ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..

Nighttime Face Packs In Tamil: உங்கள் முகம் ரொம்ப டல்லா இருக்கா? பார்லர் சென்று சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க கூட நேரம் இல்லையா? கவலை வேண்டாம். பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து சரும பராமரிப்பு கொடுத்தால் தான், முகம் பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது முற்றிலும் தவறு. ஏனெனில் முகத்தின் பொலிவை மேம்படுத்த நம் வீட்டின் சமையலறையில் உள்ள சில பொருட்களே உதவி புரியும்.

Top 5 Homemade Nighttime Face Pack For Instant Glow And Radiance

அதுவும் இந்த இயற்கை பொருட்களைக் கொண்டு இரவு தூங்கும் முன் ஃபேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தினாலே, சருமம் பளிச்சென்று பிரகாசமாகும். என்ன தான் இயற்கை பொருட்களாக இருந்தாலும், எல்லா சரும வகைகளுக்கும் ஒரே பொருள் பொருந்தாது என்பதால், கவனமாக பயன்படுத்த வேண்டும். இப்போது இரவு நேரத்தில் வீட்டிலேயே எளிதாகத் தயாரித்துப் பயன்படுத்தக்கூடிய 5 ஃபேஸ் பேக்குகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

1. தயிர் மற்றும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.

2. கற்றாழை ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 5-6 எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.

3. காபி மற்றும் தேன் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கைகளை குளிர்ந்த நீரில் நனைத்து, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

4. தயிர் மற்றும் தேன் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

5. தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகுத்தைக் கழுவ வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Sunday, October 18, 2026, 23:00 [IST]
Desktop Bottom Promotion