Latest Updates
-
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா?
Mars Transit In Aayilyam Nakshatra 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். மேலும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.

அந்த வகையில் செவ்வாய் அக்டோபர் 17 ஆம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இந்த நட்சத்திரத்தில் செவ்வாய் நவம்பர் 12 ஆம் தேதி வரை இருப்பார். செவ்வாயின் இந்த நட்சத்திர பெயர்ச்சி ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திர பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் வெவ்வேறு விதமாகப் பாதிக்கக்கூடும். அதுவும் சில ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களையும், தொழிலில் முன்னேற்றத்தையும், வியாபாரத்தில் நல்ல வெற்றியையும் பெறுவார்கள். இப்போது செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதோடு வருமானத்தில் நல்ல உயர்வும் ஏற்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும், புதிதாக பணத்தை முதலீடு செய்வதற்கு முன் அனைத்து அம்சங்களையும் சரிபார்ப்பது அவசியமாகும்.
கடகம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும் அல்லது புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பரம்பரை சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். நிதித் திட்டங்களை வகுக்கும்போது, நன்கு சிந்தித்து முடிவெடுப்பது உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும்.
விருச்சிகம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமை வலுவடையும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் எந்தவொரு பெரிய முடிவையும் எடுப்பதற்கு முன், அதன் நடைமுறைச் சாத்தியத்தைக் கருத்தில் கொள்வது அவசியம்.
மகரம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதன் மூலம் கடன் சுமை குறையும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும் மற்றும் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளிநாட்டில் வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
