Latest Updates
-
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்!
1 வருடம் கழித்து உருவாகும் பத்ரா ராஜயோகம்: மே 29 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Mercury Transit Make Badra Rajyog 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர்.

தற்போது புதன் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் மே 29 ஆம் தேதி தனது சொந்த ராசியான மிதுன ராசியில் நுழையவுள்ளார். இந்த மிதுன ராசியில் புதன் நுழைவதால் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, புதன் தனது சொந்த ராசியான மிதுனம், கன்னி ராசியிலோ அல்லது உச்ச ராசியிலோ இருந்து, 1, 4, 7, 10 ஆகிய கேந்திர வீட்டில் இருந்தால் பத்ரா ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகமானது பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றாகும்.
மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் மங்களகரமான பத்ரா ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே காணப்படும். இருப்பினும் சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு புதன் சென்று பத்ரா ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் பணியிடத்தில் தங்களின் வேலைக்காக நல்ல பாராட்டைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தை தரும் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். மேலும் இக்காலத்தில் தகவல் தொடர்பு திறனும், முடிவெடுக்கும் திறனும் மேம்படும். பேச்சு மற்றவர்களை கவரும் வகையில் இருக்கும். புதிய நிதி ஆதாயங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ரா ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தை விரிவாக்கும் வாய்ப்பை பெறுவார்கள். தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எழுத்து, ஊடகம், மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ரா ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இதுவரை வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, உறவு வலுவடையும். கூட்டு தொழில் செய்வதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். இதன் மூலம் எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் ஒரு பெரிய திட்டத்தை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கலாம்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ரா ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வீடு, வாகனம், வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடனான உறவு மேம்படும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் இதுவரை சந்தித்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மன அழுத்தம் குறைந்து மன அமைதி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



