Just In
- 6 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும்...
- 15 hrs ago
புதினா துவையல்
- 16 hrs ago
இந்த ஒரு பொருளை இப்படி யூஸ் பண்ணுனா.. கடன் மற்றும் பணப் பிரச்சனை விரைவில் நீங்குமாம்..
- 16 hrs ago
இந்த உணவுகள் உங்கள் பற்களில் மஞ்சள் கறையை உண்டாக்குவதுடன் பற்களை அரிப்பையும் ஏற்படுத்துமாம்...!
Don't Miss
- News
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை? என்ன சொன்னது சந்துரு குழு! சாட்டை எடுக்கப் போகும் முதல்வர்!
- Sports
"பாரபட்சமே கிடையாது.. ஒரே அடிதான்".. இந்தியாவுக்கு பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கை.. மிகவும் பலம்தான் போல...!
- Finance
கொஞ்சம் நஞ்சம் தான் இருக்கு.. எல்லாரும் வராதீங்க.. கண்டிஷன் போட்ட இலங்கை.. ஏன்?
- Movies
என்னங்க இப்படி இருக்கீங்க...சூர்யாவையே மிரள வைத்த மாதவன்...அப்படி செய்திருக்கிறார் பாருங்க
- Technology
போக்குவரத்து அபராதம் உங்களுக்கு இருக்கா? எப்படி ஆன்லைனில் செலுத்துவது?- எளிய வழிமுறைகள்!
- Automobiles
இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை எப்போது எதிர்பார்க்கலாம்... மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பரான தகவல்!
- Travel
என்ன? உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் இந்தியாவில் தான் உள்ளதா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
முட்டையுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடுவது பல உறுப்புகளை செயலிழக்க வைக்குமாம்... ஜாக்கிரதை...!
நாம் சாப்பிடும் உணவுகள் நமது உடலின் ஆரோக்கியத்தில் நேரடியாக பிரதிபலிக்கும். எனவே சீரான ஆரோக்கியத்திற்கு சரியான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். உணவின் தவறான கலவையானது சோர்வு, குமட்டல் மற்றும் குடல் நோய்கள் போன்ற தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உணவுகளின் சரியான சேர்க்கை மற்றும் உணவு சாப்பிடும் சரியான நேரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
முட்டை உலகம் முழுவதும் அதிகளவு மக்களால் உட்கொள்ளப்படும் ஆரோக்கிய உணவாகும். முட்டைகள் அதிக சத்தானவை மற்றும் அவற்றை முழுவதுமாக உட்கொள்ளலாம். முட்டை புரோட்டின், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. முட்டையில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது மற்றும் அவற்றை பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தலாம்.சிலர் இதை இறைச்சிகள், பால் பொருட்கள் மற்றும் காஃபின் பானங்கள் போன்ற பொருட்களுடன் சேர்த்து சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் சில பொருட்களுடன் சாப்பிடும் போது முட்டை ஆபத்தான பொருளாக மாறக்கூடும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பன்றி இறைச்சி
நிறைய பேர் முட்டை மற்றும் பன்றி இறைச்சி கலவையை விரும்புகிறார்கள். இருப்பினும், இந்த சேர்க்கை உங்களை மந்தமாக உணர வைக்கும். முட்டை மற்றும் பன்றி இறைச்சியில் முறையே அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது. இது விரைவான ஆற்றலை அதிகரிப்பதற்கும் விரைவாக அதனை குறைப்பதற்கும் வழிவகுக்கிறது.

எலுமிச்சை
முட்டையை சாப்பிட விரும்புபவர்கள், முட்டை சாப்பிட்டவுடன் எலுமிச்சையை எடுத்துக் கொள்வது செரிமானத்திற்கு உதவும் என்று கருதுகிறார்கள், ஆனால் அதைச் செய்யவே கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்வதால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதுடன் மாரடைப்பு அபாயமும் ஏற்படலாம்.

சர்க்கரை
முட்டை சாப்பிட்டவுடன் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உதாரணமாக, டீ அல்லது காபி குடிப்பதை பலரும் விரும்புகிறார்கள். ஆனால் இது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில் இரண்டு பொருட்களிலும் உள்ள அமினோ அமிலம் வெளியிடப்படுகிறது, மேலும் இது மனித உடலுக்கு நச்சுத்தன்மையுடையதாக மாறுகிறது, இது இரத்தத்தில் கட்டிகளை உருவாக்குகிறது.

சோயா பால்
சோயா பால் பரவலாக எடுத்துக் கொள்ளப்படும் ஆரோக்கியமான பானமாகும். முட்டை மற்றும் சோயா பால் இரண்டுமே ஆரோக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த இரண்டையும் ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது. சோயா பால் மற்றும் முட்டையின் கலவையானது உடலில் உள்ள புரதத்தை உறிஞ்சுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே இந்த உணவுகளை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

தேநீர்
உலகின் சிறந்த கலவையான தேநீர் மற்றும் முட்டை, எந்த உணவையும் விட அதிக தீங்கு விளைவிக்கும். இந்த கலவையானது மலச்சிக்கல் மற்றும் உடல் உறுப்புகளுக்கு மற்ற கடுமையான சேதத்திற்கு வழிவகுக்கும்.

மீன் மற்றும் பனீர்
முட்டையை மீனுடன் சாப்பிடக்கூடாது, ஏனெனில் இவை இரண்டும் இணையும்போது அது விரும்பத்தகாத ஒவ்வாமையை ஏற்படுத்தும். மீனைப் போலவே, முட்டையையும் பனீருடன் சேர்த்து சாப்பிடுவது ஒவ்வாமையை ஏற்படுத்துவதோடு, உடலில் மற்ற நோய்களையும் உருவாக்கும்.
MOST READ: உருளைக்கிழங்கு எப்போது ஆபத்தானதாக மாறும் தெரியுமா? இந்த வகை உருளைக்கிழங்கு புற்றுநோயை உருவாக்குமாம்!

வாழைப்பழம்
முட்டை சாப்பிட்ட பிறகு வாழைப்பழத்தை சாப்பிட வேண்டாம். குறிப்பாக, ஜிம்மிற்கு செல்பவர்கள் முட்டை மற்றும் வாழைப்பழங்களை ஒன்றாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் முட்டை சாப்பிட்டப் பிறகு இது மலச்சிக்கல், வாயு உருவாக்கம் மற்றும் குடல் பிரச்சினைகள் போன்ற வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.