சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்..

Posted By:

Potato Curry Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்தாலே, அதற்கு சைடு டிஷ்ஷாக பெரும்பாலும் உருளைக்கிழங்கை தான் செய்வீர்களா? அதுவும் அந்த உருளைக்கிழங்கை எப்போதும் ஒரே சுவையில் மசாலா, கிரேவி என்று தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சற்று வித்தியாசமான சுவையில் செய்து கொடுக்க கேட்கிறார்களா?

Potato Curry How To Make Urulai Kizhangu Curry For Chapati

அப்படியானால் கறிக்குழம்பு சுவையில் உருளைக்கிழங்கை கிரேவி செய்து கொடுங்கள். இந்த உருளைக்கிழங்கு கறி செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாகவே சாப்பிடுவார்கள். அதோடு அடிக்கடி செய்து கொடுக்குமாறும் சொல்வார்கள்.

உங்களுக்கு கறிக்குழம்பு சுவையில் உருளைக்கிழங்கு கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* பூண்டு - 10-15 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 2
* பச்சை மிளகாய் - 6
* புதினா - 10-15 இலைகள்
* கொத்தமல்லி - சிறிது
* வறுத்த வேர்க்கடலை - 4 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* அரைத்த மசாலா
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி தோலை நீக்கிவிட்டு, குக்கரில் போட்டு, கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, உப்பு சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, குக்கரில் உள்ள நீரில் சேர்த்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பூண்டு, இஞ்சி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, வறுத்த வேர்க்கடலை சேர்த்து முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் மற்றும சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, வேக வைத்த உருளைக்கிழங்கை நீருடன் அப்படியே சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரையும் சேர்த்து, உப்பு சுவை பார்த்து, மூடி வைத்து நன்கு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான உருளைக்கிழங்கு கறி தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, June 5, 2026, 20:19 [IST]
Desktop Bottom Promotion