1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?

Mercury Transit In Gemini On 29 May 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அடிக்கடி ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். மேலும் இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியுமாவார்.

Mercury Transit In Gemini On 29 May 2026 Effects On 12 Zodiac Signs

இப்படிப்பட்ட புதன் கிரகங்களிலேயே குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். இதுவரை புதன் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 29 ஆம் தேதி, அதாவது இன்று புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மிதுன ராசிக்கு புதன் சுமார் 1 வருடம் கழித்து நுழையவுள்ளார். இந்த மிதுன ராசியில் புதன் ஜூன் 22 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் கடக ராசிக்குள் நுழைவார். மிதுன ராசியில் புதன் நுழைந்ததால் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது.

புதன் மிதுன ராசிக்குள் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது புதன் சொந்த ராசிக்கு செல்வதால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனம் அமைதியிழந்து இருக்கும். எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகும். மனம் அதிகம் அலைப்பாயும். இருப்பினும், இக்காலத்தில் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். அதுவும் நல்ல நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பேச்சால் பல வேலைகளை முடிப்பீர்கள். வேலை மற்றும் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் ஒரு புதிய திட்டத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்பு கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

கடகம்

கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். முக்கியமாக இக்காலத்தில் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். இதன் மூலம் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமான வழிகள் திறக்கவும் வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கணிசமான பலன்களைப் பெறுவார்கள். வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் எதிர்பாராத லாபத்தையும், வெற்றியையும் பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எந்த வேலையை செய்தாலும், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாக உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். ஆயினும் நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தனுசு

தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

மகரம்

மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். முக்கியமாக இக்காலத்தில் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருந்தாலும், நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணப்பிரச்சனைகள் எதுவும் இருக்காது.

கும்பம்

கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இன்று முதல் அற்புதமாக இருக்கப் போகிறது. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் இனி வெற்றிகரமாக நடந்து முடிவடையும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். எந்த ஒரு முடிவையும் நன்கு சிந்தித்து எடுத்தால், வெற்றி பெறலாம்.

மீனம்

மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, May 29, 2026, 10:35 [IST]
Desktop Bottom Promotion