Latest Updates
-
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்!
2 ஆண்டுகள் கழித்து செவ்வாய் உருவாக்கிய ருச்சக ராஜயோகம்: ஜூன் 21 வரை இந்த 3 ராசிக்கு பணமும்,வெற்றியும் குவியும்
Ruchak Rajyog In May 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலஇடைவெளியில் ராசியை மாற்றி, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஜோதிடத்தில் உள்ள 9 கிரகங்களில் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியும் கூட.

இப்படிப்பட்ட செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார் மற்றும் இவர் ஒரு சுழற்சியை முடிக்க 2 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் இந்த செவ்வாய் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் மே 11 ஆம் தேதி நுழைந்தார். இந்த மேஷ ராசியில் ஜூன் 21 ஆம் தேதி வரை இருப்பார். மேஷ ராசியில் செவ்வாய் நுழைந்ததால், சக்தி வாய்ந்த பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான ருச்சக ராஜயோகம் உருவாகியுள்ளது.
ஜோதிடத்தின் படி, இந்த யோகமானது தலைமைத்துவ திறன், தன்னம்பிக்கை, தைரியம், நிதி முன்னேற்றம் , மோதல்களின் வெற்றி, ஆகியவற்றைத் தரக்கூடியதாக கருதப்படுகிறது. பொதுவாக இந்த யோகம் செவ்வாய் தனது சொந்த ராசிகளான மேஷம் அல்லது விருச்சிக ராசிகளிலோ அல்லது உச்சம் பெற்ற ராசியான மகர ராசியிலோ இருந்தால் உருவாகும்.
இப்படிப்பட்ட யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தை மற்றும் அபரிமிதமான நன்மைகளைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று ருச்சக ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும், செயல்திறனால் நல்ல பாராட்டும் கிடைக்கும்.
எடுக்கும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் தொழிலில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை, முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று ருச்சக ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை இருமடங்காக அதிகரித்திருக்கும். தடைபட்ட வேலைகளை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும்.
வெளிநாட்டில் படிக்க விரும்பினாலோ அல்லது வேலை செய்ய நினைத்தாலோ, இக்காலத்தில் அதற்கான நல்ல செய்தியைப் பெற வாய்ப்புள்ளது. போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் இக்காலத்தில் கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று ருச்சக ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைப்பதோடு, நிதி நிலைமையும் வலுவடையும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை தொந்தரவு செய்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைத்து, உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



