Latest Updates
-
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம்
புதன் சொந்த ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்கு பண நெருக்கடியும், மன குழப்பமும் அதிகரிக்க போகுது.. உஷார்..
Mercury Transit In Gemini 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் அவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட புதன் நவகிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். தற்போது புதன் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் மே 29 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மிதுன ராசியில் ஜூன் 22 ஆம் தேதி வரை இருப்பார். முக்கியமாக இந்த ராசியில் புதன் நுழையும் போது பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது. புதனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதுவும் 3 ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக நிதி விஷயங்களில், மன ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது புதன் பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். மனக் குழப்பம் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். மனதை தெளிவாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் உணர்ச்சி ரீதியான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் எந்த ஒரு அபாயகரமான முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும். வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படக்கூடும். எதிலும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். முக்கியமாக பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். கடினமான சூழ்நிலைகளில் அமைதியாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இக்காலத்தில் உங்களின் வார்த்தைகள் தவறாக எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்புள்ளதால், பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். உறவுகளைப் பொறுத்தவரை, தவறான புரிதல்கள் உறவுகளை சேதப்படுத்தும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலதிபர்கள் இழப்புக்களை சந்திக்கும் வாய்ப்புள்ளதால், சற்று உஷாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


