For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 6 காய்கறிகளை பச்சையா சாப்பிடுவதை விட வேக வெச்சு சாப்பிட்டா தான் நல்லதாம்...

சில ஆய்வுகளானது காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை விட, வேக வைத்து சாப்பிடும் போது அதில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள் அதிகரிப்பதாக கூறுகின்றன.

|

உடலுக்கு வேண்டிய சத்துக்களை உணவுகளின் மூலம் தான் பெற முடியும். உணவுகளை எடுத்துக் கொண்டால் காய்கறிகளில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. தற்போது மக்களிடையே காய்கறிகளை பச்சையாக சாப்பிடும் வழக்கம் அதிகரித்துள்ளது. சாலட் என்ற பெயரில் பலவிதமான காய்கறிகளை மக்கள் உட்கொண்டு வருகிறார்கள். மேலும் பலர் காய்கறிகளை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவதால், அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற முடியும் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

Vegetables That Are Most Nutritious When Cooked In Tamil

ஆனால் சில ஆய்வுகளானது காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை விட, வேக வைத்து சாப்பிடும் போது அதில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள் அதிகரிப்பதாக கூறுகின்றன. மேலும் காய்கறிகளை வேக வைக்கும் போது அதன் சுவையும் மேம்படும். சில ஆய்வாளர்கள் காய்கறிகளை நீரில் வேக வைப்பது, ஆவியில் வேக வைப்பது மற்றும் வதக்குவது போன்றவற்றை சிறந்த வழிகளாக கூறுகின்றனர். இப்போது எந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை விட, வேக வைத்து சாப்பிடுவது நல்லது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கீரைகள்

கீரைகள்

கீரைகளில் சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆனால் அதில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச்சத்தை பெற வேண்டுமானால், அவற்றை சமைத்து சாப்பிட வேண்டும். ஏனெனில் கீரைகளில் ஆக்சாலிக் அமிலம் அதிகம் நிரம்பியுள்ளது. எனவே பச்சையாக சாப்பிடும் போது, அந்த ஆக்சாலிக் அமிலம் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உறிஞ்சுவதைத் தடுக்கிறது. ஆனால் சமைக்கும் போது அந்த ஆக்சாலிக் அமிலம் உடைத்தெறியப்படுகிறது. எனவே தான் கீரைகளை பச்சையாக சாப்பிடுவதை விட சமைத்து சாப்பிடுவதே நல்லது.

தக்காளி

தக்காளி

தக்காளியை பச்சையாக சாப்பிடுவதை விட சமைத்து சாப்பிடுவதே நல்லது. ஏனெனில் தக்காளியில் லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. தக்காளியை சமைக்கும் போது இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் இன்னும் அதிகரிக்கிறது. லைகோபைன் நாள்பட்ட நோய்களான இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே தக்காளியை சமைக்கும் போது, பல முக்கியமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட தடிமனான செல்சுவர் உடைக்கப்பட்டு, லைகோபைனை அதிகரிக்க செய்கிறது. அதுவும் தக்காளியை 30 நிமிடங்கள் சமைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின் சி 29% குறைந்தாலும், லைகோபைன் அளவானது 50%-த்திற்கும் அதிகமாக அதிகரிக்கிறது.

காளான்

காளான்

காளானில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை செல்களை சேதமடையாமல் பாதுகாத்து, சில நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இந்த காளானை சமைத்து சாப்பிடும் போது, அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மட்டுமின்றி, பொட்டாசியம், நியாசின் மற்றும் ஜிங்க் போன்றவை அதிகளவில் இருக்கும்.

கேரட்

கேரட்

பச்சையான கேரட்டுகளை விட சமைத்த கேரட்டில் பீட்டா-கரோட்டீன் அதிகமாக உள்ளது. பீட்டா-கரோட்டின் என்பது கரோட்டீனாய்டு என்னும் பொருளாகும். இது தான் உடலினுள் வைட்டமின் ஏ ஆக மாறி, எலும்பு வளர்ச்சியை ஆதரிப்பது, பார்வையை மேம்படுத்துவது, நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிப்பது போன்ற பலவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் சமைத்த கேரட்டின் தோலில் இருமடங்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. எனவே இனிமேல் கேரட்டை பச்சையாக சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிடுங்கள். முக்கியமாக கேரட்டை வேக வைத்த பின்னர் வெட்டுங்கள். இல்லாவிட்டால், அதில் உள்ள சத்துக்கள் நீரில் வெளியேறிவிடும். மேலும் கேரட்டை வறுத்து சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

குடைமிளகாய்

குடைமிளகாய்

குடைமிளகாயில் நேயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான கரோட்டினாய்டு, பீட்டா-கரோட்டின், பீட்டா-கிரிப்டோக்சாந்தின் மற்றும் லுடீன் போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளன. குடைமிளகாயை சமைக்கும் போது, அதன் செல் சுவர்கள் உடைத்தெறியப்பட்டு, உடலால் எளிதில் கரோட்டினாய்டுகளை உறிஞ்ச செய்கிறது. தக்காளியைப் போன்றே குடைமிளகாயை வேக வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின் சி நீரால் வெளியேற்றப்படலாம். எனவே இவற்றை வதக்கி சாப்பிடுங்கள்.

பச்சை பீன்ஸ்

பச்சை பீன்ஸ்

பச்சை பீன்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக அவற்றை பேக்கிங், கிரில்லிங் அல்லது எந்த வகையில் வேக வைக்கும் போதும் அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் நிறைந்துள்ளன. எனவே பச்சை பீன்ஸை அப்படியே சாப்பிடாமல், உங்களுக்கு பிடித்த வேறு எந்த வடிவிலும் சமைத்து சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vegetables That Are Most Nutritious When Cooked In Tamil

Here are some vegetables that are most nutritious when cooked. Read on to know more..
Story first published: Wednesday, January 18, 2023, 12:50 [IST]
Desktop Bottom Promotion