Latest Updates
-
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மே 20 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் அதிகரிக்கப்போகுது!
Venus Nakshatra Transit On 20 May 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதி மற்றும் இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். அதுமட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். தற்போது சுக்கிரன் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 20 ஆம் தேதி சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி ராகு.
சுக்கிரன் ராகுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். முக்கியமாக சில ராசிக்காரர்கள் இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு, நிதி ரீதியாக நல்ல முன்னேற்றமும் ஏற்படும். இப்போது மே 20 ஆம் தேதி நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். பல நல்ல செய்திகள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கை குறித்த பார்வை மாறும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சுக்கிரனின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், பணமும், வெற்றியும் குவியும். கடினமாக உழைத்தால் அதற்கான பலன் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
கும்பம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். திரென்று நிதி ஆதாயம் கிடைக்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். வேலைகளில் வெற்றி கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். நேர்மறையான எண்ணங்களால் நிரம்பியிருப்பீர்கள். வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு நடந்தால், வாழ்க்கை எதிர்பாராத அளவில் சிறப்பாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



