Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும்
Pottukadalai Kurma Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலையில் இட்லி, தோசை தான் பிரதானமான டிபனாக இருக்கும். அந்த இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார்தான் பிரதான சைடிஷாக இருக்கும். சற்று வித்தியாசமாக அதே சமயம் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு சைடிஷ் செய்ய விரும்புகிறீர்களா?

அப்படியானால் இந்த பொட்டுக்கடலை குருமாவை ஒருமுறை செய்து பாருங்கள். டக்குனு செய்யக்கூடிய இந்த குருமா மற்ற குருமாவைப் போல அல்லாமல் அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த பக்குவத்தில் குருமா செய்து கொடுத்தால் வீட்டில் எல்லோரும் 2 இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள், இதன் சுவை அந்த அளவிற்கு அபாரமாக இருக்கும்.
உங்களுக்கு சுவையான பொட்டுக்கடலை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொட்டுக்கடலை குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/4 ஸ்பூன் வெந்தயம்
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 2 பல் பூண்டு (பொடியாக நறுக்கியது)
- 3 பச்சை மிளகாய் (நீளமாக கீறியது)
- 1 நறுக்கிய தக்காளி
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 ஸ்பூன் சாம்பார் தூள்
- 1/4 ஸ்பூன் சோம்பு
- தேவையான அளவு தண்ணீர்
- சிறிது கொத்தமல்லி இலைகள்
- ஒரு கொத்து கறிவேப்பிலை
- 3 ஸ்பூன் பொட்டுக்கடலை
- 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
செய்முறை:
- ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, வெந்தயம் மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய பூண்டைச் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின்னர் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும். தக்காளி மென்மையாகவும் குழைந்தும் போகும் வரை வதக்கவும்.
- இந்த நிலையில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து பொடியாக அரைக்கவும்.
- பின்னர் அதில் துருவிய தேங்காய் மற்றும் சோம்பு சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைத்து ஒரு வழவழப்பான விழுதாக அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- பின்னர் மீண்டும் 1 கப் தண்ணீர் சேர்த்து குருமாவை நன்கு கொதிக்க விடவும்.
- இறுதியாக, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். சில நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிட்டு, அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான பொட்டுக்கடலை குருமா ரெடி!



Click it and Unblock the Notifications
