Latest Updates
-
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான்
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் ஒரு தனித்துவமான ஆளுமையும், குணநலன்களும் இருக்கும். தற்போதைய அவசரமான மற்றும் போட்டி நிறைந்த உலகில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது. சிலர் இயல்பாகவே மனதில் பட்டதை மறைக்காமல் மிகவும் வெளிப்படையாகப் பேசுபவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் பொதுவாகத் துணிச்சலானவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும், திறந்த மனதுடையவர்களாகவும் இருப்பார்கள். ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்களிடம் இந்த சிறந்த குணங்கள் இருக்கும். அவர்களின் இந்த வெளிப்படையான குணம் சில சமயங்களில் அவர்களுக்கு சாதகமாகவும், சில சமயங்களில் பாதகமாகவும் இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் வெளிப்படையானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தைரியமாகவும், வெளிப்படையாகவும் இருப்பதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பார்கள். இவர்கள் எதையும் சுற்றி வளைத்துப் பேச மாட்டார்கள், சொல்ல வேண்டிய விஷயத்தை முகத்திற்கு நேராகக் கூறிவிடுவார்கள். மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் மனதில் வெறுப்பை வளர்த்து வைத்துக்கொள்வதில்லை, அதே சமயம் தங்கள் கருத்துகளை மறைத்தும் வைப்பதுமில்லை. ஏனெனில் இவர்கள் நெருப்பு கிரகமான செவ்வாயால் ஆளப்படுகிறார்கள். சில நேரங்களில், மேஷ ராசிக்காரர்கள் மிகவும் கடுமையானவர்களாகவோ அல்லது பொறுமையற்றவர்களாகவோ இருப்பதாக மற்றவர்களுக்குத் தோன்றலாம். ஆனால் போலியான பொய்யை விட உண்மையைச் சொல்வதே சிறந்தது என்று இவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ஞானம் மற்றும் உண்மையின் கிரகமான குருபகவானால் ஆளப்படுகிறார்கள். இவர்கள் வெளிப்படையாகப் பேசுவதை விரும்புகிறார்கள். பொதுவாக அனைத்து விஷயங்களிலும் சாகசத்தை விரும்பும் இவர்கள், கருத்துப் பரிமாற்றத்திலும் அதையே பின்பற்றுகிறார்கள். இவர்கள் எப்போதும் தாங்கள் நினைப்பதை எந்த அச்சமும் இன்றி வெளிப்படையாகக் கூறிவிடுவார்கள்.
தனுசு ராசிக்காரர்கள் சில சமயங்களில், மற்றவர்களைப் புண்படுத்தும் வகையிலான கருத்துகளைத் தெரியாமலேயே கூறிவிடக்கூடும். ஆனால், அவர்கள் மற்றவர்களை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதை கூறுவதில்லை. நேர்மையே சிறந்த கொள்கை என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இவர்களிடமிருந்து எப்போதும் வெளிப்படையான பதில்களே கிடைக்கும் என்பதால், இவர்களை எப்போதும் மற்றவர்கள் முழுமையாக நம்புவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் தீவிரமான மற்றும் மர்மமான குணம் கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு சுத்தமாக வராத ஒரே விஷயம் உண்மையை மறைப்பது. அவர்கள் உடனுக்குடன் மனம் திறந்து பேசாமல் இருக்கலாம், ஆனால் அப்படிப் பேசும்போது மிகவும் உண்மையாக இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து கேட்டால், கேட்பதற்குச் சற்றுக் கடினமாக இருந்தாலும், அவர்கள் உண்மையையே சொல்வார்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் நம்பிக்கைக்கும், நேர்மைக்கும் மதிப்பளிக்கிறார்கள், மற்றவர்களிடமும் அதையே எதிர்பார்க்கிறார்கள். உண்மையை பேசும்போது அவர்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்வதால், அவர்கள் எப்போதும் நேர்மையாகப் பேசுவார்கள், நீங்களும் அவ்வாறே பேசு வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தீவிரமான, கவனம் நிறைந்த மற்றும் மன முதிர்ச்சி கொண்டவர்கள். அவர்கள் வீண் பேச்சுகளிலோ அல்லது பொய் சொல்வதிலோ நேரத்தை வீணடிப்பதை விரும்புவதில்லை. ஒரு மகர ராசிக்காரர் ஒரு தவறைப் பார்த்தால், அதை உங்களிடம் உடனடியாக கூறிவிடுவார்கள். உண்மை எவ்வளவு சங்கடமாக இருந்தாலும், பொறுப்புடனும் உண்மையுடனும் இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். உறவுகளிலோ அல்லது வேலையிலோ, மகர ராசிக்காரர்கள் எப்போதும் தெளிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்கள் வெளிப்படையான உரையாடல்களை விரும்புவார்கள், மேலும் வெளிப்படையாகப் பேசும் மற்றவர்களையும் விரும்புவார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

