Latest Updates
-
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்!
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும்
Afghani Egg Masala Recipe in Tamil: முட்டை மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவுகளில் ஒன்றாகும். உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டையை வைத்து குழம்பு, வறுவல், ஆம்லெட் என பல்வேறு ரெசிபிக்களை முயற்சி செய்வீர்களா? நீங்கள் சப்பாத்தி, தோசைக்கு எப்போதும் முட்டை குருமாவை செய்வீர்களா? அப்படியானால் அடுத்த முறை வழக்கமான முட்டை குழம்பு செய்யாம இந்த ஆப்கானி முட்டை மசாலாவை முயற்சி செய்து பாருங்க.

இந்த ஆப்கானி முட்டை குருமாவின் ஸ்பெஷலே, இதற்கு பிரத்யேகமாக அரைக்கும் ரிச்சான மசாலா தான். உங்கள் குழந்தைகள் வேக வைத்த முட்டையை சாப்பிடமாட்டார்களானால், அவர்களுக்கு இப்படி முட்டை குருமா செய்து கொடுங்கள். இதனால் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ஆப்கானி முட்டை குருமா சப்பாத்தியுடன் மட்டுமின்றி, பூரி, சாதம் போன்றவற்றுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
உங்களுக்கு ஆப்கானி முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆப்கானி முட்டை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
முட்டையை வறுக்க:
- 6 வேகவைத்த முட்டைகள்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
ஆப்கானி மசாலா அரைக்க:
- 2 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
- 1 இன்ச் இஞ்சித் துண்டு, சிறு துண்டுகளாக நறுக்கியது
- 5 பூண்டு பல்
- 3 பச்சை மிளகாய்
- 10 முந்திரிப் பருப்பு
- 1 கப் கொத்தமல்லி இலைகள்
மசாலா தயாரிக்க:
- ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் சீரகத் தூள்
- ½ ஸ்பூன் மிளகுத் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலாத் தூள்
- ½ ஸ்பூன் கசூரி மேத்தி
- 3 ஸ்பூன் தயிர்
- 3 ஸ்பூன் ஃப்ரெஷ் கிரீம்
- 3 ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 2 ஏலக்காய்
- 3 கிராம்பு
- 1 இன்ச் இலவங்கப்பட்டை துண்டு
செய்முறை:
- ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்க்கவும்.
- மிதமான தீயில், வெங்காயம் மென்மையாகவும், கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் முந்திரி பருப்புகளைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கி, சிறிது நேரம் ஆறவிடவும். இந்த கலவை ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி, அதனுடன் 1 கப் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- இதனுடன் சுமார் ½ கப் தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
- வேகவைத்த முட்டைகளை தோல் உரித்து அதில் சில கீறல்களைப் போடவும்.
- ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் ½ ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்க்கவும்.
- இதில் கீறிய முட்டைகளைப் போட்டு 2 நிமிடங்கள் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
- அதே வாணலியில் ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்த்து, வாசனை வரும் வரை சில நொடிகள் வதக்கவும்.
- தயார் செய்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்து, மிதமான தீயில் சில நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் அனைத்து மசாலாப் பொடிகளையும், உப்பையும் சேர்த்து நன்கு கலந்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் தயிர் மற்றும் ஃப்ரெஷ் கிரீமைச் சேர்த்துக் கிளறவும். தயிர் திரிந்து போகாமல் இருக்க, அதைச் சேர்ப்பதற்கு முன் அடுப்பை அணைத்துவிட்டு, நன்கு கலந்த பிறகு மீண்டும் அடுப்பை பற்ற வைக்கவும்.
- அதன்பின் நசுக்கிய கசூரி மேத்தியைச் சேர்த்து, மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் வரை, எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.
- தேவையான பதத்தைப் பெற, சூடான நீரைச் சேர்க்கவும்.
- அதன்பின் பொரித்து வைத்த முட்டைகளைச் சேர்த்து மெதுவாகக் கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
- மூடியைத் திறந்து, மேலும் 2 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து, பின் அடுப்பை அணைத்துவிடவும்
- அவ்வளவுதான் சுவையான ஆப்கானி முட்டை மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications
