Latest Updates
-
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம்
புதன்-சுக்கிரனால் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: மே 29 முதல் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Lakshmi Narayan Rajyog On 29 May 2026: ஜோதிடத்தின் படி, மே மாதத்தின் இறுதி வாரம் சிறப்பானது. ஏனெனில் இம்மாத இறுதியில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும், அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் ஒன்றிணைந்து லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது மிகவும் மங்களகரமானது. அதுவும் இந்த யோகம் மிதுன ராசியில் மே 29 ஆம் தேதி உருவாகவுள்ளது.

வேத நாட்காட்டியின் படி, மிதுன ராசிக்கு அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் மே 14 ஆம் தேதி நுழைந்தார். இந்நிலையில் மே 29 ஆம் தேதி புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியான புதன் மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இதன் விளைவாக மிதுன ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நல்ல நிதி முன்னேற்றத்தையும், தொழிலில் வளர்ச்சியையும் காணவுள்ளனர். இப்போது லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் புதன்-சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஏராளமான பலன்களைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் புதன்-சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். உறவுகளில் இருந்த கசப்புகள் நீங்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் புதன்-சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஒரு புதிய திசை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் புதன்-சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக தொடங்கி முடிவடையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். புத்திசாலித்தனத்தால் பல பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


