகெலும்பு வலுவாகும் மற்றும் நெகிழ்வுத்தன்மை மேம்படும்
சக்கராசனத்தை தினமும் செய்து வந்தால், முதுகு தண்டுவடப் பகுதிகள் நெகிழ்வுத்தன்மையுன் இருக்கும். முக்கியமாக சக்கராசனமானது முதுகெலும்பை வலுபடுத்துவதன் மூலம், முதுமைத் தோற்றத்தைக் குறிக்கும் கூன் விழுவதைத் தடுக்கிறது.
அடிவயிற்று கொழுப்பைக் குறைக்கும்
சக்கராசனத்தை வழக்கமாக ஒருவர் செய்து வந்தால், அது அடிவயிற்றுப் பகுதியில் தேங்கியுள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் அசிங்கமான தொப்பை குறைந்து, உடல் நன்கு ஃபிட்டாக இருக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக தொப்பையைக் குறைக்க முயற்சித்தும், எந்த பலனும் கிடைக்காமல் இருந்தால், சக்கராசனத்தை தினமும் செய்யத் தொடங்குங்கள். இதனால் நிச்சயம் ஒரு நல்ல பலனைக் காணலாம்.
முதுகு வலி குறையும்
நீண்ட நேரம் உட்கார்ந்தவாறு வேலை செய்பவர்கள், இந்த ஆசனத்தை செய்து வருவது நல்லது. நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்யும் போது, கடுமையான முதுகு வலியை பலரும் அனுபவிப்பதுண்டு. ஆனால் சக்கராசனத்தை தினமும் சிறிது நேரம் செய்து வந்தால், முதுகு வலியில் இருந்து விடுபடலாம். எனவே முயற்சித்துப் பாருங்கள்.
மன அழுத்தம் நீங்கும்
சக்கராசனமானது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், அது மனதை அமைதியடையச் செய்து, எப்பேற்பட்ட மன அழுத்தத்தில் இருந்தும் ஒருவருக்கு நல்ல நிவாரணத்தை அளிக்கும்.
உடலை வலுவாக்கும்
சக்கராசனமானது தசைகளை நன்கு ஸ்ட்ரெட்ச் செய்வதோடு, கால்கள் மற்றும் பிட்டங்களை வலுப்படுத்துகிறது. இது தவிர சக்கராசனம், மார்பு மற்றும் சிறுநீரகங்களின் இயக்கத்தை சீராக்குகிறது.
சக்கராசனம் செய்வது எப்படி?
* முதலில் தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மூச்சை உள்ளிழுத்தவாறு, கால்களை மடக்கி பிட்டங்களின் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் மடித்து, உள்ளங்கைகளை காதுகளுக்கு அருகில் தரையில் ஊன்ற வேண்டும்.
* பின்பு கைகள் மற்றும் கால்களை நன்கு ஊன்றி, மூச்சை வெளியே விட்டபடி உடலை மெதுவாக மேலே உயர்த்த வேண்டும்.
* 15-30 நொடிகள் இந்நிலையில் இருந்து பின், மெதுவாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
* இப்படி 3-4 செட் செய்ய வேண்டும்.
யாரெல்லாம் சக்கராசனம் செய்யக்கூடாது?
* முதுகு பகுதியில் காயங்களைக் கொண்டவர்கள் சக்கராசனத்தை செய்யக்கூடாது.
* இதய பிரச்சனைகள் இருந்தால், இந்த ஆசனத்தை முயற்சிக்க வேண்டாம்.
* தலைவலி, வயிற்றுப்போக்கு பிரச்சனையைக் கொண்டவர்கள் இதை செய்யக்கூடாது.
* ஹெர்னியா உள்ளவர்கள் சக்கராசனத்தை செய்யக்கூடாது.
* உயர் இரத்த அழுத்தம் அல்லது தாழ் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications