சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை

Chanakya Niti: ஆச்சார்யா சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு திறமையான பொருளாதார நிபுணர், இராஜதந்திரி மற்றும் அரசியல் ஞானி ஆவார். சாணக்கியர் தனது வாழ்க்கையில் மிகவும் கடினமான நேரங்களை எதிர்கொண்டார், ஆனால் அவர் ஒவ்வொரு சூழ்நிலையையும் உறுதியாக எதிர்கொண்டது மட்டுமல்லாமல், அந்தச் சூழ்நிலையை தனது பலமாக மாற்றினார். சாணக்கியர் எதிர்கொண்ட கடினமான சூழ்நிலைகள் அவரை ஒரு சிறந்த இராஜதந்திரியாக மாற்றியது. பல்வேறு துறைகளில் சாணக்கியர் சிறந்த அனுபவம் கொண்டவராக இருந்தார். எனவே அவரது அறிவுரைகள் எக்காலத்திற்கும் பொருத்தமானதாக இருக்கிறது.

Chanakya Niti Things Should Follow Before Making a Donation

தானம் செய்வது எப்போதும் நற்பலன்களையே தரும். கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள், நற்பண்பு கொண்டவர்கள், ஏழைகள் மீது இரக்கம் கொண்டவர்கள் மற்றும் நற்செயல்களின் பலனை விரும்புபவர்கள் எனப் பலரும் தானம் செய்கிறார்கள். ஆனால், சிலர் அளவுக்கு அதிகமாகவும், தகுதியற்றவர்களுக்கும் தானம் செய்வதன் மூலம் தங்களுக்குத் தாங்களே ஆபத்தை வரவழைத்துக்கொள்கிறார்கள்.

ஆச்சார்ய சாணக்கியர் கூறுவது போல, தானம் செய்வதிலும் கூட கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தவறான முறையிலோ அல்லது தவறான நபர்களுக்கோ செய்யப்படும் தானம் ஒருவரை வறுமையில் தள்ளலாம். எனவே, எப்போது தானம் செய்ய வேண்டும், எப்போது செய்யக்கூடாது என்பதை அறிவது மிகவும் அவசியம். தானம் செய்வது பற்றி சாணக்கியர் கூறும் அறிவுரைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தனக்கு வைத்துக்கொள்ளாமல் தானம் செய்வது

ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, நற்பண்பு கொண்டவர்கள் தங்களிடமுள்ள அனைத்தையும் பிறருக்குக் கொடுத்துவிடுவதால், எப்போதும் நிதி நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். தானம் செய்பவர்கள் பணக்காரராவார்கள் என்று பலர் நம்புகிறார்கள். எனவே, தானம் செய்யும்போது தங்கள் கையில் ஏதேனும் மீதம் இருக்கிறதா என்பதைக்கூட அவர்கள் கவனிப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் விரைவில் வறுமையில் தள்ளப்படுவார்கள்.

தகுதியற்றவர்களுக்கு தானம் செய்யக்கூடாது

தகுதியற்றவர்கள் என்பவர்கள் உங்களின் தானத்தைப் பெறுவதற்குரிய தகுதி இல்லாதவர்களே ஆவர். முறையாகப் பராமரிக்க முடியாத ஒருவரிடம் நீங்கள் ஒரு பசுவை நன்கொடையாக அளித்தால், அது நீண்டகாலம் உயிருடன் இருக்காது. அதேபோல, பணத்தை முறையாகக் கையாளத் தெரியாத ஒருவரிடம் ஒரு கோடி ரூபாயைக் கொடுத்தாலும், அவர்களால் அதைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. எனவே, தகுதியுள்ளவர்களை அடையாளம் கண்டு, அதன் பிறகு தானம் செய்யுங்கள்.

நன்றியுணர்வு இல்லாதவர்களுக்கு தானம் செய்யக்கூடாது

நன்றியற்றவர்கள் என்பவர்கள் ஒருவர் செய்த உதவியை நினைவில் வைத்துக் கொள்ளாதவர்களே ஆவர். உங்களிடமிருந்து தானம் பெற்றுக்கொண்டு அதை ஒருபோதும் நினைவில் கொள்ளாதவர்கள், உங்களால் அடைந்த நன்மையை மறந்தவர்கள் மற்றும் உங்களுக்குத் தீமை நினைப்பவர்கள், இத்தகையவர்களுக்கு நன்கொடை அளிப்பது என்பது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போன்றது.

அளவுக்கு மிஞ்சி தானம் செய்வது

சாணக்கியரின் கூற்றுப்படி, அளவுக்கு மிஞ்சிய தானம் காரணமாக அரசர்கள் கூட ஏழையாக மாறியதற்கு பல உதாரணங்கள் வரலாறுகளில் உள்ளது. அத்தகையவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகும்போது, ​​அவர்களுக்கு உதவ யாரும் முன்வருவதில்லை. எனவே, அளவுக்கு அதிகமாகத் தானம் செய்ய வேண்டாம் என்று ஆச்சாரிய சாணக்கியர் கூறுகிறார்.

முட்டாள்தனமாக தானம் செய்வது

சாணக்கியரின் கூற்றுப்படி, மக்கள் தங்கள் நிதி நிலையை நன்கு பரிசீலித்த பின்னரே தானம் செய்ய வேண்டும். முன்யோசனையின்றிச் செய்யப்படும் அளவுக்கு அதிகமான தானம் சிக்கலுக்கு வழிவகுக்கும். இத்தகைய தானம் ஒரு கட்டத்தில் அவர்களுக்குப் பொருளாதாரச் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, தானம் செய்வதற்கு முன் முட்டாள்தனத்தைக் கைவிட்டு, நன்கு சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

வெளிவேஷத்திற்கான தானம்

வெறும் வெளிவேஷத்திற்காகத் தானம் செய்பவர்களுக்கு அந்தத் தானத்தின் புண்ணியம் கிடைக்காது என்று சாணக்கியர் கூறுகிறார் மாறாக, அவர்கள் வறுமையை சந்திக்க நேரிடலாம். பல நேரங்களில், தங்களின் பண நெருக்கடியை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாத இவர்கள், தங்களிடம் உள்ள சொற்பப் பணத்தையும் தானமாக அளித்துவிட்டு, மற்ற விஷயங்களுக்காகவும் அதிகப் பணத்தைச் செலவிடுகிறார்கள். இத்தகைய சூழலில், அவர்கள் ஒரு நெருக்கடியான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

Story first published: Saturday, June 6, 2026, 8:51 [IST]
Desktop Bottom Promotion