Latest Updates
-
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்!
ரிஷப ராசியில் உதயமாகும் புதன்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியும்..
Mercury Rise In Taurus On 23 May 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவது மட்டுமின்றி, சில கிரகங்கள் அஸ்தமனமாகி உதயமாகவும் செய்யும். அப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன்.

இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இதுவரை புதன் அஸ்தமன நிலையில் பலவீனமாக இருந்தார். இந்நிலையில் மே 23 ஆம் தேதி அதாவது, இன்று புதன் சுக்கிரனின் ரிஷப ராசியில் உதயமாகவுள்ளார். புதன் உதயமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.
குறிப்பாக இதுவரை தொழிலில் பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு, வேலையில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் காணவுள்ளனர். மேலும் பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பார்கள். இப்போது புதன் உதயமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் புதன் உதயமாவதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலைமை மேம்படும். குடும்ப சூழல் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். மற்றவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். மன அமைதி கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். நிதி நிலைமை வலுவடையும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணப் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தோஷமும், நிம்மதியும் அதிகரிக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் இனி கிடைக்கும். எந்த வேலையை செய்தாலும், அதை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வேகமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். மனநிலை நேர்மறை எண்ணங்கள் நிறைந்து இருக்கும். இதனால் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். செலவுகள் குறைந்து, பணம் அதிகம் சேரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு, மன நிம்மதியும் கிடைக்கும். உறவுகள் வலுவடையும். தம்பதிகளிடையே அன்பும், புரிதலும் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல் நலம் மேம்படும்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதன் மூலம் இந்த ராசிக்காரர்கள் நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். வேலைகளில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உறவுகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, உறவுகள் வலுவடையும். பேச்சால் முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




