Latest Updates
-
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம்
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது!
Sun Transit In Gemini On 15 June 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படிப்பட்ட சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். தற்போது சூரியன் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் ஜூன் 15 ஆம் தேதி ரிஷபத்தில் இருந்து மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த புதனின் ராசிக்கு சூரியன் செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். முக்கியமாக 4 ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.
அதுவும் இந்த ராசிக்காரர்கள் வருமானத்தில் நல்ல உயர்வை காணவுள்ளனர். இதன் மூலம் நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். இப்போது சூரிய பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் வருமானத்தில் உயர்வைக் காணும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் திறன் மேம்படும். அதோடு வருமானம் அதிகரிக்கும். இதன் மூலம் நிதி நிலைமை மேம்படும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அரசு தொடர்பான வேலைகளில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பொருள் வசதிகள் அதிகரிக்கும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். சமூகத்தில் மற்றும் பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு சிறப்பான செயல்திறனால் வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். முக்கியமான வேலைகளை முடிக்க முயற்சிக்கும் போது பேச்சில் சமநிலையை பேண வேண்டும். முக்கியமாக மன அழுத்தம் குறையும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நன்றாக இருக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். இதனால் நிதி நிலைமை வலுவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் நிலை வலுபெறும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



