Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..!
Sun Venus Transit On 08 June 2026: ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமின்றி, இம்மாதத்தில் அபூர்மாக சில கிரகங்கள் ஒரே நாளில் தனது நிலையை மாற்றுகின்றன. இப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் அதன் தாக்கம் தெரியும்.

அதுவும் இந்த மாதத்தில் சூரியனும், சுக்கிரனும் அரிதாக ஒரே நாளில் நிலையை மாற்றவுள்ளன. இந்த மாற்றத்தின் போது சூரியன் மிருகசீரிட நட்சத்திரத்திற்கும், சுக்கிரன் கடக ராசிக்கும் செல்லவுள்ளனர். இந்த நிகழ்வானது ஜூன் 08 ஆம் தேதி நிகழவுள்ளது. சுக்கிரன் இந்த கடக ராசியில் ஜூலை 04 ஆம் தேதி வரை இருப்பார்.
இந்த அரிய கிரகங்களின் பெயர்ச்சிகளால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கம் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகிறார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். பணியிடத்தில் செயல்திறனால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். சமூகத்தில் மற்றும் பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். படைப்பாற்றல் சிறப்பாக இருக்கும். இதன் மூலம் தொழிலில் பெரிய அளவில் லாபத்தைக் காண்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். சுக்கிரனின் அருளால் நல்ல பொருள் இன்பங்களைப் பெற்று, ஆடம்பர வாழ்க்கையை வாழ்வீர்கள்.
சிம்மம்
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய வருமான வழிகள் திறக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆடம்பர பொருட்களுக்கு அதிக செலவு செய்வீர்கள். இருப்பினும் நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மொத்தத்தில் தொழிலில் குறிப்பிடத்தக்க வெற்றியையும், நல்ல லாபத்தையும் காண்பீர்கள்.
கன்னி
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். நீண்ட காலமாக போட்டிருந்த திட்டங்கள் வெற்றிகரமாக நடக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலை மற்றும் தொழில் இரண்டிலும் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் காண்பீர்கள்.
பணிபுரிபவர்களுக்கு உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சமூக வட்டம் விரிவடையும். செல்வாக்குமிக்க நபர்களின் நட்பு கிடைக்கும். இதனால் மூலம் எதிர்காலத்தில் நல்ல ஆதாயத்தைப் பெறக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


