Latest Updates
-
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம்
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
Anjappar Veg Biryani Recipe in Tamil: மனிதர்கள் உயிர்வாழ உணவு மிகவும் அவசியமானது. பெரும்பாலான உணவுகள் பசிக்காக இருந்தாலும், சில உணவுகள் ருசிக்காக விரும்பி சாப்பிடுவதாக இருக்கும். அப்படி ருசிக்காக அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சுவையான உணவுதான் பிரியாணி. பிரியாணி என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது ஒரு ஆத்மார்த்தமான உணர்வு.

பொதுவாக பிரியாணி என்றாலே அது சிக்கன் அல்லது மட்டன் பிரியாணிதான். சைவ உணவு உண்பவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, பன்னீர் பிரியாணி மற்றும் காளான் பிரியாணி. இப்படி ஏதாவது ஒரு வகையில் பிரியாணி மக்களுடன் பிரிக்க முடியாத பந்தத்தைக் கொண்டுள்ளது. வெஜ் பிரியாணிகளிலேயே பல வகைகள் உள்ளது. அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போவது தமிழ்நாட்டின் பேமஸ் உணவகமான அஞ்சப்பர் ஹோட்டல் ஸ்பெஷல் வெகு பிரியாணி ரெசிபியைத்தான்.
உங்களுக்கு சுவையான அஞ்சப்பர் ஸ்டைல் வெஜ் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பாஸ்மதி அரிசி - 1 கப்
- உருளைக்கிழங்கு - 3
- பச்சை பட்டாணி - அரை கப்
- பச்சை மிளகாய் - 2
- மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - 2 கப்
- நெய் - 2 ஸ்பூன் (அரிசியை வறுக்க)
தாளிக்க:
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்
- பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 1
- பிரியாணி இலை - 1
- பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
- தக்காளி - 1
அரைக்க:
- சின்ன வெங்காயம் - 10
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி - 1 இன்ச்
- பூண்டு - 5 பல்
- சோம்பு - 1/4 டீஸ்பூன்
அலங்கரிக்க:
- புதினா - ஒரு கைப்பிடி
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
செய்முறை:
- முதலில் பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- உருளைக்கிழங்கின் தோலை உரித்து சதுரமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நீளமான துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- பச்சை மிளகாயை நீளமாக கீறி வைத்துக் கொள்ளவும்.
- அரைக்க வேண்டிய பொருட்களை போதுமான தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைக்கவும்.
- இப்போது ஊறவைத்த அரிசியில் உள்ள நீரை முழுவதுமாக வடித்துவிடவும். ஒரு கடாயில் நெய்யைச் சூடாக்கி, அரிசி உடையாதவாறு 2 நிமிடங்கள் வறுக்கவும்.
- இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலையைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய்களைச் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- இப்போது அரைத்த விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் மிளகாய்த் தூளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இப்போது தக்காளி மற்றும் உப்பைச் சேர்த்து வதக்கவும். தக்காளி கூழ் பதம் வரும் வரை கலக்கவும்.
- இப்போது நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை சேர்த்து மூடி வைத்து வேக விடவும். நீங்கள் விரும்பினால் கேரட், பீன்ஸையும் சேர்க்கலாம்.
- பின்னர் தேவையான அளவு தண்ணீரை ஊற்றவும். பொடியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், ஊறவைத்த அரிசியைச் சேர்த்து குக்கரை மூடவும்.
- 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பிரஷர் தானாக வெளியேறியதும் மூடியைத் திறந்து சிறிது நெய் சேர்த்து கரண்டியை திருப்பி கிளறி விடவும்.
- அவ்வளவுதான் அட்டகாசமான அஞ்சப்பர் ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெடி!



Click it and Unblock the Notifications