Latest Updates
-
ஜூலையில் 3 முறை உருவாகும் யுதி யோகம்: இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... -
சனி-கேது உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் வீட்டில் அடிக்கடி பல்லியை பார்ப்பது நல்லதா? கெட்டதா? சாஸ்திரம் சொல்லும் உண்மை என்ன? -
ஆறு விரல்களை கொண்டவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் தெரியுமா? -
5 தக்காளி இருந்தா இந்த செட்டிநாடு தக்காளி கொத்தமல்லி சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
தலைமுடி ஆரோக்கியமா, அடர்த்தியா வளரணுமா? அப்ப கிச்சனில் உள்ள இந்த நேச்சுரல் ஷாம்புக்களை ட்ரை பண்ணுங்க.. -
30 வயதுக்கு பின் கோடீஸ்வரராகும் யோகமுள்ள 4 நட்சத்திரங்கள் - நீங்க பிறந்த நட்சத்திரம் இதுல இருக்கா? -
தினமும் காபி, டீ-க்கு பதிலா.. ஈவ்னிங் டைம்-ல கேரட் பால் செஞ்சு குடிங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
உங்களை கொசுக்கள் அதிகம் கடிப்பதற்கு காரணம் இதுதானாம் - ஆய்வு சொல்லும் அதிர்ச்சி செய்தி - ஷாக் ஆகாதீங்க -
ஜூலை இறுதியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: மே 29 முதல் இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
Badra Rajyog 2026: வேத ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, தனது நிலைகளின் மூலமும், மற்ற கிரகங்களுடன் சேர்ந்தும் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார்.

இந்த புதன் ஒரு ராசியில் 15-21 நாட்கள் வரை பயணிப்பார். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட் புதன் மே 29 ஆம் தேதி தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த பெயர்ச்சியால் பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது ஜூன் 22 ஆம் தேதி வரை நீடித்திருக்கும்.
இந்த சக்தி வாய்ந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். குறிப்பாக 5 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் தொழிலில் புதிய சாதனைகளையும், முன்னேற்றத்தையும் காண்பதோடு, நிதி நிலையில் நல்ல உயர்வையும் காணவுள்ளனர். இப்போது புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும், புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதன் மூலமாக இந்த ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் கிடைப்பதோடு, குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களும் ஏற்படும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். இக்காலத்தில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும். இதன் மூலம் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். அவரின் உதவியால் சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்கள் நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ரா ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வேலையை தொடங்க நினைத்தால் இக்காலம் சிறப்பாக இருக்கும். ஏற்கனவே தொழில் செய்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமையும். திருமணமான தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ரா ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகளுடனான உறவு வலுவடையும். அவர்களிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். காதல் வாழ்க்கையில் துணையுடன் அன்பும், புரிதலும் அதிகரிக்கும். மொத்தத்தில் இக்காலத்தில் ஒவ்வொரு துறையிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




